Saturday 20 July 2024

தொண்டனின் மனநிலை

தொண்டனின் மனநிலை 

 இல்ல புரியல!
 காளி அக்கா எந்த வகையில் அண்ணனுக்கு இடைஞ்சல்?!
 ஒன்னு அவர் கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி மாதிரி அண்ணனுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்து இருக்கணும்!
 அல்லது அண்ணனோடும் முரண்பட்டு கட்சி கொள்கைகளை அல்லது அண்ணனை விமர்சித்து இருக்கணும்!
 அப்படி எதுவுமே நடக்கலையே!?
 எந்த வகையிலுமே லாஜிக் செட் ஆகலையே?!
 ஆடியோ உருவாக்கியவன் சாட்டை அல்லது இடும்பன் பேர சொல்லி இருக்கலாம்.
நத்தம் சிவசங்கரன் கூட கட்சி தொண்டர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்று விமர்சித்தவர்தான்!
 அது உண்மையும் கூட!
ஏறெடுத்துப் பார்க்காத பொதுமக்களையும் விசத்தைக் கக்கும் எதிர்க் கட்சியினரையும் மரியாதையாக பேசும் நா.த.க உயர்மட்டம் தொண்டர்களை ஏதோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவன் போலத்தான் நடத்துகிறது!
 இருந்தா இரு இல்லனா போ! நீ அவசியமே இல்ல!
 அண்ணனில் இந்த வார்த்தை அப்படியே ஒரு நகர கிளையில் கூட தொண்டனின் காதில் விழுகிறது!
 அன்று அடிவாங்கி செத்த அல்லது இந்த வாரத்தில் வெட்டுபட்டு செத்த தொண்டர்களுக்கு கூட உரிய மரியாதை தரப்படவில்லை என்பதில் இருந்து இதை உணரலாம்!
 பிற கட்சிகள் தவறு செய்தவன் தன் கட்சிக்காரன் என்று தெரிந்தாலும் ஆதரவாக நிற்கும்.
நா.த.க அப்படி இல்லை!
 அதற்காக இனத்தின் கடைசி வாய்ப்பைத் தவறவிட நாதக தம்பிகள் அத்தனை அரசியல் முட்டாள்கள் இல்லை! 
 சிலுவைகளைச் சுமந்தபடி சாட்டையடி வாங்கிக்கொண்டு கழுமர மேடையை நோக்கி அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
 நாலு வார்த்தை ஆடியோ இதை குலைத்துவிடாது!
இனத்தில் புகுந்துள்ள வடுக கேன்சர் செல்கள் அடுத்தமுறை நம்பும் வகையில் தயாரிக்கவும்!
பி.டி.ஆர் ஆடியோ நம்பப்பட்டது என்றால் அதில் பி.டி.ஆர் மட்டுமே தெரிவிக்க முடிந்த புள்ளிவிபரம் இருந்தது!
 இருக்கும் கொஞ்சம் மூளையையும் நன்கு கசக்கி அடுத்த முறை நல்ல ஆடியோ உருவாக்கவும்!

