Friday 7 July 2017

தமிழக விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை - விரைவில் பஞ்சம்

தமிழக விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை
- பஞ்சம் வந்தபோது இருந்த நிலை

141 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு

"தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தி 65 சதவீதம் வீழ்ச்சி"

* பருவமழை பொய்த்துவிட்டது
* ஏரி குளங்களில் தண்ணீர் இல்லை
* காவிரி தண்ணீரும் வரவில்லை
* வர்தா புயல் பாதிப்பு
* 2016-17 ல் 60 லட்சத்து 32 ஆயிரம் டன் மட்டுமே உணவுதானியம் உற்பத்தி
* இது அரசு நிர்ணயித்த இலக்கில் 3 ல் 1 பங்கு
* அதாவது 65% வீழ்ச்சி கடந்த 141 ஆண்டுகளில் இப்படி வீழ்ச்சி நடந்ததில்லை
* இதன் பாதிப்பு (அதாவது பற்றாக்குறை) இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்

என்று விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டசபையில் கூறினார்.
------
அதாவது வரும் இரண்டு ஆண்டுகளில் விளைச்சல் நல்லபடியாக அமைந்தாலும் பற்றாக்குறை இருக்கும்.

1876 ல் பஞ்சம் (The great madras famine of 1876) வந்து அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் 50 லட்சம் தமிழர்கள் இறந்தனர்.
20 லட்சம் மக்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறி தோட்டக்கூலிகளாக ஆங்கில ஆட்சி நடந்த நாடுகளுக்கு போனார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர் செய்த சுரண்டலும் விவசாயத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டாமல் இருந்ததுமே!

அந்த பரிதாப நிலை மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஆளும் ஹிந்தியரும் அவர்களை ஆட்டுவிக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களுமே!
இப்படியே போனால் தமிழத்தில் பஞ்சம் விரைவில் ஏற்படும்.

சோமாலியா போல விவசாயம் அழிந்து பட்டினிச்சாவு வந்தபிறகு ஆயுதம் தூக்கி போராடி எந்த பலனும் இல்லை.

முடிவை இப்போதே எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment