செங்கோட்டை மதமோதல்
தமிழகத்தில் எத்தனையோ ஆன்மீக விழாக்களும் ஊர்வலங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் எல்லா மதங்களிலும் உண்டு.
அப்போதெல்லாம் வராத கலவரம் விநாயகர் சதுர்த்தி நடக்கும்போது மட்டும் தவறாமல் வரும்.
சாதாரண பொதுமக்கள் 50,100 நிதி கொடுத்துவிட்டு பிள்ளையார் வந்ததும் போய் தோப்புகரணம் போட்டுவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் செய்துவைத்த கொழுக்கட்டையை சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள்.
ஆனால் பொறுக்கிகள் அப்படியில்லை.
மதுவருந்திவிட்டு குத்தாட்டத்தை தொடங்குவார்கள்.
இதை வழி நடத்துபவர்கள் ஒரு இந்துமத அமைப்பினர்.
அதன் வழிகாட்டுதலின் பேரில் வேண்டுமென்றே இசுலாமியர் தெருவழியாக ஊர்வலம் நடத்தி கலவரம் உருவாக்க வழி உண்டா என்று பார்ப்பார்கள்.
எப்போது விநாயகர் ஊர்வலம் நடந்தாலும் இரு தரப்பினர் அடித்துக் கொள்வது செங்கோட்டையில் வழக்கம்.
அந்த இரு தரப்பினரும் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள்.
வழக்கமாக இந்த தறுதலைக் கும்பல்கள்தான் ஏழரையைக் கூட்டுவார்கள்.
ஆனால் இந்தமுறை அப்படியில்லை.
செங்கோட்டை ஊரின் வரைபடம் தந்துள்ளேன்.
சிறுபான்மை இசுலாமியர் செறிவாக வாழும் பகுதி பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஊர்வலம் செல்லும் வழி சிவப்பில் காட்டப்பட்டுள்ளது.
பிரச்சனை நடந்த இடம் வட்டமிடப்படுள்ளது.
முன்பெல்லாம் இந்த விநாயகர் ஊர்வலம் நடக்கும்போது இசுலாமியர் பகுதிக்கு அருகே நுழைந்ததும் ஆமை வேகத்தில் நகரந்தபடி செண்டை மேளத்தை சத்தமாக அடித்தபடி இசுலாமியரைச் சீண்டும் வகையில் கோசம் போட்டுக்கொண்டு ஆரவாரத்துடன் செல்வர்.
ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை.
இசுலாமியர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து முறைப்படி இந்த விடயத்தை கையாண்டதால் காவல்துறை மூலம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கண்கானிப்புடன் இவ்வூர்வலம் நடத்தப்படுகிறது.
முதலில் இசுலாமியர் மாற்றுப் பாதையில் செல்லவைக்க முயன்றனர்.
பொதுவழியில்தான் செல்கிறோம் என்று இந்து தரப்பு பாதையை மாற்ற மறுத்துவிட்டது.
அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெரிய சிலை வைக்கமுடியாது,
கோசம் போட முடியாது, வேகத்தைக் குறைக்கமுடியாது, ஆடுவது கத்துவது இருக்காது,
இவை மட்டுமில்லாது போலீசார் முழு ஊர்வலத்தையும் 4,5 இடங்களில் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பர்.
எவனாவது துள்ளினால் அவனை அங்கேயே 'கவனித்து' மறுநாளும் பிடித்துவந்து எச்சரித்து அனுப்பினர்.
நாளாக நாளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்து அமைப்பினர் பெயருக்கு ஏதோ ஒரு ஊர்வலம் என்று நடத்திவந்தனர்.
இளைஞர்களுக்கும் ஆர்வம் குறைந்து கூட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
பெரிதாகப் பேசப்பட்ட ராமர் ரத ஊர்வலம் கூட ஏதோ செங்கோட்டை வழியாக சவ ஊர்வலம் மாதிரி அனாதையாகத்தான் போனது.