Tuesday 9 July 2024

வேட்டொலி 10

வேட்டொலி 10

  தமிழ்தேசிய இணையம் வேட்டொலி தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
இதுவரை 1505 பதிவுகள் எழுதப் பட்டுள்ளன!
இதுவரை மொத்தமாக 3,90,827  பார்வைகள் கிடைத்துள்ளன.
சென்ற மாதம் 5584 பார்வைகள் பெற்றுள்ளது வேட்டொலி.
 பிரபலமாக ஆகாவிட்டாலும் இதில் எழுதப்பட்டுள்ள தீவிர கருத்துகளுக்கு இன்றுவரை முடக்கப்படாமல் இயங்கி வருவதே பெரிய சாதனை என்று கருதுகிறேன்.
 முன்பெல்லாம் பதிவுகளை தேடினால் கூகுள் காட்டும் தற்போது கூகுள் வேட்டொலியை காட்டுவதில்லை.
 விரைவில் முடக்கப்படலாம்!
முடக்கப்பட்டாலும் கவலை இல்லை!
உண்மையான புரட்சிக்கு தடைதான் அங்கீகாரம்!
எழுத்து எந்த வடிவத்தில் எழுதப்பட்டது என்பது முக்கியம் இல்லை!
 அதைப் படித்தவர் மனதில் அது எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்பதுதான் முக்கியம்!
 வேட்டொலி அவ்வாறானது என்று நினைக்கிறேன்!
 வேட்டொலி ஏற்படுத்தும் தாக்கம் தேவையான நேரத்தில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு இனத்தைக் காக்கும் என்று நம்புகிறேன்!
  தமிழ்தேசியர் பலரும் கவனம் செலுத்தாத தமிழ்தேசிய விழுமியங்களில் வேட்டொலி பங்களித்துள்ளது.
அதாவது "ஈழம் தமிழகம் ஒரே நாடு", "இழந்த எல்லை மீட்பு",  "இனத்தில் பார்ப்பனர் மீளிணைப்பு", "புலிகள் வழியில் தனிநாடு" மற்றும் "அகன்ற தமிழர்நாடு" போன்றவை!
 இவற்றில் "மண்மீட்பு" மற்றும் "அகன்ற தமிழர்நாடு" போன்ற நிலம் சார்ந்த சிந்தனைகள் 290 பக்க "தனித் தமிழர்நாடு" புத்தகமாக வெளிவந்துள்ளது!
 vaettoli blogspot இல் பெரும்பான்மை எனது எழுத்துகள் என்பதில் பெருமை கொள்கிறேன்!
 "தனித் தமிழர்நாடு" வரைபடத்தை உருவாக்கியவன் என்று என்னை பிறர் அடையாளம் காண விரும்புகிறேன்.
 சில பதிவுகள் தன்னார்வ தமிழ்தேசியரால் குரலாக்கம் செய்யப்பட்டு பொருத்தமான படங்களுடன் காணொளிகளாக ஆக்கப்பட்டு வெளிவந்துள்ளன. 
 அவ்வாறு வேட்டொலிப் பதிவுகள் உலகத் தமிழ்தேசியரால் வெவ்வேறு வடிவங்களில் சேமிக்கப்படவும் படியெடுக்கப்படவும் வேண்டுகிறேன்!
2012 லிருந்து உடன் பயணிக்கும் முகநூல் உறவுகளுக்கு மிக்க நன்றி! 
இன விடுதலை நோக்கிய பயணம் மிக நெடியது! 
தொடர்ந்து இயங்குவோம்!

ஒரே நாடு!
ஒரே எல்லைக்கோடு!
அமைப்போம் தமிழர்நாடு!
 
 

Saturday 6 July 2024

பகுஜன் ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் ஆம்ஸ்ட்ராங் 

நல்லவர்தான்! 
 தமிழர் இன ஓர்மைக்கு எதிராகவும் வந்தேறிகளுக்கு விருந்தாகவும் இருப்பது தலித்தியம்!
 அந்த கொள்கையை ஏற்றிருந்தாலும் மிருக பலம் கொண்டு விஜயநகர மன்னராட்சி செலுத்தும் ஓங்கோல் குடும்பத்துக்கு வளைந்து கொடுக்காமல் இருந்தவர்!
வடக்கில் தலை வைத்துள்ள தலித்திய கட்சியின் வாலைப் பிடித்துக் கொண்டு ஒருவர் தன்னால் முடிந்த சேவைகளை குறிப்பிட்ட சமூகத்துக்கு செய்துள்ளார்!
நினைத்தால் வியப்பு ஏற்படுகிறது!
 ஆனால் "2009 அளவுகோல்" கொண்டு அளந்தால் அவர் பெரிய மனிதர் என்று ஏற்க முடியவில்லை!
 இனப் படுகொலைக்கு அழாத எவருக்கும் இரங்கல் தெரிவிக்க மனமில்லை!
 தலித் போராளிகள் மன்னிக்கவும்!
 தலைநகரில் அதுவும் முதல்வரின் தொகுதியிலேயே கொலை நடந்துள்ளது!
 முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இது நடக்க அனுமதித்துள்ளது!
 இதன் பிறகாவது தலித் கும்பல் தமது ஆண்டையான திமுக மீது கோபத்தைத் திருப்புவார்களா?! 
 அல்லது வழக்கமான பிதுக்கப் பட்டோம் ராகம் பாடி நீலக் கண்ணீர் வடித்து ஒப்பாரி வைப்பார்களா?! 
 என் போன்ற இனவாதிகள் மீது வன்மத்தைக் கக்கி ஆற்றாமையை போக்கிக்கொள்ள வருவார்களா?!
 

