முகநூல் தமிழ்தேசியர்க்கு...
2012 முதல் 2020 வரை என்னிடம் இருந்த முகநூல் கணக்கு இப்போது என்னிடம் இல்லை.
அது முடக்கப்பட்ட 2 மாதங்கள் யாருமே என்னைத் தேடவில்லை.
(ஒரே ஒருவர்தான் உங்கள் கணக்கு என்னவாயிற்று என்று கேட்டார்)
இங்கே என்னை என்று நான் குறிப்பிடுவது எனது பதிவுகளை!
நான் என்றுமே என்னையோ எனது தனிப்பட்ட வாழ்க்கையையோ முகநூலுக்கு கொண்டுவந்தது இல்லை
.
"நான்" என்கிற வார்த்தையை இதுவரை பெரும்பாலும் நான் பயன்படுத்தியதில்லை.
இதுவே முகநூலில் எனக்கென்று தனிப்பட்ட ஒரு நட்புவட்டம் உருவாகாமல் போக காரணமாக இருந்திருக்கலாம்.
நான் முகநூலே கதியாகக் கிடந்த காலம் போய் கடந்த ஓராண்டாக ஏதோ பெயருக்கு எட்டிப்பார்த்துவிட்டு போய்விடுவதால் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.
அனைவரும் ஒருகட்டத்தில் விரக்தியாகி கூறுவது போல நான் முகநூலை விட்டு போகப்போவதெல்லாம் இல்லை.
தொடர்ந்து முகநூலில் பதிவிடுவேன்.
இருக்கும்போது அருமை தெரியாது என்பார்கள்.
எனது பதிவுகளின் முக்கியத்துவத்தை அவை இல்லாதபோதும் கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
எனது வேட்டொலி இணையம் கூட போதுமான பார்வையாளர்களை பெறமுடியவில்லை.
சரி பரவாயில்லை.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் கூற விரும்புவதை இங்கே சுருக்கமாக எழுதுகிறேன்.
இன்று முகநூலில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் உங்கள் மனநிலை என்ன?!
தமிழகத்தை தன் பிடியில் வைத்திருக்கும் வந்தேறிகள் முகத்திரையைக் கிழிப்பது, முதலமைச்சர் நாற்காலியில் ஒரு தமிழின உணர்வுள்ள தமிழரை அமரவைப்பது,
அவர்மூலம் மாநில உரிமைகளை மீட்பது,
அதன்பிறகு எம்.ஜி.ஆர் காலத்தில் செய்தது போல ஈழம் அமைய உதவுவது.
இந்த வழியில்தான் நீங்கள் போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்த சுற்றுவழி எங்கே போய் முடியும் தெரியுமா?!
வந்தேறிகளின் முகமூடியைக் கிழிப்பதற்குள் ஈழம் அழிந்துவிடும்!
(கிட்டத்தட்ட அழிந்துவிட்டது)
மாநில ஆட்சியைப் பிடிப்பதற்குள் எல்லா மாநில உரிமைகளையும் ஹிந்தியம் விழுங்கிவிடும்!
(காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக விழுங்கப்பட்டது)
நாம் மாற்றுவழி யோசிக்கும்முன் தமிழகம் ஹிந்தியர்களால் நிறைந்துவிடும்.
(ஒன்றரை கோடி பேர் ஏற்கனவே குடிவந்தாயிற்று)
பிறகு நமது கதையும் அப்படியே ஈழம் போலாகும்!
இதற்குச் சான்று 2009 லிருந்து 2020 வரை இத்தனை தமிழ்தேசியர்கள் உருவாகியும் ஒரு இயக்கத்தையோ கட்சியையோ கட்டியமைக்க முடியவில்லை.
கட்டியமைக்க முடியாவிட்டாலும் இருக்கும் ஒரே நம்பிக்கையான நாம் தமிழர் கட்சியையும் வளரவிட்டீர்களா என்றால் அதுவும் இல்லை.
வந்தேறிகளையும் ஹிந்தியத்தையும் திட்டிக்கொண்டு மட்டுமே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நான் இங்கே தமிழ்தேசியவாதிகளை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறேன்.
"நம் நாடு இந்தியா" என்று பள்ளிப்பருவத்திலேயே மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை இழுக்கவில்லை.
"நமது மதத்திற்கு மரியாதை இல்லை" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்களை இழுக்கவில்லை.
"நாம் ஆண்ட பரம்பரை" அல்லது "நாம் ஆயிரமாண்டு அடிமை" என்று மூளைச் சலவை செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளை இழுக்கவில்லை.
