Wednesday 13 September 2017

ஈழவர்

ஈழவர்

பலரும் கேரளாவில் தற்போது இருக்கும் ஈழவர் சாதி தமிழர் என்கின்றனர்.
நான் அவ்வாறு கூறமாட்டேன்.
அவர்கள் தமிழ் வம்சாவழி அவ்வளவுதான்.

நாம் விடுதலைக்காக போராடும்போது அவர்கள் மலையாளிகள் பக்கம்தான் சேர்வார்கள்.

இதை கவிமணி அவர்கள் முன்பே கூறி அறுபது ஆண்டுகள் முன்பு மண்மீட்பு போராட்டமும் இனவுணர்வும் உச்சத்தில் இருந்தபோதும் கண்கூடாகக் கண்டோம்.

கேரள மக்கட்தொகையில் 21% வரை இருக்கும் இவர்கள் தற்போது தமிழ் பேசும் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கிறார்கள்.
தமிழையும் அறவே மறந்துவிட்டனர்.
  அவர்களில் சிறிதளவு கூட தமிழ் தாய்நிலத்தில் வாழ்வதில்லை.
எனவே ஈழவர்கள் இனத்தால் தமிழர்தான் என்று புரியவைப்பதும் நமது இனத்திற்குள் சேர்த்துக்கொள்வதும் மிகவும் கடினம்.

  கேரளாவில் நாயர் நம்பூதிரி தவிர பிறர் தமிழினத்தவர் என்றாலும், அது நடைமுறையில் அவ்வாறு இல்லை.
தமிழை அறவே மறந்த தமிழினத்தாரில் நாடார்கள் மட்டுமே விதிவிலக்கு.
மலையாளம் பேசினாலும் தம்மை மலையாளிகளாக அவர்கள் கருதுவதில்லை.
அதற்கு காரணம் அவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருப்பதும் தமிழகத்திற்கு அருகில் வாழ்வதுமே.

நான் சொல்வது சரிதானா என்பதை வருங்காலம் சொல்லும்.

No comments:

Post a Comment