சர்கார் படத்தில் முதலில் வரும் காட்சி போல ஒன்று செய்ய வேண்டும்
முதலில் பஃறுளிப் பாண்டியன் குமரிக் கண்டத்தில் முந்நீர் விழவு கொண்டாடுவதில் தொடங்கி,
குமரிக்கண்டம் மூழ்கும்போது நெடியோன் பாண்டியன் கப்பல்களில் மக்களைக் காப்பாற்றி கொண்டுவந்து கரை சேர்த்து வடக்கே இமயம் வரை ஆட்சியைப் பரப்புவதைக் காட்டி,
பிறகு இளஞ்சேட் சென்னி தலைமையில் மூவேந்தர் கூட்டணி மௌரியரைத் தோற்கடிப்பதைக் காட்டி,
பிறகு கரிகாலன் கல்லணை கட்டுதல் மற்றும் இமயப் படையெடுப்பு,
சேரன் செங்குட்டுவன் இமயப் படையெடுப்பு,
கடுங்கோன் பாண்டியன் களப்பிரர் ஆட்சியை புரட்சி செய்து முடிவுக்கு கொண்டுவருதல்,
ராஜராஜ சோழன் எழுச்சி மற்றும் பெரிய கோவில் எழுப்புதல்,
ராஜேந்திர சோழன் எழுச்சி மற்றும் கடல்கடந்த பேரரசு,
சுந்தரபாண்டியன் பேரெழுச்சி மற்றும் பாண்டியப் பேரரசு மீண்டும் எழுதல்,
பூலித்தேவர் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தல்,
வேலுநாச்சியார், மருதிருவர் செய்த ஆங்கிலேயருடன் செய்த போர்கள்,
எம்டன் செண்பகராமன் சென்னை வந்து குண்டு வீசியது,
மார்சல் நேசமணி மண்மீட்பு போராட்டங்கள்,
ம.பொ.சி வடக்கெல்லைப் போராட்டம்,
தந்தை செல்வா அறவழி விடுதலைப் போராட்டம்,
இந்தியெதிர்ப்பு போர்,
தமிழரசனார் எழுச்சி,
ப்ளோட் மாலைத்தீவு படையெடுப்பு
பிரபாகரனார் எழுச்சி மற்றும் இந்திய அமைதிப் படையைத் தோற்கடித்தமை, புலிகள் படைபலம் மற்றும் தனி அரசாங்கம்,
வீரப்பனார் எழுச்சி, காவல்துறை அதிரடிப்படை மற்றும் துணைராணுவத்தை வென்றமை,
கடைசியாக ஜல்லிக்கட்டு போராட்டம் வரை வரவேண்டும்.
முக்கிய நபரின் முகம், நடவடிக்கைகள், வரைபடம் என 3 அல்லது 4 ஸ்லைடுகளில் வேகமாக நகர வேண்டும்.
சிறிதும் வெற்றி அடையாத தமிழர்கள் பாதிப்படைந்த துயரமான போராட்டங்கள் வரக்கூடாது.
அரசியல் சாராத மற்றும் தனிநபர் சாதனைகள் வரக்கூடாது.
No comments:
Post a Comment