"உழைப்பவரெல்லாம் ஒரே குடும்பம்" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களை இங்கே இழுக்கவில்லை.
சினிமாக் கூத்தாடி பின்னால் ஓடும் பொறுக்கிகளை இங்கே இழுக்கவில்லை.
இனப்படுகொலையை பிரச்சாரம் செய்து தனிநாடு அடையலாம் என்று பத்து ஆண்டுகளாக பகற்கனவு கண்டுவரும் ஈழத்தமிழரையும் இங்கே இழுக்கவில்லை
எத்தனையோ சமூக வலைப்பொறிகளில் சிக்காமல் இனத்திற்கென்று சிந்திக்கத் தொடங்கி
தமிழினம் பழமையானது, அது தனிநாடு அடையும் தகுதி உடையது என உணர்ந்துகொண்ட அறிவார்ந்த தமிழ்தேசியர்களைத்தான் கூறுகிறேன்.
நீங்கள் இப்போதும் முட்டாள்களாகவே இருக்கிறீர்கள்.
நீங்கள் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கின்றீர்கள் என்றால் "ஈழமும் தமிழகமும் ஒரே நாடு" என்கிற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு வரவில்லை.
நீங்கள் வரலாற்று ரீதியாக எந்த அளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள் என்றால் "ஆயுதம் ஏந்தாமல் ஒரு இனம் விடுதலை அடைய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது" என்கிற வரலாற்று உண்மையைக் கூட அறியாதவர்களாக இருக்கிறீர்கள்.
நான் 2012 லிருந்து இதைத்தான் முகநூலிலும் வலைப்பூவிலும் கதறிக்கொண்டு இருக்கிறேன்.
இத்துடன் சேர்த்து தமிழர் இழந்த எல்லை மாவட்டங்கள் பற்றியும் கத்திக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் யாருமே
ஈழம் - தமிழகம் இணைப்பு பற்றியோ
ஆயுதப் போராட்டம் பற்றியோ
மண்மீட்பு பற்றியோ
பேசுவது கூட இல்லை.
பேசவே தொடங்கவில்லை எனும்போது விவாதிப்பது எப்போது?!
ஒன்றிணைவது எப்போது?!
கொள்கைகளை உருவாக்குவது எப்போது?!
இயக்கம் கட்டுவது எப்போது?!
ஆயுதம் திரட்டுவது எப்போது?!
செயலில் இறங்குவது எப்போது?!
நிலத்தை கைப்பற்றுவது எப்போது?!
நாடமைப்பது எப்போது?!
ஒரு....
பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்.
இன்னொன்றை இங்கே உறுதியாகக் கூறுகிறேன்.
நீங்கள் புளகாங்கிதம் அடைவதுபோல நீங்கள் வந்து திராவிடத்தை வீழ்த்தவில்லை.
1500 களில் தோன்றிய வடுகத்தின் குழந்தையான வந்தேறியத்தின் கடந்த நூற்றாண்டு வடிவமாக திராவிடம் 1890 களில் உருவாகி
1920 களில் அதிகாரத்தைக் கைப்பற்றி வேரூன்றி
வளர்ந்து
செழித்து
கொழுத்து
ஆண்டு
அனுபவித்து
தானாகத்தான் வீழ்ந்ததேயொழிய தமிழ்தேசியவாதிகளால் சிறு சிராய்ப்பைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.
(இந்த நூற்றாண்டில் அதன் புதுவடிவம் "நாம் தமிழ்நாட்டவர்" அரசியலாக இருக்கலாம்)
இதற்கெல்லாம் காரணம் நீங்கள் ஜனநாயகத்தை நம்பிக்கொண்டு இருப்பதுதான்.
சனநாயத்தை நம்புகிறீர்களா அல்லது அப்படி நடித்து உங்களுக்கு ஆயுதம் தூக்க ஆண்மையில்லை என்கிற உண்மையை மறைக்கிறீர்களா?!
தமிழர் வீரம் என்று கதைகதையாக பேசுவதெல்லாம் பேச்சோடு மட்டும்தானா?!
ஆயுதம் தூக்கிய தமிழ்த் தலைவர்களெல்லாம் ஆதரவு கிடைக்காமல் வீழ்ந்தது தமிழர்களின் பெட்டைத்தனம் அன்றி வேறு எதனால்?!
இதைக் கேட்டால் "நீ என்ன சாதித்தாய்?" என்றுதான் கேட்பீர்கள்.
