Tuesday, 4 August 2026
விசில் ஆட்சி 04082026
விசில் ஆட்சி
அதிர்ச்சிகளும் ஆறுதல்களும்
04.08.2026
* திருவள்ளூர் மீனவர்களுக்கு இழப்பீடு அளிக்காமல் எம்&டி விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்த மீன்வளத்துறை அமைச்சரை துரத்தி துரத்தி கேள்வி கேட்ட பத்திரிகையாளர் அமைச்சர் நிமிர்ந்து பார்க்காமல் ஓடினார்
* மாணவர்களை கிரவுன்டில் கூட்டி tvk tvk என்று கத்தவைத்து வீடியோ எடுத்த காரைக்குடி mla
* தமிழக அரசு சமூக வலை கண்காணிப்பு (fact check unit) குழு பெயர்மாற்றப்பட்டு (iid) அதன் தலைவராக ரசிகர் மன்ற தலைவர் குரு தலைவா என்பவர் நியமனம்
* பனவிளை கிராமத்து ஊர் பொதுக் கிணற்றை ஆக்கிரமித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி குடும்பம்
* நாடு முழுவதும் நீட் போராட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதி உத்தரவு அதை செயல்படுத்திவிட்டு முதல்வர் விஜய் தாயுள்ளத்தோடு செய்ததாக ராஜ்மோகன் பேட்டி
* பல்லடம் விளைந்த நிலத்தில் ஜேசிபி கொண்டு idpl குழாய் பதிப்பு, 340 கிமீ நீளம் கர்நாடகா செல்கிறது, போராடிய விவசாயிகளை வலுக்கட்டாயமாக அகற்றிய போலீஸ்
* பால்வள அமைச்சரான நாமக்கல் c.விஜயலட்சுமி சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து மூடி, பிறகு மாதாமாதம் லஞ்சம் பெற்றதாக விகடன்
* இளையான்குடி யில் மெத்தப்பெட்டைன் போதைப்பொருள் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிப்பு 9 பேர் கைது
* ஜூலை மாத கரன்ட் பில் 9.5 லட்சம் பேருக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளது என்ற கேள்விக்கு திமுக ஆட்சி ஜூலை மாதத்தில் 11 லட்சம் பேருக்கு இப்படி வந்தது என்று சிடி நிர்மல் குமார் பதில்
* பல்லடம் அருகே வயல்வெளிகள் மத்தியில் குழாய் பதிப்பு பொதுமக்கள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக அகற்றிய போலீஸ்
* தென்காசி ஆலங்குளம் அருகே பாதுப்பில்லாத 60,000 நெல்மூட்டைகள் எரிந்து சாம்பல் எந்த அமைச்சரும் ஆய்வு செய்யவில்லை
* வண்டல் மண் கொள்ளை வீரபாண்டி யின் தவெக mla பழனிவேல்
* மகளிர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி 10ம் வகுப்பு கூட தேறாமல் டாக்டர் bsc என சான்றிதழ், தக அறி உரி சட்டத்தில் கேட்டும் கல்வித் தகுதி பற்றி பதில் இல்லை
* ராஜகுரு எனும் தவெக நிர்வாகி அமைச்சர் ஜெகதீஸ்வரி தன்னை ஜட்டியோடு சிறையில் வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டும் ஆடியோவை வெளியிட்டார்
* the commune தவெக பிரஷாந்த் கிஷோர் உட்பட சமூக வலை மாபியாக்களுக்கு 800 கோடி வரை செலவு செய்துள்ளதாக கட்டுரை
* சேலம் ஒதியத்தூர் அம்பேத்கர் சிலை திறக்க முடியாத சூழல்
* sbi வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த பெண் அழகிரி யின் மகள் என்பதால் காவல்நிலைய சொந்த ஜாமீனில் விடுவிப்பு
* தமிழகத்தின் திட்டங்கள் ஆந்திராவுக்கு வருகிறது தொடர்ந்து இதைச் செய்யுங்கள் என ஆந்திர அமைச்சர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு பாராளுமன்றத்தில் கிண்டல்
* காவிரி ஆணையம் 15 நாட்களுக்குள் தமிழகத்திற்கு 4tmc திறந்துவிட உத்தரவிட்டும் அதை மறுத்து கர்நாடகா மேல்முறையீடு தவெக அரசு வேடிக்கை
* மாணவர்கள் மாணவிகளிடம் பேசினாலே போக்சோ பாயும் என்று பேசிய பேசிய சிங்கப்பெண் ssi சுமதி அப்படையிலிருந்து நீக்கம்
* தரமற்ற உணவு வழங்கப்பட்டு 100 துப்புரவு தொழிலாளர்கள் மருத்துவமனை அனுமதி
* சரியான கொள்முதல் விலை கொடுக்க முடியாமல் ஆவின் திணறல் பால் வரத்து குறைவு விற்பனை பாதிப்பு
