தமிழ்ப் பேசும் இசுலாமியரே,
உங்களுக்கு ஒரு தமிழ்ச் சகோதரனின் வணக்கம்.
சமீபத்தில் காசுமீரின் விடுதலைப் போராளியான திரு.யாசின் மலிக் அவர்களை மதிப்பிற்குரிய திரு.சீமான் அவர்கள் தமிழகத்தில் பேச அழைத்து வந்தார்.
எந்தவிதத்திலும் தவறேயில்லாத, வரலாற்றில் கரையாமல் நிலைத்து நிற்கப்போகிற அந்த நிகழ்வில் ஏவப்பட்ட வன்முறையும் அதன் தொடர்பான கடுமையான விமர்சனங்களும் அனல்பறக்கும் இந்நேரத்தில்
நான் யோசிப்பது என்னவென்றால்,
ஏன் இசுலாமியர் மீது மட்டும் இத்தனை விமர்சனம்?
இந்தக்கேள்வி மனதை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
தமிழ்த் தாயின் பிள்ளைகளில் இரு சமூகம் மட்டும் மற்றத் தமிழர்களிடமிருந்து தூரமாக விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப் பார்ப்பனரும் தமிழ் இசுலாமியரும் மற்றத் தமிழரிடமிருத்து அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
என் அறிவுக்கு எட்டியவரை முடிவேயில்லாத ஒரு கேள்விக்கு இங்கே விடைதேட முயல்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மருகால் தெருவில் ஒரு முனையில் தேவாலயமும் மறுமுனையில் பள்ளிவாசலும், ஒருபக்கத்தில் சுடலைமாடன் கோவிலும் மறுபக்கத்தில் இலங்கத்தம்மன் கோவிலும் முத்தாரம்மன் கோவிலும், நடுவில் சிறிய ராமர் கோவிலும் இருக்கும், மூன்று மதத்தினரும் அருகருகே வாழும் ஒரு தெருவில் பிறந்தவன் நான்.
சுவையான நோன்புக்கஞ்சி வாங்க சிறுவயதில் பள்ளிவாசலுக்கு சென்றிருக்கிறேன்.
சிஎஸ்ஐ தேவாலயம் நடத்தும் பள்ளியில் படித்தபோது மழையில் பள்ளிக்கூரை ஒழுகும்போது தேவாலயத்தினுள் அடைக்கலமும் புகுந்துள்ளேன்.
தாத்தா அருள் வந்து சாமியாடும் தளவாய்மாடன் கோவிலுக்கு பால்குடமும் எடுத்திருக்கிறேன்.
பாங்கு ஓதும்போது அங்குமிங்கும் ஓடாமல் ஓரிடத்தில் நிற்கவும்,
தேவாலயத்தில் மேடைமீதேறி பைபிளின் வசனத்தை வாசிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டேன்.
என் உயிர்நண்பர்களில் என் பள்ளித்தோழர் ஒரு கிறித்தவரும் என் கல்லூரி நண்பர் ஒரு உருதுமுசுலீமும் அடக்கம்.
இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் நான் எந்தவகையிலும் எந்த மதத்தையும் குறைகூற இதை எழுதவில்லை என்பதைத் தெரிவிக்கத்தான்.
தவிர நான் கடவுள் நம்பிக்கையை வெறுக்கும் தீவர நாத்திகன்.
என்னுடைய அனுபவத்திலிருந்து நான் அறிந்துகொண்டதைக் கூறுகிறேன்.
என்னதான் தமிழ்இசுலாமியர் மற்றத் தமிழரோடு தமிழராகக் கலந்து வாழ்ந்தாலும் அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
அதுவும் ஒரு தீவிரத் தமிழ்த் தேசியவாதியாக தமிழ்இசுலாமியரை பார்க்கும்போது எனக்கு வேதனையாகவே உள்ளது.
அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை புறக்கணித்து மெல்ல மெல்ல அராபியர்களாக மாற்றப்பட்டு வருவதாக எனக்குப் படுகிறது.
