பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள்,
தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு சேந்தன்(சிவந்தன்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.
சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும்.
வேட்டைத்தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள்.
குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.
குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின.
முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும் தோன்றியது.
கந்து என்றால் தூண், கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.
'கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்"
என்ற புறநானூற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்கு
காட்டலாம்.
- பாவாணர்
No comments:
Post a Comment