ஒருவர்கூட என் கருத்தை உள்வாங்காத போது நான் மட்டும் செயலில் எப்படி இறங்கமுடியும்?!
என்னால் யாருமே மாறவில்லையா என்றால் மாறியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த மாற்றம் மிகச் சிறிய அளவானதே!
எனக்கு யார் மீதும் கோபமில்லை!
என் வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளை வீணடித்ததாக எனக்குத் தோன்றினாலும் 10 கோடித் தமிழர்களில் நான்குபேரையாவது விழிக்கவைக்க முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
முதலுதவிக்கு முரண்டு பிடிப்பவன் கடைசி நேரத்தில் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
வந்தேறிய விளைவுகள் நெருக்கும்போது என் சிந்தனைகளின் அருமை உங்களுக்குப் புரியும்!
என் வாழ்நாளில் நான்குபேர் நான்கே நான்கு பேர் விழித்தால் போதும் என் இனத்திற்காக என் உயிரைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக போய்விடுவேன்.
ஆயுதப் போராட்டமெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமில்லை என்று நீங்கள் வாயசைத்துவிட்டு கடந்துசெல்லும் இதே வேளையில்
உலகில் குட்டி குட்டி நாடோடி இனங்கள் ஆயுதம் தாங்கி வல்லரசுகளைச் சாய்த்து மண்ணை மீட்டு அரசாங்கம் கட்டி மானத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
நம்மாலும் முடியும்!
நமக்கு அந்த வலு இப்போது இருக்கிறது.
ஆனால் வருங்காலத்தில் இருக்காது.
ஆயுத பலத்தால் வீரப்பனார் காவிரி தந்த வரலாறும்
பிரபாகரனார் ஈழம் ஆண்ட வரலாறும் கண்முன்னே நடந்துள்ளன.
இவ்விருவரை பாராமுகமாய் இருந்து பலிகொடுத்தது போல இனி உருவாகப்போகும் தலைவனையும் கையாலாகாத் தனத்தால் பலிகொடுத்துவிட்டு அவன் செத்தபிறகு சாமியாக்கி பூசாரித்தனம் செய்யாதீர்கள்!
இனத்திற்காக ஆயுதம் தாங்கி ஒருவன் முன்னே நடந்தால் அவன் பின்னே செல்லுங்கள்!
விடுதலைக்காக எந்த மக்கள் அதிகம் உயிரைப் பணயம் வைக்கிறார்களோ அவர்கள்தான் வருங்காலத்தில் உயர்ந்த சாதி!
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் ஆண்ட பரம்பரை!
இன்று மேல்சாதியாக இருப்பவர் வரலாற்றைப் புரட்டுங்கள்.
அவர்கள் இனத்திற்காகப் போராடியவர்களாக இருப்பார்கள்.
உங்கள் சந்ததி மேல்சாதியாக இருக்கவேண்டுமா?!
கீழ்சாதியாக இருக்க வேண்டுமா?!
இன்றிலிருந்து சனநாயகம் தவிர்த்த செயல்பாடுகள் குறித்து பேசவாவது தொடங்குங்கள்!
பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தாவது தமிழர்நாடு அமையட்டும்!
நீங்கள் பேடியாக இருந்தவரை போதும்!
நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் எல்லாம் ஈவெராவைத் தூக்கிப்பிடிக்கிறார்கள்.
ReplyDelete"ஆரியம் தமிழர் பண்பாட்டை சிதைக்க வடுகர்கள் காரணமில்லை, சைவ சித்தாந்தமும், கோயில் நிர்வாகம் செய்த
நம் முன்னோர்களும் எதிர்க்காததும்தான் காரணம். சித்தர்கள் மட்டுமே கடுமையாக எதிர்த்தார்கள்"
இந்தக் கருத்து அந்தக் கட்சியின் தலைவரின் கருத்து.
This comment has been removed by the author.
Deleteஎதற்கும் பயனற்ற 100 கோடி நபர்கள் படிப்பதைவிட ஏதேனும் பயனளிக்க கூடிய ஒரு நபர் உங்கள் பதிவுகளை படித்தாலே போதுமென நினைக்கின்றேன்.
ReplyDeleteஎனக்கு சில குழப்பங்கள் இருந்தன. உங்கள் பதிவுகள் மூலம் தெளிவிடைந்தது. நம்மை போல் இன்னொரு நபரும் எண்ணுகிறாரென்றால் நாம் எண்ணுவது சரி என்ற நம்பிக்கைதான்.