எனது தாய்பிறந்த ஊரான செங்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் இந்துத்துவ மனப்பான்மையும் வேரூன்றி வருவதைப் பார்க்கும்போது அச்சமே உண்டாகிறது.
வடயிந்தியாவில் உதவிப்பொறியாளராகப் பிழைப்பு நடத்திவரும் நான் இங்கு இந்து-முசுலீம் மதவெறி அதிகமாக மக்கள் மனதில் வேறூன்றி இருப்பதையும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் அத்தகைய மனப்பான்மை இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டவன்.
இருந்தாலும் தமிழ்இசுலாமியர் இவ்வளவு அந்நியமாகத் தெரியக் காரணம் என்னவென்று யோசித்து பார்த்தபோது என் மூளைக்கு எட்டும் காரணங்களைக் கூறுகிறேன்.
முதலில் இசுலாமியர் யாரும் தமது தாய்மொழியில் பெயர் வைத்துக்கொள்வதில்லை.
அவர்கள் இசுலாமிய மகான்களின் பெயரை வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை ஆனால் அவர்கள் சாதாரணப் பெயரை அரபியில் வைத்துக்கொண்டுள்ளனர்.
சாதிக் பாட்ஷா- உண்மை அரசன்
கமால்- திறமையானவன்
ஜமீலா - அழகி
சுல்தான்- மன்னன்
மேற்கண்ட பெயர்களுக்கும் இசுலாமிய மதத்திற்கும் இசுலாமிய தலைவருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
பிறகு ஏன் சம்பந்தமே இல்லாத அராபியச் சொற்களில் பெயர்வைக்கவேண்டும்.
மற்ற மதத்தவரும் வேறுமொழிப்பெயர்களை வைக்கின்றனரே என்று கூறி மழுப்பவியலாது.
கிறித்துவர்களும் அழகானத் தமிழில் பெயர்வைத்துள்ளனர்.
செல்லத்துரை, அருள்செல்வி, அடைக்கலம்,பேரின்பம் என்றெல்லாம் கூட பெயர் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இசுலாமியர் 99.99% அராபியப் பெயர்களை வைத்துள்ளனர்.
இன்னொரு காரணம் தமது பிள்ளைகளை பள்ளிவாசலுக்கு அனுப்பி அரபி அல்லது உருது படிக்கவைப்பது,
இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தாய்மொழியைப் போலப் பற்றுடன் சொல்லிக் கொடுக்கக் காரணம் எனக்கு விளங்கவில்லை.
எங்கள் தெருவில் அரபி கற்றுக் கொடுக்கவே இரண்டு பெண்களை அழைத்துவந்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அதுதான் அரபிக் கல்லூரியாம்.
அந்தப் பெண்களை கணவரைத் தவிர யாரும் பார்க்கக் கூடாதாம்.
உலகில் வேகமாகப் பரவிவரும், அடிப்படையில் ஒரு சீர்திருத்த மார்க்கமான இசுலாம் இப்படி ஒரு கட்டாயக் கல்வியை வலியுறுத்தாது என்று நான் நம்புகிறேன்.
மூன்றாவது நெருடல் தமதுப் புனித நூலை பாதித்தமிழும் பாதி அரபியும் கலந்து மொழிபெயர்த்து வைத்திருப்பது.
குர்ஆன் மிகச்சிறந்தநூல் என்று பலரும் புகழ்வதைக் கேட்டு அதைப்படிக்க முயன்றேன்.
அதிலே பாதி அரபிச்சொற்களால் நிறைந்திருந்தது.
படிக்கப் படிக்க எரிச்சலே மிஞ்சியது.
கிறித்தவர்கள் தமது வேதநூலையே தமிழில் மொழிபெயர்த்து அதைக் கற்றுக் கொடுக்கும்போது இசுலாமியர் அதை ஏன் செய்யவில்லை?