Thursday 4 July 2024

என்னடா ஆர் எஸ் பாரதி நாயே

#ஆர்_எஸ்_பாரதி_நாயே

என்னடா! ஆர்.எஸ்.பாரதி நாயே!

14.02.2020 அன்று நீ பேசியது..
 "மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை.
 ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். 
அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை!" 

 கூறியதும் பொய்! கூறிய விதமும் திமிரானது!
இதற்காக உன்னைப் போட்டு செய்கை செய்ததில் மூன்றே நாட்களில்..

17.02.2020 அன்று கதறியபடி நீ பதிவிட்டது...  
"அன்று நான் எமோஷனலாகப் பேசிவிட்டேன். 
என் தலைவரையும், பெரியாரையும் பற்றி ஹெச்.ராஜா மரியாதை இல்லாமல் பேசியதைப் பார்த்த கோபத்தில் இருந்தேன்.
 அதனால்தான் அந்தத் தவறு நடந்துவிட்டது.
என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறுவதே ஆகும்''

 தற்போது மீண்டும் கொழுப்பேறி நீ பேசியிருப்பது...
"திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். 
ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்."
 இந்த முறையும் நீ குரைத்தது பொய்! குரைத்த விதமும் வெறித்தனமானது!

 எத்தனை நாட்களில் மன்னிப்பு கேட்கிறாய் என்று பார்ப்போமா?! 

