தனித்தமிழ்க் குடியரசுசட்டம்
கையெழுத்திட்ட மபொசி, காமராசர், ஜீவா மு.வரதராசனார், மற்றும் பலர்
http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=103
தமிழ் நாட்டுக்கு ஒரு தனிக்குடியரசு:
1946 இல் அரசியல் நிர்ணயசபை அமைக்கப்படுகின்ற அந்தக் காலகட்டத்தில் தமிழகவரலாற்றில் முக்கியமான ஒரு செய்தி...
அப்போது ம.பொ.சி என்ன செய்தார் என்றால்,
மொழி வழியாகமாநிலங்கள் பிரிக்கப்படும்போது,
ஒவ்வொன்றும் தனிக்குடியரசாக
விளங்கவேண்டும்.
அப்படி தமிழ்நாட்டிற்கென்று தனிக்குடியரசு அமைக்கப்பட்டு அதற்கென்றுதனி அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட வேண்டும்.
அது தமிழர்களுக்குரிய அரசியல் சட்டத்தை வகுக்கவேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கானஅரசியல் சட்டத்தை வகுக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் சட்டம்வகுக்கக்கூடாது என்று ம.பொ.சி அறிக்கை கொடுத்தார்.
அதில் அவருடன் 16 தலைவர்களும்கையெழுத்திட்டிருந்தார்கள்.
முதலாவது கையெழுத்து அன்றைய தமிழ் நாடு காங்கிரஸ்கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் கையெழுத்து ஆகும்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜீவானந்தம் போன்றமுக்கியமான தலைவர்கள் 16 பேர் கையெழுத்திட்டு அரசியல் சாசனம் என்ற பெயரிலே வெளியிட்டார்கள்.
மதிப்புக்குரியஎன்னுடைய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தான்இந்தச் சாசன அறிக்கையை வரைந்தவர்.
-பழ.நெடுமாறன்
No comments:
Post a Comment