மொழிபெயர்ப்பில் முழுப் பொருள் சிறிது மாறிவிடும் என்று சப்பைக்கட்டு கட்டக் கூடாது.
தமிழில் அத்தகைய சொல்வளம் இல்லையா என்ன?
இதே காரணத்தை வைத்தே ஆரியத்தால் சமசுக்கிருதம் தமிழரின் சாபக்கேடாக தமிழர்தலையில் கட்டப்பட்டது.
கிறித்துவர் வேதநூலில் தனிநபர் பெயர்களைக்கூட தமிழ்ப்படுத்த முயன்றுள்ளனர்.
ஜீசஸ்- ஏசு
ஜான்- யோவான்
மேத்யூ- மத்தேயு
பிறகு ஏன் வேற்றுமொழிக் கலப்பேயில்லாத ஒரு புனிதநூலை உருவாக்க இயலாது ?
மற்றொன்று பெண்கள் மீதான அடக்குமுறை.
பள்ளிவாசலுக்குப் போக பெண்களுக்கு முழுஉரிமை அளித்துள்ளது இசுலாம்.
ஆனால் எந்த பெண்ணும் பள்ளிவாசலுக்குப்போய் நான் பார்த்ததேயில்லை.
தேவாலயத்திற்கு பெண் பிரசங்கிகளே மேடையேறி பிரச்சாரம் செய்யும்போது பள்ளிவாசலில் ஏனிப்படி?
தவிர சித்திரை மாதவெயிலில் பெண்கள் உடையணிந்து அதன்மேல் வெப்பத்தை ஈர்க்கும் புர்க்கா (அ) பர்தா அணிந்துகொண்டு செல்வதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. நாகரீகமான உடையணிந்தால் போதாதா?
நான்காவது தமது கலாச்சாரத்தை மறந்தது.
வணக்கத்திற்குப் பதிலாக குதாஹாபிஸ் சொல்வது,
திருமண சடங்குகள் ஈமச்சடங்குகளில் தனிமுறை, உறவுமுறைகளில் தனிவழக்கம் , தாய்தந்தையை வேற்றுமொழியில் அழைப்பது என்று. ஆனாலும் தமிழ்இசுலாமியர் தனித்தன்மையான சில தமிழ்ச்சொற்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதையும் மறுக்கவியலாது.
ஐந்தாவது, தோற்றம்;
அராபியர் போல உடையணிவதும், மீசையில்லாதத் தாடியும், தோளில் துண்டு அணியும் முறை, சாரம்(கைலி) அணியும் முறை, என்று வேறுபட்டுத் தோற்றமளிப்பதை விரும்புகின்றனர்.
எனக்கும் தெரிந்து மற்ற மக்கள் இசுலாமியரை அந்நியராக நினைக்கக் காரணம் இத்தகைய மாறுபட்டத் தோற்றமேயாகும்.
தமிழ் மக்கள் அத்தனை மதத்தையும் கைவிட்டுஇயற்கையை நன்றிதெரிவிக்கும் விதமாக வழிபடும் தமது பழமையான நெறிக்குத் திரும்பவேண்டும் என்பது என் நோக்கம்.
எனது சொந்தக்காரர்களில் வறுமையில் வாடிய சிலர் பணம் கொடுக்கப்பட்டு கிறித்தவராக்கப்பட்டதையும் ,
என் நண்பனின் நண்பன் குடும்பம் வறுமையில் இருந்தபோது அவனுக்கும் அவனது அண்ணனுக்கும் அரேபியாவில் வேலைவாங்கித் தந்து கைமாறாக மதம் மாறச் செய்ததையும் கண்ணால் கண்டவன்.
