நீளும் காவல்கொலை பட்டியல்
RTI மூலம் பெறப்பட்ட தகவல் படி 2022 லிருந்து 2025 ஜூன் வரை 24 பேர் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிபிடத் தகுந்தவை
ஜனவரி 2021
21 வயது சூர்யா எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் கொலை
ஆகஸ்ட் 2021
சத்யவாணன் தஞ்சாவூர் காவல்நிலையத்தில் கொலை
ஆகஸ்ட் 2021
தடிவீரன் திருநெல்வேலி கொலை
மேற்கண்ட மூவரும் பட்டியல் சாதியினர்
2021 டிசம்பர் மணிகண்டன் என்ற இளைஞர் ராமநாதபுரம் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட சில மணிநேரங்களில் கொலை
ஐனவரி 2022
டெய்லர் பிரபாகரன் துன்புறுத்தி கொலை
ஏப்ரல் 2022
சென்னை 25 வயது விக்னேஷ் கொலை
பெரும் அதிர்வலைக்குப் பிறகு விக்னேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் அறிவித்து 'இனி ஒரு காவல் கொலை கூட நடக்காது' என்று முதல்வர் அறிவித்த ஒரு மாதத்திற்குள் 3 காவல் கொலைகள்
மே 2022
திருவண்ணாமலை குறவர் தங்கமணி படுகொலை
ஜூன் 2022
கொடுங்கையூர் 30 வயது ராஜசேகர் கொலை
ஜூன் 2022
நாகப்பட்டினம் சைக்கிள் கடை சிவசுப்பிரமணியம் கொலை
இதைவிட மோசமானது
ஜனவரி 2023
செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளி 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமான சித்திரவதை செய்து கொலை
ஏப்ரல் 2023
ஜெய்பீம் படப்பாணியில் ஏழை சமையல்காரர் ராஜா மனைவி கண் முன்னே துன்புறுத்தி கொலை
மார்ச் 2024
2014 ல் நடந்த அண்ணா நகர் இளைஞர் கொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட 8 கொலைகார போலீசுக்கு பதவி உயர்வு
மதுரை நீதிமன்றம் கண்டனம்
ஜூலை 2024
12 நாட்களில் அடுத்தடுத்து 4 காவல்கொலைகள் மதுரை கார்த்திக், விழுப்புரம் ராஜா, சென்னை சாந்த குமார், விருதுநகர் ஜெயக்குமார்
ஜூன் 2025
காவல் நிலையத்தில் இளைஞர் அஜித் குமார் கொலை
இதை விமர்சிக்க அதிமுக வுக்கு தகுதி இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் கிட்டத்தட்ட 100 காவல் மரணங்கள் நடந்துள்ளன.
2018 இல் மட்டுமே 78 காவல்கொலைகள் நடந்துள்ளன.
ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை அதில் குறிப்பிடத் தக்கது
ஒரே ஒரு ஆறுதல் 1993 இல் நடந்த ஒரு காவல்கொலை வழக்கு (மேல அலங்காரத்தட்டு வின்சென்ட்) நிறைவு பெற்று 25 ஆண்டுகள் கழித்து 8 போலீசாருக்கு தண்டனை கிடைத்தது.
இதுவே தமிழக வரலாற்றில் இறுதித் தீர்ப்பு வரை சென்ற ஒரே காவல்கொலை வழக்கு ஆகும்.
70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன அல்லது கைவிடப்பட்டன.
பாஜக வுக்கும் இதைக் கண்டிக்கத் தகுதி இல்லை.
உத்தர பிரதேசம் இல் 2020-2022 இல் ஏறத்தாழ 4,400 காவல்கொலை நடந்துள்ளது. தமிழகத்தைப் போல 3.5 மடங்கு மக்கட்தொகை கொண்ட உ.பி யில் சதவீத அடிப்படையில் இது மிக அதிகம்!
No comments:
Post a Comment