கடைசி மகன்
(மென்மையான மனங்கொண்டோர் படிக்கவேண்டாம்)
அண்ணன கொன்னுட்டாங்கனு சேதி வந்துச்சு!
ஐயையோனு பதறி போய் நடிகனுக்கு ஒட்டிட்டிருந்த போஸ்டர அப்டியே போட்டுட்டு விறுவிறுனு வண்டிய பிடிக்ட ஓடினேன்!
பல வருசம் கழிச்சு போறேன்.
இருட்டுல சரியா பாத கூட சரியா தெரியலயே!
ஓட்டமும் நடயுமா போனேன்.
என் தெருவுல எங்க அண்ணங்களோட பிள்ளைங்கள்லாம் ஒண்ணுகூடி 'எங்க மாட்ட கொடு'னு அழுதுகிட்டு இருந்துச்சுக.
போலீஸ்காரன் கொள்ளிக்கட்டய கைல வச்சிகிட்டு அவங்கள வெரட்டிட்டு இருந்தான்.
அவன தள்ளிவிட்டுட்டு வாசல்படியேறி பாத்தேன்.
இருட்டுல எ வயசான அம்மா கட்டாந்தரைல படுத்திருந்தா.
எ அம்மாவா இது?
மெலிஞ்சுபோய்
கண்ணு நெலகுத்தி
வாய்பிளந்து
கண்ணோரத்துல கண்ணீர் வடிய
ஒடம்பெல்லாம் காஞ்சுபோய்
மாராப்பு கூட இல்லாம
ஈயெல்லாம் மொய்க்க
என்ன பெத்த அம்மா கீழ கெடக்காளே
அம்மானு கதறிட்டு உள்ள போக பாத்தேன்
போலீஸ்காரன் பின்னால இருந்து என்ன புடிச்சிகிட்டான்
இருட்டுல நல்லா உத்துபாத்தேன்
வடக்கால ஒருத்தன் எங்கம்மாவுக்கு வச்சிருந்த தண்ணிய அவன் வீட்டுக்கு எடுத்துட்டு போனான்.
வடக்கால இன்னொருத்தன் எங்கம்மாவுக்கு வச்சிருந்த பால எடுத்து அவன் குடிச்சிட்டு இருந்தான்.
கிழக்கால எங்க வீட்டு பெரிய தண்ணி தொட்டிய ஒருத்தன் இடிச்சிட்டு இருந்தான்.
தெற்கால எங்க அண்ணன் குடும்பத்த கொன்ன மிலிட்ரிகாரன் என் தங்கச்சிய மூலைல தூண்ல கட்டிபோட்டுட்டு இருந்தான்.
வீட்டு தரைய தோண்டி செங்கல எடுத்துகிட்டு இருந்தான் ஒருத்தன்.
எங்கம்மா சாப்பாடு கீழ கொட்டி கெடந்தது.
அதுல ஒரே பூச்சிமருந்து நாத்தம்.
ஒரு காவி கலர் நாய் மெதுவா பின்வாசல் வழியா உள்ள வந்து அம்மா மேல ஏறி நின்னு எங்க அம்மாவோட வத்திபோன நெஞ்ச கடிச்சு ரத்தத்த உறிஞ்ச ஆரம்பிச்சது
'டேய் விடுடா! என்னடா பண்ணுறீங்க எங்க எங்கம்மாவ'னு நா திமிருனேன்.
ஒரு எச்ச வந்து சொன்னான் அது பால்தா குடிக்குது.
எங்க வீட்டுலயே வளர்ந்த அண்ணா வந்தான்.
'அம்மாவ நீ காப்பாத்துவனு ஒன்ன நம்பிதானே விட்டுட்டு போனேன்.
நம்ம அம்மாவ காப்பாத்து அண்ணா' னு கெஞ்சுனேன்
'ஒங்க அம்மா ஒடம்புல 3% குடுமி வச்ச கிருமி இருக்கு,
இந்த விச திரவத்த ஊசியா போட்டா சரியாயிரும்'னு விச ஊசிய ஏத்துனான்.
என் குடிகார தம்பி அங்கே குப்புற கெடந்தான்.
வாய்ல இருந்து எச்சி ஒழுகுச்சு.
பைத்தியம் மாதிரி முழிச்சான்.
'டேய் நம்ம அம்மா எப்பிடி கெடக்கா பாருடா எப்டியாவது காப்பாத்துடா'னு கத்துனேன்.
'அண்ணே அம்மாவ ரெண்டா அறுப்போம் ஒரு பக்கம் எனக்கு'ன்னு ஒளறுனான்.
'என்னடா ஆச்சு எல்லாவனுக்கும்?!
இத்தன பேர் கண்ணுமுன்னாலயே இவ்வளவு அநியாயம் நடக்குதே!
எங்கம்மாவ காப்பாத்த யாருமே இல்லையா?'
அம்மா கண்முழிச்சா.
அம்மாவாலதா வாய் பேசமுடியாதே,
'காப்பாத்து'னு சொல்றமாதிரி என்ன பாத்து கைய நீட்டுனா
கைல குழாய் போட்டு ரத்தத்த உறிஞ்சிட்டு இருந்தானுக.
எனக்கு கண்ணுமண்ணு தெரியாம கோவம் வந்துருச்சு
திமிரிகிட்டு போலீஸ்காரன தள்ளிவிட்டேன்.
அவன் கொள்ளிகட்டை தூரபோய் விழுந்துச்சு.
அவன் துப்பாக்கிய புடுங்கி எல்லாரயும் சுட்டேன்.
துடிச்சிட்டு இருந்த போலீஸ்காரன ஆத்திரம் தீர செவுள்லயே அடிச்சு அவனுக்கு உயிரோட கொள்ளிவச்சேன்.
'நீ எங்க அம்மாவ காப்பாத்தாம எதிரிகளுக்காடா நாய்வேல பாப்ப! மானங்கெட்ட நாயே சாவுடா'
காவி நாய் மண்டைல குண்டுபட்டு ஒடனே செத்துருச்சு.
'உன்ன உள்ளவிடாம இருந்ததுதா சரி'னு அத தூக்கி வெளிய எறிஞ்சேன்.
மிலிட்ரிகாரன் கால்ல பட்ட காயத்தோட ஓட பாத்தான் மிதிச்சு கீழ தள்ளி அவன் சங்குல காலவச்சு மிதி மிதினு மிதிச்சு கொன்னேன்.
'எ அண்ணனயும் அண்ணன் பிள்ளைங்களையும் கொன்னு வாய்க்கால்ல போட்டவன் நீதானடா சாவுடா சாவு'
தண்ணிய தொட்டிய இடிக்க வந்தவன் கழுத்துல குண்டு பாஞ்சு கீழ கெடந்தான்.
அந்த தண்ணி தொட்டிலயே அவன அமுக்கி கடப்பாறய அவன் முதுகுல சொருவி கொன்னேன்.
'ஓ வீட்டு குப்பய கூட எங்க வீட்டுல வந்து போடுற பன்னி!
ஒன்ன அப்பவே வெட்டிருக்கணும் கொலகாரப்பாவி'
பால் குடிச்சிட்டு இருந்தவன் வாய்ல நொறதள்ள ஊர்ந்து ஊர்ந்து போய்ட்டு இருந்தான்.
அவன நெஞ்சுல மிதிச்சு கீழ தள்ளி
'ஒன்னோட மகன எங்க மகனா வளத்தோமே
ரெண்டுபேருமே துரோகம் பண்ணிட்டீங்களே நாய்களா' னு அவன் மகன தரதரனு இழுத்துட்டு வந்து ரெண்டு பேரயும் ஒன்னாபோட்டு நல்லா ரத்தம் வர்றவர அடிச்சு ஒதச்சு
அவனுக வாய்ல வெச பாட்டில தெறந்து திராவகத்த ஊத்திவிட்டேன்.
துடி துடினு துடிச்சுட்டு அடங்கிட்டானுக.
எங்க தண்ணிய கொண்டுபோனவன் வீட்டுக்கு போனேன்.
வீடுமுழுக்க பெரிய பெரிய தொட்டி அது நெறய தண்ணி.
எங்கம்மா அங்க தண்ணியில்லாம தவிச்சிட்டு இருக்கா.
ஒனக்கு வீடுமுழுக்க வீணா தண்ணி எதுக்கு?!
அவன் முடிய பிடிச்சு தரதரனு தெருவுக்கு இழுத்துட்டுவந்து
'எ மீசக்கார அண்ணன பாத்தா ஒண்ணுக்கு போற கன்றாவி நாய் நீ,
ஒனக்கு இவ்ளோ திமிரா'னு அவன் மூஞ்சில குத்தி மூக்க ஒடச்சு,
அவன நடுரோட்டுல போட்டு அடிஅடினு அடிச்சு குத்துயிரும் கொறயுயிருமா துடிச்சிட்டிருந்த அவன் ஒண்ணுக்கு பேஞ்சு
தலைல பெரிய கல்ல தூக்கிப்போட்டு கொன்னேன்.
காவிநாய் செத்ததும் தெருநாயெல்லாம் சேந்து நூறு நாய்கிட்ட கூடி என்ன பாத்து கொலச்சதுக.
பெரிய பெரிய கல்லா எடுத்து வரிசையா எறிஞ்சேன்.
நாலஞ்சு அடிபட்டதும் வீல்வீல்னு கத்திட்டு ஓடிட்டுதுக.
'எ சின்ன அண்ணங்கிட்ட அடிவாங்குன நெனவில்ல? நாய்ங்களா! நூறுநாய் இருந்தா எங்க ஆறுபேர எதிர்க்க துணிச்சல் வந்துட்டுதா?
எங்க மூத்த அண்ணன பேங்க் வாசல்ல வச்சு கடிச்சு கொன்னப்பவே ஒங்கள லாரி வச்சு ஏத்திருக்கணும்.
காவி நாய்ங்க கடிச்சதாலதா எல்லாரும் வெறிபிடிச்சு பைத்தியம்பிடிச்சு போச்சு.
எல்லாத்துக்கும் இந்த நாய்கதான் காரணம்.
இனிமே இந்த பக்கம் வந்தீங்க அருவாளால பொலி போட்ருவேன்'
வீட்டுக்குள்ள போனேன்.
எ குடிகார தம்பி கெடந்தான்.
அம்மாவ காப்பாத்தாத நீ துரோகிடா
மொதல் எதிரி நீதான்டா
ரம்பத்த எடுத்துட்டு வந்து அவன ரெண்டா அறுத்துபோட்டேன்.
'அம்மாவ ரெண்டா அறுக்கணுமா? ஓ சுயநலம் தெரிஞ்சிருந்தா கருவுலயே ஒன்ன அறுத்துருப்பேன்'
எந்தங்கச்சிய போய் பாத்தேன்.
அதுல உயிர் இல்ல.
மேல துண்டுமட்டும் போட்டு கயிறால கைகட்டி கெடந்துச்சு.
'எ ராசாத்தி!
செத்துட்டியேம்மா!
கொடூரமா பண்ணிட்டானுகளே!
இந்த அண்ணனால எதும் முடியாம போச்சே!
அந்த மிலிட்டரிகாரன் குடும்பத்துல ஒருத்தன் கூட மிஞ்சமாட்டான்!
இது ஓ மேல சத்தியம்!'
அம்மாகிட்ட போனேன்.
கைல அள்ளி எடுத்து நெஞ்சோட அணச்சிகிட்டேன்.
நல்லவேள அம்மா ஒடம்புல இன்னும் மூச்சு இருந்தது.
'எ அம்மாஆஆஆஆஆஆ!
என்ன பெத்த தாயீ !
கடசி நேரத்துல வந்து ஓ உயிர மட்டுந்தானே காப்பாத்த முடிஞ்சது.
கண்டவனெல்லாம் நம்பி சோறு போட்டியே!
வந்தவனயெல்லாம் வாழவச்சியே!
வீட்டுக்குள்ள அடுத்தவனுக்கு எடம் குடுத்தது எவ்வளவு பெரிய தப்பு பாத்தியா?'
'கவலப்படாத நா வந்துட்டேன்.
ஓ கடசி மகன் வந்துட்டான்'
இனி எவனாவது எங்கம்மாவோட நெழல தொட்டாலும்.....
சங்க அறுத்துருவேன்!
கொடல உருவிருவேன்!
வெட்டி வீசிருவேன்!
உயிரோட கொளுத்திருவேன்!
No comments:
Post a Comment