Wednesday, 2 May 2018

தமிழிய மொழிக்குடும்பம்

தமிழிய மொழிக்குடும்பம்

1856 இல் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிடம் என்று பெயர்வைத்து நூல் வெளியிட்டார்.

ஆனால் அதற்கு இரண்டாண்டுகள் முன்பே 1854 இல் ஜெர்மானிய மொழியியல் ஆய்வாளர் பிரடெரிக் மாக்சு முல்லர் (Friedrich Max Müller ) என்பவர் தமது "The classification of the Turanian languages" எனும் நூலில்  தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு இட்டப் பெயர் தமுலிக (Tamulic) மொழிக் குடும்பம் என்பதாகும்.

இவருக்கும் முன்பு 1847 -லேயே ஆங்கிலேயே இனவியல் ஆய்வாளர் பிரையன் ஓட்குசன் (Brian Houghton Hodgson) இந்தியாவின் பூர்வீக இனமாக தென்னிந்தியரை தமுலியர் (Tamulian) என்றும்
அவர்களின் மொழிக்குடும்பத்தைத் தமுலிய (Tamulian) மொழிக் குடும்பம் என்றும் தம் "Essay the first on the Kocch, Bodo and Dhimal Tribes" எனும் நூலில் பெயரிட்டு குறித்துள்ளார்.

தமிழும் அதன் வழி வந்த மொழிகளும் தமிழிக, தமிழிய என்னும் பெயரால் அழைக்கப்படுவதே சரியாகும்.

கால்டுவெல்லோ தமிழும், அதன் பிற  உறவுமொழிகளும் மூலத் திரவிடம் (Proto- dravidian) என்றொரு பொது மொழியினின்று வந்ததாக பிறழ உரைத்துள்ளார்.
இது தமிழின் பழமையைக் குறைத்து பிற தென்னிந்திய மொழிகளுக்கு ஈடாகத் தமிழையும் ஒரு சேய்மொழியாக வைக்கும் முயற்சியாகும்.

தமிழுக்கு மூலமாக எம்மொழியும் இல்லை.
அப்படி இருந்ததாக கால்டுவெல் நிறுவவும் இல்லை.

கால்டுவெல்லின் தடுமாற்றம் அவரது நூலில் தலைப்பிலேயே தெரிகிறது.

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" எனுமாறு (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) குழப்பமான ஒரு பெயரையே வைத்துள்ளார்.

தமிழர் வரண (Race- மரபின) அடிப்படையிலும் தமிழர்தான்.
தேசிய இன(Ethnicity) அடிப்படையிலும் தமிழர்தான்.

திராவிடர் என்ற இல்லாத இனமாகத் தமிழர் உட்பட எவரையும் திரித்தல் கூடாது.

தமிழ் மொழியைத் தமிழென்றும்,
தமிழினத்தாரைத் தமிழரென்றும்,
தமிழ் வழிவந்த மொழிகளை தமிழிக(Tamilic) மொழிகள் என்று வழங்குவதே சரியானதாகும்.

(பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: அழகன் தமிழன் )

No comments:

Post a Comment