ஆஸ்திரேலியாவில் தமிழ். ஏன்?
இந்த தவறைத்தான் அனைவரும் செய்கிறோம்.
வெளிநாட்டுக்காரனும் தமிழை பேச வேண்டும் என்று நினைக்கிறோம்.
அதுதான் தவறு.
அதனால்தான் தமிழ் பேசுபவனை எல்லாம் நம் ஆள் என்று நினைத்து அனைத்தையும் கொடுத்துவிடுகிறோம்.
தமிழ்ச் சங்கங்கள் பல வற்றிலும் வேற்றினத்தாரையும் இணைக்கிறோம்.
இதனால்தான் நாம் உருப்படாமல் போனோம்.
அவர்கள் மொழி அவர்களுக்கு நம் மொழி நமக்கு.
தமிழர்களிடம் தமிழைக் கொண்டு சேர்ப்போம்.
தமிழ் நமது தனி சொத்து என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.
வடயிந்தியாவுக்குப் போங்கள்.
அங்கே மற்ற இனங்களுடன் இணைப்புமொழியான இந்தியிலேதான் பேசுவார்கள்.
தன் இனத்தின் மத்தியில் பிறந்த வளர்ந்த வேற்றுமொழிக்காரன் தன் மொழியை அறிந்திருந்தாலும் சரி,
அவனிடம் தமது தாய்மொழியில் பேசமாட்டார்கள்.
தம் தாய்மொழியை மற்றவர் பேச அனுமதிப்பதில்லை ஆதலால் அங்கே மூன்று நான்கு தலைமுறையாக வசிக்கும் வேற்றினத்தாரை அவர்களால் அடையாளம் கண்டு நடக்கமுடிகிறது.
ஆக தமிழரல்லாதார் தமிழ் பேசினால் இனி பாராட்டவேண்டாம்.
இன்று நமக்கு அமெரிக்க வரலாறும்
ஜெர்மனிய வரலாறும்
இரஷ்ய வரலாறு தெரிகிறது.
ஆங்கில இலக்கணமும்
பிரஞ்சு இலக்கியமும் இங்கே பேசப்படுகிறது.
எப்படி?
அவர்கள் ஒவ்வொரு தமிழனாக கொஞ்சி கொஞ்சி பரப்பினார்களா?
இல்லை.
அவர்கள் வல்லரசாக உயர்ந்தனர்.
பல சாதனைகள் புரிந்தனர்.
நாம் இன்று தேடிப்போய் அவர்களைக் கற்கிறோம்.
நம்மை போல கெஞ்சி கெஞ்சி கொஞ்சி கொஞ்சி தமிழை கொண்டுசேர்க்க முயலவில்லை.
நாம் வல்லரசாக உயர்ந்தால்
மட்டுமே நம்மை நம் மொழியை நம் கலையை மற்றவர்கள் மதிப்பார்கள்.
தேடித் தேடி படிப்பார்கள்.
எனவே தமிழ் வரலாறைத் தமிழருக்கு கொண்டு சென்று
தமிழரை எதாவது சாதிக்கவையுங்கள்.
தமிழரை மட்டும் திரட்டுங்கள்.
வேற்றினமோகம் வேண்டாம்.
அவர்களுக்கு விருப்பமென்றால் அவர்களே வந்து கற்கட்டும்.
நாம் கையேந்தி போகவேண்டாம்.
நம் இனத்தை ஒன்று சேர்ப்போம்.
நம் பெருமை நம் வரலாற்றில் இருந்தால் மட்டும் போதாது.
நடப்புக்காலத்திலும் இருந்தால்தான் வரலாறுக்கே மதிப்பு.
இப்போது நீங்கள் செய்வது
ஒரு பிச்சைக்காரன் அவனது தாத்தாவும் பாட்டனும் பெரிய ஆளாய் இருந்ததைப் பற்றி பேசுவதன்மூலம் தன் மீது மரியாதை ஏற்படுத்த முயல்வது போன்றது.
தமிழும் வளரவேண்டும்.
தமிழனும் வாழவேண்டும்.
அதுதான் உண்மையான வளர்ச்சி.
"என் தாய்மொழியை என்னை விட அழகாக நீ பேசுகிறாய் என்றால் என்னை அடிமைப்படுத்த விரும்புகிறாய் என்று பொருள்"
- சீன சிற்றரசன் டாங்
No comments:
Post a Comment