சடையவர்மன் சுந்தர பாண்டியன்
முதலில் வடுகர் படைத்தலைவனை அனுப்பி போர்தொடுத்த சேரமன்னனை அவனது நான்கு மடங்கு பெரிய படையோடு மோதி முறியடிக்கிறான்.
அதன்பிறகு அரை வடுகர்களாகிவிட்ட (சாளுக்கிய) சோழர்கள் மீது போர்தொடுத்து அவர்களை அடக்கிவிட்டு
அப்படியே வடமேற்கில் ஒய்சளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு
வட கிழக்கில் பல்லவ வம்சாவழி காடவர்களை வென்று அடக்குகிறான்.
தெற்கே ஈழத்தில் நுழைந்து பாதி தீவை பிடிக்கிறான்.
இறுதியாக வடமேற்கில் தெலுங்கு சோழர்களை முற்றாக அழிக்கிறான்.
நெல்லூரில் வீராபிசேகம் செய்துகொள்கிறான்.
இராசராசன் இராசேந்திரன் ஆகியோரை விட அதிக சாதனைகள் புரிந்தவன் இவனே!
அன்றைய தமிழ்தேசியத்தின் வடிவம்!
(எப்படி மண உறவு மூலம் சோழர்களை கலப்பாக்கி வீழ்த்தினார்களோ!
அதேபோல பாண்டிய வாரிசுகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதவிட்டு வீழ்த்தினார்கள்)
No comments:
Post a Comment