* உயர்சிறப்பு மருத்துவ படிப்பு 151 சீட்களை நிரப்பாமல் வைத்திருந்து மத்திய அரசிடம் தாரைவார்த்த திமுக தவெக அரசுகள் நீதிமன்றத்திலும் சரியாக வாதாடத் தெரியாமல் கோட்டைவிட்டனர்
* சீமான் திமுக விடம் 100 கோடி வாங்கியதாக அவதூறு பரப்பிய தவெக ஆதரவாளர் பிஸ்மி என்பவரை வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிய நாதக வழக்கறிஞர் பாசறை
* கேரள காங்கிரஸ் மத்திய அரசை புதிய அணை கட்ட வலியுறுத்தி தீர்மானம் தமிழக காங்கிரஸ் ராகுல் பிரியங்கா காந்தி கைதை கண்டித்து போராடிக் கொண்டிருந்தது
* ராமேஸ்வரம் மீனவர் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது தங்கச்சி மடத்தில் உறவினர்கள் மறியல்
* ஜோதிடர் சொன்னதால் தலைமைச் செயலகத்திலிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு மாறிய விஜய், 11 கோடி செலவு
* நீட் தேர முடியாதவர்கள் வக்கீல் படிக்கவும் carpenter, plumber ஆகுமாறும் பேசிய ctr நிர்மல் குமார்
* சோளிங்கர் mla கபில் நியூஸ் தமிழ் அரங்கநாதன் உட்பட பத்திரிக்கையாளர்களை முட்டியை முறுக்கி தாக்குதல்
* கங்கைகொண்டான் விக்ரம் சோலார் திட்டம் சென்ற ஆட்சியில் கையெழுத்தானதை தாம் கொண்டுவந்தது போலவும் 2607 பேர் வேலைவாய்ப்பு என்றும் முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு
* எழும்பூர் 99 வது வார்டில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் ரிப்பன் வெட்டி திறந்த ராஜ்மோகன்
* 5 வாரத்தில் 4 காவல் மரணங்கள்
*ஆளுநர் உத்தரவு படி முதன்முதலாக மனோன்மணீயம் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது இதை எதிர்த்து டிஜிபி மகேஸ்குமார் அகர்வால் விழாவை புறக்கணித்தார்
* தவெக மா.செ விஜய மோகன் பல கட்சிப் பெண்களை பதவி ஆசை காட்டி பாலியல் தேவைக்கு அழைப்பதாக பெண் புகார் FIR போடப்பட்டது தன் 14 வயது மகள் மீது ஆசைப்படுவதாக சாட்டையில் பேட்டி
* அன்புமணிக்கு மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற அவசியமில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதில்
* அனிதா மரணத்துக்கு பிறகு நீட் கோச்சிங் சென்டர் ஆரம்பித்து பணம் சம்பாதித்தவர் விஜய் வேட்பு மனுவில் கோகிலாம்பாள் கல்வி நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு அம்பலம்
* அரசு வழக்கறிஞர் பதவிக்கு 12 லட்சம் பேரம் பேசும் குமரி தவெக நிர்வாகி அனிஷ் ஆடியோ லீக் கட்சியிலிருந்து நீக்கம்
* மத்திய மாநில ஒத்திசைவு (concurrent) பட்டியலுக்கு கல்வியை மாற்றுவோம் என ராஜ்மோகன் பேட்டி ஏற்கனவே அப்படித்தான் உள்ளது
* பாடப் புத்தகங்களை படங்கள் நிறைந்த QR மூலம் video வருவது போன்று (திரைப்)பட புத்தமாக மாற்றுவோம் என ராஜ்மோகன்
* கனிமவளத்துறை அமைச்சர் உறவினருக்காக புதிய கல்குவாரி அமையக்கூடாது என்று கீழவளவு கிராம மக்கள் காவல்நிலையம் முன் போராட்டம்
* புதிய குவாரியை எதிர்க்கும் சிவகங்கை ஜெயங்கொண்டநிலை வழக்கறிஞர் வேலாயுதம் கார் நடுரோட்டில் நிறுத்தி அடித்த குவாரி மாபியா பொதுமக்கள் கூடியதால் பிழைத்தனர்
* பல ஆண்டுகளாக த.நா பாடநூல் கழகம் புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ள நிலையில் முதன்முதலில் தானே செய்துள்ளதாக லயோலா மணி
* தென்காசி தவெக செயற்குழு ராபின் பெண்களை தவறாக நடத்துவதாக கட்சி நிர்வாகி செல்வி dsp அலுவலகம் புகார்
* வந்தே மாதரம் தேசிய கீதம் மூன்றாவதாக தமழ்த்தாய் வாழ்த்து
* தவெக அரசு கரூரில் வழங்கிய அரசு பணியை ரத்து செய்தது. பொதுமக்களின் வேலைவாய்ப்பை தூக்கிவீச அரசு அதிகாரத்துக்கு உரிமையில்லை என்ற வரிகள்.