Wednesday 3 July 2024

செவ்வடுகர் வெங்கடேசன் நாயுடு

செவ்வடுகர் வெங்கடேசன் நாயுடு 

  1970 இல் மதுரை அருகே பிறந்த சு.வெங்கடேசன் நாயுடு திருமலை நாயக்கர் கல்லூரியில் படித்த பருவத்திலிருந்தே தாம் ஆண்ட (தெலுங்கு) பரம்பரை எனும் எண்ணம் உள்ளவர்.
 அதனால் அவருக்கு தமிழர் ஆண்ட வரலாறு பிடிக்காது.
 தெலுங்கர் ஆண்ட வரலாற்றை எப்படியாவது பறைசாற்ற வேண்டும் என்று தீராத ஆசை கொண்டவர். 
 தெலுங்கர் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அதிலும் குறிப்பாக CPM மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர் ஆகின்றார்.
 திருமலை நாயக்கர் மீது அதிகமான பற்றுதல் கொண்டவர் என்பதால் திருமலை நாயக்கர் கல்லூரியில் பல முறை இவர்தான் சிறப்பு விருந்தினர் மற்றும் திருமலை நாயக்கர் பிறந்தநாளில் தவறாமல் மாலை அணிவிப்பவர்.
 1990 லிருந்து கட்சியில் இருந்தாலும் பெரிதாக எந்த போராட்டமும் செய்யாமல் எழுதுகிறேன் என்று இருக்கையைத் தேய்த்துக் கொண்டு இருந்தார். 
 இதனால் கட்சி இதழான செம்மலர் இல் ஆசிரியர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
 1999 வாக்கில் கட்சியிடம் குற்றப் பரம்பரை சட்டம் மற்றும் அதை எதிர்த்த போராட்டம் பற்றி நாவல்  எழுத 5 ஆண்டுகள் விடுமுறை கேட்கிறார்.
 கட்சித் தலைமை 10 ஆண்டுகள் விடுமுறை கொடுக்கின்றனர்.
 இந்த காலகட்டத்தில் உத்தமபுரம் தீண்டாமை சுவர் போராட்டத்தில் தலைகாட்டியதைத் தவிர பெரிதாக எதிலுமே பங்கெடுக்கவில்லை.
 2008 இல் இவரது 'காவல் கோட்டம்' நாவல் வெளியானது.
 வெளியீட்டு விழா என்றே தமிழ்நாடு முழுக்க 5,6 விழாக்கள் நடத்தினார் நாயுடு.
 ஆனால் இது குற்றப் பரம்பரை சட்டம் பற்றியோ அல்லது அதை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றியதோ அல்ல.
 பத்தாண்டு உழைத்து இவர் எழுதியது சுயஜாதி பெருமை. அதாவது மதுரையில் நாயக்கர் மற்றும் கள்ளர் இடையேயான மோதல் பற்றிய நாவல்தான் அது.
 அதிலும் முக்கால்வாசி பிறர் எழுதியதை போட்டு நிரப்பி அறிவுத் திருட்டு செய்திருந்தார் சு.வெ.நாயுடு.
 இந்த நாவல் பற்றி எஸ்.ரா அவர்கள் எழுதிய விமர்சனத்தில் கனடாவைச் சேர்ந்த முனைவர் ஆனந்த் பாண்டியன் எழுதிய மூன்று நூல்கள், 
 பிரான்சைச் சேர்ந்த Louis Dumont எழுதிய நூல்,
 Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
The Madura Country -A manual  – J..H..Nelson,
 History Of The Nayaks Of Madura- R Sathianathaier, 
 The History of Tinnevelly by Rev R Caldwell,
 History of Military transactions – R Orme  
ஆகியவற்றில் உள்ள தகவல்கள் அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்க பட்டிருக்கின்றன.
பெத்தானியாபுரம் முருகானந்தம் எழுதியுள்ள விமர்சனத்தில் "மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு" புத்தகத்தின் 40 பக்கங்கள் அப்படியே நகலெடுக்கப் பட்டுள்ளதாக குறியுள்ளார்.

ஆனால் பாருங்கள்!  அது அச்சிட்ட ஈரம் காயும் முன்பே விகடன் விருது கிடைத்துவிட்டது
(உபயம் - தற்போது தமிழர் மீது வன்மத்தைக் கக்கிய ரயில் திரைப்பட இயக்குநர் தேனி தெலுங்கர் பாஸ்கர் சக்தி).
 பல பழுத்த தரமான எழுத்தாளர்களின் வாழ்நாள் கனவான 'சாகித்ய அகாடமி' விருது இவருக்கு முதல் நாவலிலேயே கிடைத்தது அதுவும் அவ்விருது பெற்றவர்களில் மிக இளம்வயதினர் சு.வெ.நாயுடுதான்.

 2011 இல் விருது கிடைத்த கையோடு தமுஎகச தலைவராகவும் ஆகிறார்!
  கே.முத்தையா, கு.சின்னப்பாரதி, டி.செல்வராஜ்,  கந்தர்வன், மேலான்மை பொன்னுச்சாமி, அருணண், செந்தில்நாதன், எஸ்.ஏ.பி, வேல.ராமமூர்த்தி, உதயசங்கர், கமலாலயன் என அனைவரையும் பின்னுக்குத் தள்ளியாயிற்று!

 2012 இல் அரவான் திரைப்படம் கதை, வசனம் வாய்ப்பு!

