சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்
அலங்காநல்லூர் மக்கள் முதல்வரை உள்ளே விடவில்லை.
சாலைகள் அனைத்தையும் தடை ஏற்படுத்தி அடைத்துவிட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவானவர் இருசக்கர வாகனத்தில் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.
காவல் அதிகாரிகள், அரசு அழைத்து வந்த மாடுபிடிவீரர்கள் மாடுகள் என யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை.
முதல்வர் அறிவித்தபடி அவரால் வாடிவாசலில் சல்லிக்கட்டு நடத்த விடவில்லை.
நிரந்தர தீர்வுடன் வந்தால் மட்டுமே உள்ளே விடுவோம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இதையே சென்னையில் இருப்போர் செய்யலாம்.
சென்னையை சுற்றி பத்து சாலைகளை அடைக்கவேண்டும்.
இப்போதிருக்கும் கூட்டத்தை விட குறைவான கூட்டமே போதும்.
ஒரு சாலைக்கு 10,000 முதல் 20,000 பேர் வரை போதும்.
வாகனங்களை குறுக்காக நிறுத்தி தரையில் அமர்ந்துகொள்ளுங்கள்.
விமான நிலையத்தையும் சுற்றி முற்றுகை போட்டுவிட்டால் சென்னை முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
அதன்பிறகு மோடி வந்து காத்துகிடக்கவேண்டிய சூழல் உருவாகும்.
வெற்றிக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம்.
ஜனவரி 26 க்குள் ஹிந்தியா நமக்கு பணிந்துதான் ஆகவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினம் நடக்காதுபோய் அவமானப்படவேண்டி இருக்கும்.
ஆக மூன்றே நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடியுங்கள்.
இதோ வரைபடம்
19 ஜனவரி, 11:23 மணிக்கு ஏற்கனவே போட்ட அதே வரைபடம்தான்.
அதில் விமான நிலையத்தையும் குறித்துள்ளேன்.
No comments:
Post a Comment