* cjp தமிழ்நாடு கிளை என போலியான கணக்கு மூலம் ராஜ்மோகன் க்கு நன்றி அந்த கணக்கு cjp க்கு 5 ஆண்டுகள் முந்தையது பெயர் மாற்றப்பட்டது
* டாஸ்மாக் லிருந்து பார் 100 மீட்டர் வரை தள்ளி இருக்கலாம் என விதி தளர்த்தல்
* கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு 8 ஊழியர்கள் சஸ்பென்ட்
*சேலத்தில் பைக்கை திருடிய ரோந்து போலீஸ் இருவர் சிசிடிவி யில் மாட்டியதும் ஒத்திகை என மழுப்பல்
* திருச்சி சிறப்பு முகாம் 3 ஈழத் தமிழ் பெண்கள் 12 நாட்கள் உண்ணாவிரதம்
* கர்நாடகா போய் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் சம்மதம், தேவையற்ற நடவடிக்கை என்று அன்புமணி விமர்சனம்
*அத்திப்பள்ளி மறியல் கர்நாடகாவில் பதற்றம் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்திவைப்பு
* ஜூன் மாத 90 tmc ஜூலை மாத 30tmc காவிரி வரவில்லை குருவை சாகுபடி முற்றிலும் பாதிப்பு
* ஸ்ரீவைகுண்டம் கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி உடைமைகளை சூறையாடிய தவெக நிர்வாகி பாலமுருகன்
* 3 மாதங்களில் 20881 கோடி கடன் அதில் வட்டிச் செலவு 14618 கோடி
*டெல்லி போராட்டம் வெற்றிபெற்று முடிந்த சில நொடிகளில் சென்னை போராட்ட களத்தில் போய் ஆதரவு தெரிவித்த ராஜ்மோகன்
* நீட் க்கு எதிரான மாணவர் போராட்ட களத்தில் கலந்துகொள்ள சென்ற ராஜ்மோகனை மெரினாவை மூடியதாக முழக்கமிட்ட மாணவர்கள்
* நீட் எதிரான மாணவர் கூட்டத்தில் நீட் ஆதரவாளர் தவெக ஸனம் ஷெட்டி போய் இங்கே அரசியல் பேசுவது தவறு என்று கூறியதால் கூச்சல் எழுந்து வெளியேற்றப் பட்டார் முந்தைய நாள் தியேட்டரில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்
* நீட் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக கோவை திருச்சி திருப்பூர் எழும்பூர் தமுக்கம் போராடிய DYFI, SFI மாணவர்களை பலவந்தமாக அகற்றிய காவல்துறை
* ஆழ்வார்குறிச்சி குழந்தை இதய அறுவை சிகிச்சை தவெக அமைச்சர் நடத்தித் தந்ததாக பொய்யான வீடியோ
* ஜனநாயகன் படம் பார்க்க முதல்வர் அமைச்சர்கள் சென்றுவிட்டதால் வெறிச்சோடிய தலைமைச் செயலகம்
* ஜூன் 12 திறக்க வேண்டிய காவிரி திறக்கவில்லை நீர்வளத்துறை அமைச்சர் ஜனநாயகன் ரிலீஸ் வேலையில் பிசி
*தூத்துக்குடி போலீஸ் அடித்து மருத்துவமனையில் சேர்த்த இளைஞர் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி இறப்பு