 எழுத்தாளர்களுக்கு அல்வா கொடுத்தாயிற்று இனி அரசியல்! 

  CPM திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பு வழங்கப்பட்டது. உடனே 40 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த தோழர். கந்தசாமியை கட்டம் கட்டி வெளியே தள்ளினார்.
வேல.ராம்மூர்த்தி, ஷாஜகான், முத்துக்கிருஷ்ணன்  என ஒத்துவராத பலரை நீக்கினார்.

  மீண்டும் 5 ஆண்டு விடுமுறை!
 இந்த முறை பிற தெலுங்கர் செய்யத் துணியாத ஒன்றை செய்யத் துணிகிறார்.
 தமிழினத்தின் வேர் தமிழரின் செழுமையான இலக்கியம் அதன் மூலம் அறியக் கிடைக்கும் வரலாறு அதன் மூலம் தமிழருக்கு கிடைக்கும் உளவியல் உந்துதல் அதன் மூலம் தமிழகத்தில் தமிழ்தேசிய எழுச்சி.
இதில் மண்ணை அள்ளிப் போடும் ப்ராஜக்ட் இவரிடம் வழங்கப்படுகிறது.
 
  1950 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி துணை தமிழ் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அவர்கள் எழுதி டியூகோ (duco) பப்ளிசிங் ஹவுஸ் பதிப்பகத்தார்
மூலம் வெளியிட்ட வேள்பாரி எனும் புத்தகம் தற்போது எங்கும் காணக் கிடைக்கவில்லை.
 அந்த புத்தகத்தில் பாரி மூவேந்தரை எதிர்த்து நின்ற வரலாறு பேசப்படுகிறது.

 இதை அப்படியே திரித்து மூவேந்தரை கொடூர வில்லன்களாக ஆக்க முடிவெடுக்கிறார்.

 அதாவது வரலாற்றுப்படி 1900 ஆண்டுகளுக்கு முன்பு  கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டமே மௌரிய பேரரசின் கீழ் வருகிறது. தமிழகம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. அப்போது கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி முயற்சியால் மூவேந்தர் தம் தலைமையில் கூட்டணி அமைக்கின்றனர் இதன் பெயர் "தமிழ் கூட்டணி". இந்த கூட்டணி (அன்றைய இந்தியாவான) மௌரியப் பேரரசை தோற்கடித்து தமிழகத்தைக் காக்கிறது.
(உலகிலேயே முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் நாட்டையும் குறித்தவர் தமிழரே! முதன்முதலாக மொழியின் பெயரால் அரசியல் கூட்டணி அமைத்தவரும் தமிழரே! 1300 ஆண்டுகள் தொடர்ந்த இந்த கூட்டணியையே 'தமிர் சங்காந்த்' என்று காரவேலன் கல்வெட்டு கூறுகிறது)
 அதாவது anglo saxon, wales, irish, scotish என நான்கு இனத்தார் சேர்ந்து உருவாக்கிய இந்த உலகையே ஆண்ட பிரிட்டிஷ் கூட்டணி போன்றது இது.
 அதன் union jack கொடி போல வில், புலி, மீன் பொறித்த கொடியும் இந்த கூட்டணிக்கு உண்டு.
இந்த மூவேந்தர் கொடியை இராஜேந்திர சோழனும் பிறகு சுந்தர பாண்டியனும் பயன்படுத்தி யுள்ளனர்.
 இந்த கூட்டணி தற்போதைய பித்துண்டா அதாவது பாதி ஆந்திரா தாண்டி ஆண்டது (தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயம்).
 அப்போது தமிழகத்தில் இருந்த சில சிற்றரசர்கள் இந்த கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் தமிழ்மண்ணில் உள்ள சிற்றரசர்கள் இந்த கூட்டணியில் கட்டாயம் சேரவேண்டும் அல்லது கூட்டணி அவர்கள் மீது படையெடுத்துள்ளது.
 இதில் பாரி கொஞ்சம் பெரிய சிற்றரசர் கரிகாலன் காலத்திற்கு சற்று பிந்தையவர் எனவே இவர் அக்கூட்டணியில் அங்கம் வகித்து பின்னர் ஏதோ காரணத்தினால் விலக முடிவெடுத்து அதனால் மூவேந்தர் கூட்டணிப் படை அவர் மீது படையெடுத்து வெல்கிறது. அவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும் அவரது மகள்கள் மூவேந்தரை மணமுடிக்க விரும்பாததாலும் அவரது அரசு நிலைக்கவில்லை.
 பதிற்றுப் பத்து (6.1 பலாஅம் பழுத்த..) இல் பாரி இறப்பிற்கு பின் சேரனைக் காணச் சென்ற கபிலர் அவனையும் பாரியையும் ஒப்பிட்டு ஒரு பாடல் பாடியுள்ளார். இதில் சேரனை அவர் குற்றம் சாட்டவில்லை.
 பாரி மகளிரை மணக்க சிற்றரசர்களான விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகியோரும் மறுத்துவிட்டனர். 
இது மூவேந்தர் மீதான பயத்தால் அல்ல. 
 இறுதியில் மலையன் எனும் குறுநில மன்னன் பாரி மகளிரை மணந்துகொண்டான். 
 (ஆனால் மலையன் மீது மூவேந்தர் படையெடுக்கவில்லை மாறாக பாரி மகளிரை மணக்க மறுத்த விச்சிக்கோ மூவேந்தரோடு மோதியிருக்கிறான் - குறுந்தொகை 328,
இருங்கோவேளும் சோழனுடன் மோதி தோற்றான் - பட்டினப்பாலை 282).
 இன்னொரு வியப்பு இந்த பாரி மகளிரை மணந்த மலையமான்கள் வழிவந்த தாய்க்குப் பிறந்தவனே இராசராசன். இதற்கு பத்தாம் நூற்றாண்டு கபிலர் குன்று கல்வெட்டு சான்றும் திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு சான்றும் உள்ளன.

