Wednesday 13 September 2017

குமரிக்கண்டம் இருக்க கவலை ஏன்?

13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கேட்பாரற்று கிடக்கிறது.
அழிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரும்பக் கிடைத்தன.

செய்தி:
கண்மாய்க்குள் சிதறி கிடக்குது 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் : பாண்டியர் காலத்தவை என ஆய்வில் தகவல்
10.09.2017 தினகரன்

எத்தனை சான்றுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
நம்மிடம் ஒரு கருவூலம் இருக்கிறது.
ஒரு கண்டமே இருக்கிறது.

தமிழர்நாடு தமிழரின் கட்டுப்பாட்டில் வந்ததும் மக்கள் நிலை ஓரளவு மேம்பட்ட பிறகு நாம் கடலில் இறங்கி குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும்.
நாம் உலகின் முன்தோன்றிய மூத்தகுடி, நமது நாகரீகமே முதல் நாகரீகம் என்பதை நிறுவவேண்டும்.

அதுவரை தமிழர் பழமைக்கான சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் இனவிடுதலைக்காகப் போராடவேண்டும்.

1 comment:

  1. குமரிக் கண்டம் என்பதே தமிழர்கள் தம ஆதி நிலமான இந்தியக் கண்டத்தை உரிமைக் கொண்டாடக் கூடாது என்கிறதற்குத் தான்.

    ReplyDelete