*பெங்களூர் குடிநீர் தேவை அதனால் தண்ணீர் திறக்க முடியாது காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகா மறுப்பு
*காசிமேடு மீனவர் மறியல் பற்றி கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்
*பணி நிரந்தரம் கோரி சென்னையில் அரசு நர்சுகள் போராட்டம்
* மது விற்பனை தனியார் மயமாக்க ஆலோசனை பொள்ளாச்சியில் அமைச்சர் விக்னேஷ்
* பரந்தூர் திட்டத்தை தவெக எதிர்த்து மத்தியில் முறையிட்டுள்ளதாக கூறியது பொய் திமுக அமைச்சர் வில்சன் கடிதம் மூலம் கேட்டதற்கு அதிகாரப்பூர்வ பதில்
*துணைவேந்தர் நியமன கமிட்டி 3 பிரதிநிதிகளை 5 என்றாக்கி மத்திய அரசுக்கு அதிக அதிகாரம்
* நிறுத்திவைக்கப்பட்ட 8வழிச் சாலையை தொடங்க அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை
* கடையம் அருகே 10டன் கழிவுகளை கொட்டிய கேரள லாரிகள்
*தமிழ்நாடு நாள் என இரண்டு தினங்கள் அறிவிப்பு
* சஸ்த்ரா பல்கலை ஆக்கிரமித்துள்ள 20ஏக்கர் 20 ஆண்டுகளாக இழுத்தடிப்பு வெறும் 2 ஏக்கர் குடியிருப்பை இடித்து அகற்றம்
* தமிழ்நாடு மருத்துப் பணிகள் கழகம் மூலம் தங்கமோதிரம் வாங்கப்படும் என அறிவிப்பு
அதே நேரத்தில் மருத்துவ துறைக்கு நிதி வழங்க nalam tn மூலம் பொதுமக்களிடம் கோரிக்கை
* ஜல் ஜீவன் 2.0 மத்திய அரசின் திட்டத்தில் கையெழுத்து
*விஜயுடன் போட்டோ எடுக்கவைப்பதாக இளம்பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்த வாய்ஸ் ஆப் சரத் ஆடியோ லீக் கமிசனரிடம் புகார்
ஏற்கனவே கள்ளநோட்டு மனைவியை கொடுமைப் படுத்திய பின்னணி உடையவர்
*இருக்கன்துறை சுடுகாடு டெண்டர் குளறுபடி அறப்போர் இயக்க புகாரால் ரத்து
* கள்ளக்குறிச்சி 45 ஆண்டு குடியிருப்பு இடித்து அகற்றம்
* 62 நாட்களில் 10 அரசு பள்ளிகள் மூடல் 15 cbse பள்ளிகள் திறப்பு
* தமிழகத்தில் ரூட் மாபியா பரப்பிய பரப்பிய தவெக போலிச் சாதனைகளை தோலுரித்த தி இந்து போல வடக்கே பரப்பிய வதந்திகளை தோலுரித்த இந்தியா டுடே டிவி
* பழநி கோவில் சொத்து முறைகேடு அமைச்சரை விமர்சித்த வினோத் சூர்யா கைது கோர்ட் கண்டனம்
*பதவி தருவதாக 26 லட்சம் வாங்கினார்கள் தவெக நிர்வாகி ஷர்மிளா பாலாஜி மற்றும் கணவர் புகார்
*கூடங்குளம் அணுவுலை பற்றிய ரகசிய தகவல்கள் இணையத்தில் கசிவு
*1600 கோடி ஊழலை வெளிக்கொணர்ந்த சகாயம் ஐஏஎஸ் ஏன் போலீஸ் பாதுகாப்பு இல்லை என அரசுக்கு கோர்ட் கேள்வி
