சென்னை மாகாணத்தை மொழிவழியாக பிரிக்கக்கூடாது - ஈ.வே.ரா
"சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழியாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டுவார்களானால், வலியுறுத்துவார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச்சாரத்துக்கும் திராவிட சமுதாயத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன்"
- ஈ.வே.ரா விடுதலை 01.08.1948
ஈ.வே.ராமசாமி ஏதோ 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கி தமிழர் உரிமைக்காகப் போராடினார் என்றும்
தனித்தமிழ்நாடு கேட்டார் என்றும் திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அது பொய்.
(தேடுக: தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் வேட்டொலி
தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி வேட்டொலி)
தற்போது மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது.
2011 ல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது.
அது அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே (தேவிகுளம் - பீர்மேடு) தமிழர் பெரும்பான்மை மாவட்டம் ஆகும்.
தேனி தமிழரும் இடுக்கி தமிழரும் லட்சக்கணக்கில் திரண்டு இடுக்கி தமிழகத்துடன் இணைய பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
அப்போது தமிழ்தேசியப் பேரியக்கம் தலைவர் திரு.மணியரசன் பல்வேறு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்பொது அவர் வெளியிட்ட அறிக்கையில் திராவிடம் பேசுவோர் அன்று முதல் இன்றுவரை தமிழர் இனவுணர்வை திசைமாற்றி எப்படியெல்லாம் இரண்டகம் செய்தனர் என்று விரிவாக கூறியுள்ளார்.
(அவற்றில் மேற்கண்ட சான்று மட்டும் இதுவரை எனக்கு காணக்கிடைக்காத ஒன்று.
அதனால் இங்கே பதிகிறேன்.
இது ' ஈ.வே ரா மண்மீட்பில் உதவினாரா? ' என்ற பதிவுடனும் சேர்க்கப்படும்)
No comments:
Post a Comment