தேவாலயக் கோபுரமும் பள்ளிவாசல் கோபுரமும் போட்டிபோட்டுக் கொண்டு வளர்வதையும் அதில் காதைக்கிழிக்கும் ஒலிபெருக்கிகளில் பாடல்களும் பிரச்சாரங்களும் ஒலிபரப்பப்படுவதும்
தம்மை இந்துக்கள் என்று அப்பாவியாக நம்பிவரும் மற்றத் தமிழர்களிடம் கோவில்வரி, கொடைவரி, பூசைவரி என்று அரங்காவலர்களும் பூசாரிகளும் சுரண்டி வருவதையும், பண்டிகைகளின் பேரில் நடக்கும் கேலிக்கூத்துக்களையும் பார்த்துப் பார்த்து மனம் பொங்கி நாத்தினாக மாறினேன்.
மூடநம்பிக்கைகளும், புளுகுப் புராணங்களும், தேவையற்ற சடங்குகளும் ,பணவிரயமும், நேரவிரயமும் அத்தனை மதங்களிலும் நிரம்பியுள்ளன.
மற்ற மதத்தினரை விட ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இசுலாம் வலியுறுத்துகிறது.
அதற்காக தமிழ்இசுலாமியர் கொடுக்கும் விலை அதிகம்.
2008 ல் தென்காசியில் நடந்த இந்து இசுலாமிய மோதலும், மேலப்பாளையத்தில் அராபியமுறையிலான கொடூர தண்டனைகளும்,
இசுலாமியத் தெருக்களில் ஒபாமா வாயில் நாய் மூத்திரம் போவது போன்ற சுவரொட்டிகளும் எனக்கு எதையோ எச்சரிக்கை செய்வதாகத் தோன்றுகிறது.
நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
மதச்சண்டை வேண்டாம்.
நான் சொல்வதில் தவறெதுவும் இருந்தால் எடுத்துக் கூறவும்
நன்றி.
கீழ்க்காணும் தரவுகளை தமிழ்இசுலாமியருக்கா அளிக்கிறேன்.
உங்களைத் தமிழ்ப்பற்றில்லாதவர் என்று எவன் சொன்னாலும் பதிலடி கொடுக்க இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்
http://ta.m.wikipedia.org/wiki/சீதக்காதி
http://ta.m.wikipedia.org/wiki/தக்கலை_பீர்_முகம்மது_அப்பா
http://ta.m.wikipedia.org/wiki/இசுலாமியத்_தமிழ்_இலக்கியம்
பெருமகன் காயிதே மில்லத்
http://siragu.com/?p=3534
http://ta.m.wikipedia.org/wiki/தமிழகத்தில்_இசுலாமியர்_ஆட்சி
குணங்குடி மஸ்தான்
http://puthu.thinnai.com/?p=13162
பழந்தமிழ் கடலோடி வக்குசு
http://en.m.wikipedia.org/wiki/Tamil_bell
ஆஸ்கர் மேடையில் ரகுமான்
http://m.youtube.com/watch?gl=IN&hl=en-GB&client=mv-google&v=QdxS20XpBhQ
விடுதலைப்புலி இம்ரான்
http://eelamaravar.blogspot.com/2011/01/23.html?m=1
முல்லைப்பெரியாறு அரண் கே.எம்.அப்பாஸ்
http://makkalaatsi.blogspot.com/2011/12/19.html?m=1
தமிழக அரசியல் தலைவர் ஜவஹருல்லா
http://www.thinakkathir.com/?p=9127
ஈழத்திற்காக முதலில் தீயைத் தழுவி அணைத்துக் கொண்ட அப்துல் ரவூப்
http://ta.m.wikipedia.org/wiki/அப்துல்_ரவூப்
கவிக்கோ அப்துர் ரகுமான்
http://ta.m.wikipedia.org/wiki/அப்துல்_ரகுமான் ்
(மே 2013)
பல ஜாதியிலிருந்து இஸ்லாதத்துக்கு வந்தோம்
ReplyDeleteஎங்களுக்கு தமிழ் பெயர்கள் வேண்டவே வேண்டாம்.
கிருத்துவ பைபிள் மொழி பெயர்ப்பு சமஸ்கிரத சொல்கள் நிறைந்தது
1500 அரபு வார்த்தைகள் தமிழோடு ஒன்றிப்போய்யுள்ளது