* உணவகத்துடன் கூடிய மதுக்கூடம் ரெஸ்ட்ரோபார் களை ஆரம்பிக்க டாஸ்மாக் முடிவு
* குளித்தலை தவெக ஒ.செ ரமேஷ் பாலியல் தொந்தரவு பொதுமக்களே அடித்து போலீசில் ஒப்படைப்பு
* எதிர்கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி வாங்கி 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்
* பொள்ளாச்சி பல பெண்களை கடன் கொடுத்து தவறான வழியில் இழுத்த தவெக நிர்வாகி
* பொதுமக்கள் சென்று சந்திக்க முடியாத முதல்வர் சினிமாக்கார்ர்கள் மட்டும் பலர் சந்திப்பு புகைப்படங்கள்
* மாம்பாக்கம் தவெக ஊராட்சித் தலைவர் ஒப்பந்தக்காரரிடர் 1.3 லட்சம் வாங்கும் வீடியோ வைரல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்
* விஜயை விமர்சித்த மாற்றுத் திறனாளி கைநு செய்து அலைக்கழிப்பு கோர்ட் தனது ஜாமீனில் விட்டது
* சூயஸ் நிறுவனம் இறுதி ஒப்பந்தம் சேலம் தண்ணீர் தாரைவார்ப்பு
* சிடிஆர் நிர்மல் குமார் இன் இணையம் ctrnirmalconnect ல் அவரது பணிகள் என்று போலியான விபரங்கள் விமர்சனங்கள் வந்தபிறகு அழிப்பு
* குமரி சபரி வர்மன் மாற்றுத்திறனாளி குட்கா விற்றதாக போலீஸ் அடித்து கொலை
அதே நாளில் தவெக பவானி அருண் 135 கிலோ குட்காவுடன் கைது காவல்நிலைய சொந்த ஜாமீனில் விடுதலை
* வாக்குறுதி படி மீனவருக்கு மீன் இனப்பெருக்க கால தடை உதவித் தொகை வழங்கவில்லை வழக்கு போட்டு வாங்கிக் கொடுத்த நாதக தீரன் திருமுருகன்
* அறந்தாங்கி டாஸ்மாக் எதிரே போராடிய பள்ளி மாணவிகளை துரத்தி துரத்தி அடித்த போலீஸ்
* பாடநூல் தலைவர் அனுபவமற்ற லயோலா மணி
* பழநி கோவில் 200 கோடி சொத்து முறைகேடாக தனியாருக்கு 2கோடிக்கு பத்திரப்பதிவு எதிர்ப்பு கிளம்பியதால் தவறை ஒத்துக்கொண்ட அறநி அமைச்
* மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம் லட்சம் வீரப்பன்களை உருவாக்குவோம் என அன்புமணி பதில்
* கர்நாடகா போய் கொல்லூர் அம்மன் தரிசனம் செய்த விஜய் கூடவே இருந்த கர்நாடக துணை முதலமைச்சர் இடம் காவிரி பற்றி பேசவில்லை
* அரசு தரப்பு வக்கீல் நியமனம் லட்சக் கணக்கில் லஞ்சம் கேட்பதாக தவெக பெண் நிர்வாகி வழக்கு 120 கோடி சம்பாதித்த புசி ஆனந்த்
* தாய்மாமன் திட்டம் அனைத்து குழந்தைகளுக்கு என்ற வாக்குறுதி அரசு மருத்துவமனை பிறக்கும் குழந்தை என்று மாற்றம்
*ஜோஸ் ஆலுக்காஸிடம் சந்தை மதிப்பை விட 3000ரூ அதிக விலைக்கு தங்கம் வாங்க டெண்டர்.
* 4.44 லட்சம் மோதிரங்கள் செய்து கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் ஊழல் நடக்கும்
* தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் சட்ட திருத்தம் அந்த தேவையற்ற அனுமதியை லஞ்சம் இல்லாமல் பெற முடிவதாக பரப்புரை
* பழனி கோவில் பத்திரப் பதிவு செல்லாது என்று தீர்ப்பு
* மேகதாது அணை முடிவை காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு கையளித்தது தவறு என மணியரசன் நகல் எரித்து விமர்சனம்
* ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ரேசன் கடையில் லாரி டயர் ஆய்வு நகைச்சுவை
* நெம்மேலி 6700 கோடி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நாசகரமானது
* விஜய் ரசிகர் முதல்வரின் செயலாளராக நியமனம் அரசாணை 40 நாட்களாக மூடி மறைப்பு
* கரூர் வட்டம் மூன்று கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் நபர்களிடமே நிலத்தை விற்றுவிட முயற்சி
* குமரி அணுக்கழிவு ஒப்பந்தம் காலம் நீட்டிப்பு
* குடிநீரை காலி செய்யும் டேட்டா சென்டர்கள் அமையும் ஒப்பத்தம் கையெழுத்தானது
* விஜயை விமர்சனம் செய்யும் 18 நபர்களை தடை செய்ய ட்விட்டருக்கு அரசு சார்பில் அறிக்கை தவறு என கோர்ட் உத்தரவு
* சாராயத்தை தொட்டதே இல்லை என்ற ஆதவ் கைப்பையில் பாட்டில் வைத்து மாட்டிய பழைய வீடியோ வைரல்
* கர்நாடகத் தெலுங்கர் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் டெல்லி பிரதிநிதி பதவி
* ஏற்கனவே 30 லட்சம் பெற்ற கரூர் நெரிசல் குடும்பங்களுக்கு அரசு வேலை இடைத்தேர்தல் வந்தவுடன் திடீர் பாசம்
* ஜவ்வாது மலையில் வரவுள்ள நீரேற்று திட்டம் நாசகாரமானது என்று விகடன் செய்தி
* அமைச்சர் சரத் ஐபிஎல் அரங்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரல்
* பள்ளியை ஆய்வு செய்த கீர்த்தனா ஆணவத்துடன் நடந்து கடும் விமர்சனங்கள்
* 18பேர் இறந்த ஞஅமோனியா கசிவு ஆலைக்கு போகாமல் பள்ளியில் என்ன ஆய்வு என்று சீமான் விமர்சனம்
* சட்டசபையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடம் தவெக வினர் பெயர்களை குறிப்பிட்டு பேசிய உதயநிதி
* விஜய் நேரடியாக குதிரைபேரம் பேசியதாக வைகோ பேட்டி
* ஆந்திராவுக்கு சென்ற இரண்டு முக்கிய தொழில்வாய்ப்புகள்
* இறுதி செய்யப்பட்ட வேட்பாளரை பணபலத்தால் அகற்றிவிட்டு சீட் வாங்கி வென்ற தவெக எம்எல்ஏ தன்னை குதிரை பேரம் பேசுவதாக பேட்டி
* சென்ற ஆட்சியில் வாங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் சென்னைக்கு ஓட்டியே வரவைத்து பிரம்மாண்ட விழா
* அமைச்சர் கீர்த்தனா முதலீடு ஈர்க்க சிறுபிள்ளைத் தனமான ரீல்ஸ்
* திருச்செந்தூர் கோவில் அனைத்து சிறப்பு பூஜை கட்டணங்களும் உயர்த்தல்
* உயர்கல்வி அமைச்சர் பள்ளி நிகழ்ச்சியில் குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் மாணவிகள் கால்களை அமுக்கிவிட்ட வீடியோ சர்ச்சையானது
* நடிகர் பாக்யராஜு மறைவுக்கு அரச மரியாதை
* முதல்வர் மராத்தான் ஓடியபோது உண்மையான விளையாட்டு வீரர்களை மணிக்கணக்கில் அடைத்து வைத்து துணைநடிகர்கள் புடைசூழ ரீல்ஸ் ஓட்டம்
* ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ இரு அடியாட்கள் தவெக பெண் தொண்டரை பா.வன் செய்த புகார் எந்த நடவடிக்கையும் இல்லை
* விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் ஆதவ் அர்ஜுனா சர்ச்சை கருத்து
* விஐய் முகம் போல மைதானத்தில் உட்காரவைக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்
* மூடப்பட்ட டாஸ்மாக் பட்டியல் தகவ அறி உரி சட் மூலம் போலி என்று அம்பலம்
