Sunday, 27 October 2024

ரசிக மனப்பான்மை

ரசிக மனப்பான்மை

  குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்கிற ஆசை எல்லா மனிதனுக்கும் உண்டு அதுவும் இளைஞரான ஒருவன் ஏதோ ஒரு கூட்டத்திற்குள் போய் சேர்ந்து கொள்வது இயல்பான எண்ணம்.
 சங்கம், இயக்கம், நிறுவனம், மடம், கட்சி, சமூக சேவை என எதிலாவது சேர்ந்து குடும்பத்துக்கு வெளியே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
 அதிலும் குறிப்பாக ஆண்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தமது தொடர்பு வட்டத்தை பெரிதாக்குவது மிக அவசியம்.
 குழுவில் அங்கமாக இருக்கும் ஒருவனைத்தான் ஒரு பெண்ணும் விரும்புவாள். இதை 'Women like men in umiform' என்பர்.
 ஆனால் இவற்றில் எதில் இணைய வேண்டும் என்றாலும் அடிப்படையான சில தகுதிகள் தகுதிகள் வேண்டும்.
சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களில் சேர்வதும் உண்டு.
 அதற்கும் கூட சில தகுதிகள் வெண்டும்.
இப்படி எந்த தகுதியுமே இல்லாதவர்கள் தேர்ந்தெடுப்பது ரசிகர் குழு.
  எவன் வேண்டுமானாலும் சேரலாம் சேர்ந்த பிறகும் எதுவும் செய்யவேண்டியது இல்லை. பொழுதுபோக்கலாம் கூத்தடிக்கலாம் அவ்வளவுதான்.
 தொண்டனுக்கும் ரசிகனுக்கும் சிறிய வேறுபாடு இருக்கிறது. 
 தலைவன் சொன்னால் தொண்டர் அதை பின்பற்ற முயல்வான் ஆனால் ரசிகன் தன் தலைவன் கூறினாலும் செய்ய முயல்வது கிடையாது.
 இளைஞர்களுக்கு ஹீரோ ஆகவேண்டும் என்கிற எண்ணமும் இயல்பானது. அந்த எண்ணம் சமூகத்திற்கு நன்மை செய்யவும் வழிவகுக்கும்.
 ஆனால் ரசிகன் என்பவன் தன் மனதிற்குள் இருக்கும் ஹீரோவை கொன்றவன்.
 எந்த கொடுமையைக் கண்டாலும் பயந்து ஓடுகிற கோழை!
 துளியும் தன்னம்பிக்கை இல்லாதவன். உளவியல் ஊனமுற்றவன்.  சினிமாவை உண்மையென்று நினைப்பவன் அதாவது கனவுக்கும் நிஜத்திற்கு வேறுபாடு அறியாத குழந்தை!
 இத்தகையவர்கள் இக்காலத்தில் மிக அதிகம்!
இவர்களை கருத்தில் கொள்ளவேண்டும் 'do not underestimate stupid people in large number' என்பதற்கு ஏற்ப.
 இவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டவர் இவர்களை பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்.
 வெகு சிலரே தனது ரசிகர்களை நிஜமாகவே நல்வழிப்படுத்த முயல்வார்கள்.
 வெகு சில ரசிகர்களும் பிற்பாடு பக்குவப்பட்டு சராசரி மனிதனாக மாறுவதும் உண்டு.
 நடிகர் விஜய் இப்போது வரை தன் ரசிகர்களை முறைப்படுத்த முயன்றது இல்லை.
  ரிட்டையர்ட் நடிகர்கள் வழக்கமாக செய்வது போல அவர் நடிப்பு வாழ்க்கை முடிந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
 இன்று நடந்த மாநாடு கூட அதன் திட்டமிடல், நிகழ்வுகள், பேச்சு என்று பார்த்தால் நம்பிக்கை தருவதாக உள்ளது.
 எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார் என்றால் அவர் ஒரு கட்சியில் பல ஆண்டு பயணித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகுதான் கட்சி தொடங்கினார்.
 விஜய் ஒரு தேர்தலை சந்தித்த பிறகுதான் அவருக்கு அரசியல் பிடிபடும்.
 இப்போதே அவரைப் பற்றி கணிப்பது சரியாக இருக்காது.
 பொறுத்திருந்து பார்ப்போம்!
 

No comments:

Post a Comment