 இந்த வரலாற்றைத் திரித்து மூவேந்தர்கள் அன்றைய கார்ப்பரேட் போலவும் சிற்றரசர்களையும் பூர்வ குடிகளையும் கூண்டோடு கொன்று அவர்களது மண்வளத்தை அதாவது கால்நடைகள், தங்கம், முத்து, நிலம், சந்தனம், பெண்கள் போன்றவற்றை அபகரிப்பது போலவும் மனம் போன போக்கில் கதை எழுதி  அப்போது பாரி ஒரு மலைவாழ் மனிதனாக மிஞ்சிய பூர்வ குடிகளைத் திரட்டி மூவேந்தரை எதிர்த்து நின்று புரட்சி செய்தது போலவும் அதனால் அநியாயமாக கொல்லப்பட்டது போலவும்  மூவேந்தர் மீது வன்மத்தை கொட்டி கற்பனையான புதினத்தை எழுதினார் சு.வெ.நாயுடு!
விகடன் இதை எதோ புதைந்த வரலாற்றை மீட்டது போல நெடுந்தொடராக வெளியிட்டது!

 காவல் கோட்டம் இலக்கிய வட்டாரத்தில் கடும் அவமானத்துக்கு ஆளானதால் இந்த நாவலை இலக்கிய சுவையோடு மிக சிறப்பாக எழுதியிருந்தார் சு.வெ!
 இதற்காக கல்லூரி இலக்கிய பிரிவு ஒரு பெரிய டீம் வேலை செய்திருக்க வேண்டும்!

 2019 இல் வேள்பாரி பெரும் வரவேற்பைப் பெற்ற கையோடு அப்போது வந்த தேர்தலில் படாரென்று தி.மு.க மதுரை தொகுதியை CPM க்கு விட்டுக்கொடுக்க ஸ்டெய்ட்டா எம்.பி ஆகிவிடுகிறார் வெங்கி! 

