திருச்சிராப்பள்ளி - தமிழர்நாட்டின் தலைநகரம்
பலரும் சென்னைக்கு ஒரு தலைநகரமாக இருக்க தகுதி இல்லை என்று கூறுகிறார்கள்.
அது உண்மைதான்.
சிலர் பல தலைநகரங்களை அமைப்பது பற்றி கூறுகின்றனர்.
அதாவது அரசியல் தலைநகர், பொருளாதாரத் தலைநகர், இராணுவத் தலைநகர் என்றவாறு.
அது சரிவராது என்பது என் கருத்து.
சென்னைக்கு மாற்றாக மதுரையையும் திருச்சியையும் சிலர் முன்வைக்கின்றனர்.
ஓர் ஊர் நகரமாக உருவாக, அது முக்கிய சாலைகள் வெட்டிக்கொள்ளும் இடத்தில் இருக்கவேண்டும்.
அதுவே தலைநகராக உருவாக அது நாட்டின் மத்தியில் இருக்கவேண்டும்.
ஆறு ஓடும் இடமாகவும்
நிறைய மக்கள் குடியேற வசதியாக சமதள பரப்பாகவும் இருக்கவேண்டும்.
அந்த வகையில் திருச்சி தலைகரமாக இருப்பது சரிதான்.
தமிழகம் மட்டுமே நமது நாடு கிடையாது.
நமது நாடு கடல் தாண்டி இலங்கைத் தீவின் தென்கிழக்கு முனை வரை நீண்டுள்ளது.
மதுரையைவிட திருச்சிராப்பள்ளிதான் தலைநகராக இருப்பதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.
ஏனென்றால் வடக்கு-தெற்கு எல்லைகளான நெல்லூரும் அம்பாறையும் திருச்சியிலிருந்து சமமான தொலைவில் உள்ளன.
மதுரையும் அவ்வாறே.
மேற்கு எல்லையான பாலக்காடு மதுரையை விட திருச்சிக்கு நேர்க்கோட்டில் உள்ளது.
அதே போல திருச்சியிலிருந்து முக்கிய நகரங்களான மைசூர், பெங்களூர், சென்னை, திரிகோணமலை, திருவனந்தபுரம் ஆகியன சமமான தொலைவில் உள்ளன.
இவற்றை விட அருகில் சம தொலைவில் கோயம்புத்தூரும், தருமபுரியும், விழுப்புரமும், பாண்டிச்சேரியும், யாழ்ப்பாணமும், திருநெல்வேலியும், இராமேஸ்வரமும் உள்ளன.
அதைவிட மிக நெருக்கமாக மதுரையும் திண்டுக்கல்லும் கரூரும் சேலமும் தஞ்சாவூரும் புதுக்கோட்டையும் உள்ளன.
இவை தலைநகருக்குத் துணைநகரங்களாக உருப்பெற இயலும்.
மிக முக்கியமாக காவிரி ஆறு ஓடுகிறது.
ஆக சிராப்பள்ளியே தமிழர்நாட்டின் தலைநகராக விளங்க மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
இதை நான் வெளியிட்ட "அகன்ற தமிழர்நாடு" வரைபடத்தில் குறித்துமிருந்தேன்.
No comments:
Post a Comment