*ரிசர்வ்டு அன்ரிசர்வ்டு வித்தியாசம் தெரியாத போக்குவரத்து அமைச்சர்
* ஆலங்குளம் நெட்டூர் தலித் மக்களை தாக்கி வரும் முகமூடி ஆயுத கும்பல் 6 பேருக்கு அரிவாள் வெட்டு
* விவசாய கடன் ரத்து சொன்னதில் 10% மட்டும் நிறைவேற்றல்
* தாராபுரம் ஆட்டோ ஓட்டுநரை கழுத்தில் வெட்டிவிட்டு காசு கொடுக்காமல் ஓடிய வடமாநில கும்பல்
* தென்காசி சிவகிரி விசாரணைக்கு அழைத்துசென்ற அந்தோணி ராஜ் (65) விசம் குடித்து இறந்துவிட்டதாக சடலம் ஒப்படைப்பு
* கெலவரப்பள்ளி அணை மாசு நுரை கலந்த நீர் வீடியோ வைரல்
* புதுக்கோட்டை 35வயது மாற்றுத்திறனாளி பெண் இருவரால் பா.வன் அரசு மருத்துவமனையில் தரையில் போட்டு சிகிச்சை
* 15 லட்சம் பக்க குற்றப் பத்திரிக்கை கொண்ட சேலம் வின்ஸ்டார் சிவக்குமார் 5 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு தவெக இணைவு
*
* ரவுடி படப்பை குணா நண்பர் தென்னரசு அயலக தமிழர் நல அமைச்சர்
* அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்ற உறுதி நிறைவேறவில்லை
* கடையநல்லூர் குடிபோதையில் தந்தை சுப்பையாவை அடித்துகொன்ற மகன் சேகர்
* திருச்சி அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி சக செவிலியர்கள் போராட்டம்
* சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு
* கோவை சூலூர் 10 வயது சிறுமி கடத்தி கொடூர கொலை. பா.வன்கொடுமை
* சூலூர் பெண்குழந்தை பா.வ கொலை அமைச்சர் கீர்த்தனா சிரிப்பை அடக்கியபடி மழுப்பல் பதில்
* சட்டசபையில் சொந்தமாக பதில் சொல்ல தெரியாமல் வார் ரூம் அனுப்பும் ஏ4 சீட் படித்தல்
* சட்டசபை நேரலை உண்டு என்று அறிவித்த ஒரே நாளில் நிறுத்தம்
* எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு வீட்டுக்கு போய் ட்விட்டரில் பதில்
* கோவில்பட்டி கெச்சிலாபுரம் இளைஞர் சஞ்சய் ஆணவப் படுகொலை
* ஒரு மாத்ததிற்கு இலவச மின்சாரம் என வாக்குறுதி ஆனால் அதே அளவு இரண்டு மாதங்களுக்கு என அறிவிப்பு
* பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகள்
* மகளிர் தொகை வாக்களித்தபடி 2500 இல்லை பழையபடி 1000ரூ
* டாஸ்மாக் மூடப்பட்டதாக போலி வீடியோ
* மூன்று மாத அரசியல் அனுபவமுள்ள இளம்பெண் தொழில்துறை அமைச்சர்
* அரியர் எழுதும் ராஜ்மோகன் பள்ளிக் கல்வி அமைச்சர்
* கோடிக்கணக்கில் சொத்துள்ள ராஜ்மோகன் ஏழைக்கு mla பதவி தந்ததாக உருக்கம்
* திராவிட அரசுகளை போலவே குறிப்பிட்ட டாஸ்மாக் களை மூடி மக்களை ஏமாற்றுதல்
* கஜானா காலி எனவே வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்டல் ஆனால் வாக்குறுதியில் இப்படி சாக்கு சொல்லமாட்டோம் என உள்ளது
* தனது கொலைக் குற்றவாளி ஜோசியருக்கு அரசு பதவி எதிர்ப்பால் வாபஸ்
* செருப்பு இல்லாமல் பஸ் ஏறி பதவியேற்க வந்த தவெக எம்எல்ஏ பெரும் பணக்காரர் என அம்பலம்
* ரெட் ஜெயன்ட் படங்களை வெளிவர விடமாட்டோம் ஆதவ் அர்ஜுன ரெட்டி
* எடப்பாடியார் வணக்கம் தெரிவித்தபோது மதிக்கவில்லை மற்ற தலைவர்களை சந்தித்தபோதும் அவரை சந்திக்கவில்லை
* அதிமுகவை பிளந்து தனக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தல்
* மத சார்பற்ற அரசு என்று கூறிவிட்டு ஒரு சீட்டு இ.யூ.முஸ்லீம் லீக் ஆதரவை பெறல்
* காங்கிரசுடன் கைகோர்த்தல்
ஆறுதல்கள்...
*இடுக்கி நிகழ்ச்சி ஒன்றில் முல்லைப் பெரியாறு ஆற்றில் நீரோடு கழிவுகளைக் கலந்து திறந்து விடுவதாக பேசிய கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகந்நாத் மிஸ்ரா
* கனிமவளம் கேரளா செல்ல தற்காலிக தடை
கேரள முதலமைச்சர் அனுமதிக்குமாறு கடிதம்
* விஜயை ஆபாசமாக பேசிய உதயநிதி கைது
No comments:
Post a Comment