  கீழடி பேசுபொருள் ஆனபோது அதை திராவிட நாகரீகம் என்று கூறத் தொடங்கினார்.
வழக்கம்போல கீழடி பற்றி சுவையான தொடர்கள் எழுதினார்.
 பிறகு ஏதோ கீழடி மேலே வர தானே காரணம் என்பது போல பேசத் தொடங்கினார்.

 நிலத்தை தானமாக வழங்கிய பேரா. கரு.முருகேசன், அகழ்வாராய்ச்சி நடக்க துணை நின்ற ஆசிரியர். பாலசுப்பிரமணியன், கீழடியை ஆய்வுக்கு கொண்டுவந்த தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் , இதற்கு முக்கியத்துவம் பெற்றுத் தந்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத்,  நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திய  வழக்கறிஞர் கனிமொழி மதி என அத்தனை பேரையும் விட கீழடி என்றாலே சு.வெங்கடேசன் தான் எனுமளவு விளம்பரம் செய்துகொண்டார்.

 இதே நேரத்தில் இன்னொரு கற்பனை கதாபாத்திரத்தையும் உருவாக்கினார் அது தான் "தாசி குஞ்சரத்தம்மாள்".
 நாயக்கர் கால விபச்சார அடிமைகளான தேவதாசிகளையும் சோழர் கால ஆன்மீக பெண்டிர்களான தேவரடியார்களையும் குழப்பி தமிழர்கள் மீது பல காலம் விசத்தை துப்பி வந்த வடுகர்கள் அது இன்று உடைபட்டுவிட்ட சூழலில் தேவதாசியிலும் ஒரு நல்லவள் இருந்தாள் அவள்தான் பஞ்சத்தின் போது ஊருக்கே சோறுபோட்டாள் என்று பொய்க்கதை ஒன்றை உருவாக்கி அதற்கு பெயரும் இட்டுவிட்டார் சு.வெ.நாயுடு.
 அவ்வப்போது தமிழர் பெருமைகளை திராவிடம் என்று உருட்டுவது இவருக்கு பிடித்த பொழுதுபொக்கு.

 தற்போது செங்கோல் பற்றியும் மன்னர்களின் அந்தப்புரம் பற்றியும் பேசியுள்ளார். 
 அந்தபுரத்தில் பெண்களை நிரப்பி பூட்டி வைத்தது நாயக்கர் காலத்திற்கு பிறகுதான்.
 ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதிக்காக நன்னன் மரபையே அளித்த கோசர் தமிழ் வரலாற்றில் உண்டு.
 ஒரு பெண் நின்று கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் உயிரைவிட்ட பாண்டியன் பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது.
 சோழர் காலத்தில் அரசாங்க அதிகாரிகளாக பெண்கள் அதிகாரிச்சி என்கிற பெயரில் பணியாற்றிய கல்வெட்டு உள்ளது. 
 சோழர் குடும்ப பெண்கள் கோவில் எழுப்பியுள்ளனர். அரசாங்க மருத்துவமனைகள், சாலைகள் அமைத்துள்ளனர். 
கோவிலுக்கு தம் சொத்துக்களை தானம் அளித்துள்ளனர்.
 
 மதுரை மேயருக்கு செங்கோல் கொடுத்தபடியும் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை போட்டபடியும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதே வெங்கடேச நாயுடு மக்களவையில் அவற்றை விமர்சிப்பது நகைமுரண்!
 
 சு.வெங்கடேசன் தமிழகத்தில் ஒருவர் தெலுங்கராகப் பிறந்து தெலுங்கு பற்றை வெளிக்காட்டினால் கட்சி கொள்கை பேதமில்லாமல் வடுகத்தால் எவ்வளவு உயரம் வளர்த்து விடப்படுவார் என்பதற்கான எடுத்துக்காட்டு!