தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்
22.03.2019 தேதியிட்ட நெற்றிக்கண் பத்திரிக்கை
"அ.ம.மு.க -வில் எங்களைப் புறக்கணிக்கின்றனர்
- புலம்பும் நாயக்கர் சமூகத்தினர்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளது,
// குறிப்பாகத் தென்மாவட்டங்களில் உள சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக உள்ள நாயக்கர் (தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் குமுறல்கள் கேட்கின்றன.//
//தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நாயக்கர் சமூகத்தினர் ஓட்டுகள் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை உள்ளது.//
//ஆனால் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பொறுப்புகளோ பதவிகளோ கொடுக்கப்படவில்லை.
மற்ற கட்சிகளில் இருந்தபோது மாவட்ட அளவிலான பதவிகள் வகித்தவர்களுக்கு கூட ஒன்றிய அளவிலான பதவிகள் கூட வழங்கப்படவில்லை//
இந்த கட்டுரையானது தினகரன் தலைமையில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்
நாயக்கர்கள் ஓட்டு வங்கி இருந்தும் புறக்கணிக்கப் படுவதாகவும்
தினகரனைச் சாதி ரீதியில் குற்றம்சாட்டும் வகையில் உள்ளது.
மேலும் தகுதியைப் பொறுத்து வாய்ப்பு தராதவர் என்றும்
ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குவங்கியை தவறவிடுவதாகவும் குறைசொல்லும் வகையில் உள்ளதே தவிர ஆதரித்து இல்லை.
ஆனால் தினகரன் நிறுத்தியுள்ள வேட்பாளர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு சாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது தெரிகிறது.
வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் வந்தேறிகள் அதிகம்தான் என்றாலும் அவர்களது எண்ணிக்கை பதவி பகிர்ந்தளிக்கும் அளவுக்கெல்லாம் இல்லை.
மேற்கண்ட கட்டுரையாளர் (ராஜன்) வந்தேறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
தினகரனை ஏன் நாம்தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தில் வலியுறுத்துகிறோம் என்று இப்போது புரிந்துகொள்ளலாம்.
போகிற போக்கைப் பார்த்தால் சீமான் போட்ட அடித்தளத்தில் அவருக்கு முன் தினகரன் கோட்டை கட்டி அமர்ந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.
படம் உதவி: மேகநாதன் முனுசாமி
No comments:
Post a Comment