ஆனாலும் 'உங்கத் தெரு பிள்ளையார் பெருசா' 'எங்கத் தெரு பிள்ளையார் பெருசா' என்கிற போட்டி மட்டும் இருந்தது.
ஆனால் இந்த முறை எந்த நோக்கத்திற்காக இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறதோ அது நடந்துவிட்டது.
சில இசுலாமிய இளைஞர்களின் முந்திரிக்கோட்டைத் தனத்தால்.
நான் கேள்விப்பட்டு விசாரித்தவரை நடந்தது இதுதான்.
உப்புசப்பில்லாது போய்விட்ட அந்த ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது மாலை எட்டுமணி அளவில் கீழப் பள்ளிவாசல் தெரு முக்கிய சாலையில் சந்திக்கும் இடத்தில் சில இசுலாமிய இளைஞர்கள் திடீரென்று வழியை மறித்துள்ளனர்.
போலீசார் அவர்களிடம் சென்று
"இது அனுமதி பெற்ற ஊர்வலம்,
கட்டுக்கோப்பாக நாங்கள் நடத்தித் தருகிறோம்,
உங்கள் தெருக்குள் வரவில்லை,
வழக்கம்போல பம்ப் ஹவுஸ் சாலை வழியாகத்தான் போகவுள்ளது,
காரணமின்றி இப்படி மறிப்பது சரியில்லை" என்று சமாதனம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஊர்வலத்தில் எவனோ ஒரு பொட்டை கூட்டத்தில் ஒளிந்துநின்று "அல்லா ஒழிக" என்று கத்தியுள்ளான்.
பதிலுக்கு இந்த பக்கம் எவனோ ஒரு பொட்டை இருட்டில் கூட்டத்தின் மத்தியிலிருந்து பிள்ளையார் சிலை மீது கல்லெறிந்துள்ளான்.
பொதுவழியில் ஊர்வலம் போகக்கூடாது என்று மறியல் செய்தது கூட பெரிய தவறில்லை.
அங்கே கல்லெறிந்து பத்துபேரின் மண்டையை உடைத்திருந்தால் கூட பிரச்சனை வந்திருக்காது.
ஆனால் கடவுள் சிலை மீது கல்லெறிந்து இந்து மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியதன் மூலம் இசுலாமியத் தரப்பின் 20 ஆண்டுகால உழைப்பிலும் சகிப்புத்தன்மையிலும் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது.
(அது கரைக்கப்படவுள்ள சிலை என்றாலும் இப்போது அது புனிதமானதாகப் பார்க்கப்படுகிறது)
ஒருவன் கல்லெறிந்ததைத் தொடர்ந்து இந்து தரப்பினர் பதிலுக்கு இசுலாமிய தரப்பினர் மீது கல்லெறிய இசுலாமியர் பலரும் கற்களை சிலையை நோக்கி எறிய நிலைமை கட்டுகடங்காது போய் இருதரப்பினருக்கும் நடந்த கைகலப்பில் பத்துபேர் காயமடைந்தனர்.
இசுலாமியர் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் போலீஸ் வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருதரப்பு விசமிகளும் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மீண்டும் சொலகிறேன்.
வழக்கமாக இந்து தரப்பு கும்பல்தான் வம்பிழுப்பார்கள்.
அடாவடியில் இறங்குவார்கள்.
ஆனால் இந்த முறை அப்படியில்லை.
இசுலாமிய இளைஞர்கள் அவசரப்பட்டுவிட்டனர்.
நடத்துவது ஒரு மதவெறி அமைப்பாகவே இருந்தாலும் ஜனநாயக நாட்டில் முக்கியமான ஒரு பொதுவழியில் ஒரு ஊர்வலம் போகக்கூடாது என்று கூறமுடியாது.
என்னதான் மாற்றுமதம் என்றாலும் அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.
15 நிமிட சகிப்புத்தன்மை இல்லாததால் இன்று கலவரம் உருவாகும் சூழல்.
No comments:
Post a Comment