Tuesday 10 May 2016

திராவிடலு பகுதி-9

திராவிடலு
பகுதி-9
***************

அன்றைய மதராச மாகாணத்தில் 1916ல் முதல் திராவிடக்கட்சியான 'நீதிக்கட்சி' பிறந்ததும் அதோடு சேர்ந்து தமிழ்,தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் பிறந்தன.
தமிழ்- திராவிடம்
தெலுங்கு- ஆந்திர பிரகாசிகா
ஆங்கிலம்- ஜஸ்டிஸ்
இதில் தெலுங்கில் திராவிடப் பெயர் பயன்படுத்தப்படவில்லை என்பதை கூர்ந்து நோக்குக.
அதாவது தமிழரை திராவிடர் என்று ஏமாற்றிவிட்டு, ஆந்திரருக்குமுன் அவர்கள் இனத்திற்கான கட்சியாகவே ஜஸ்டிஸ் கட்சி காட்டிக் கொண்டது புலனாகும்.
இக்கட்சியை இனி 'ஐஸ்டிஸ்' கட்சி என்றே அழைப்போம்.
இந்த கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்திய அழகைப் பார்ப்போம்.
இக்கட்சி ஆண்ட 1916 முதல் 1936 வரையான காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர்களைப் பார்ப்போம்.

திரு.ஏ.சுப்புராயலு ரெட்டி
(7-12-20 முதல் 11-77-21)
பனகல் அரசர்
(19-12-23 முதல் 3-12-26)
திரு.பி.முனுசாமி நாயுடு
(27-10-30முதல் 4-11-32)
பொப்பிலி அரசர்
(5-11-32 முதல் 1-4-37)
சர்.கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
(1-4-37 முதல் 14-7-37)

இவர்களில் எவரும் தமிழர்  இல்லை.
எப்படி இருப்பர் ?!
திராவிடம் என்பதே தமிழ்ப்பிராமணரை(அதாவது தமிழரை) பின்னுக்குத் தள்ளப் பிறந்ததாயிற்றே!.
நன்கு கவனிக்க இவர்கள் அனைவரும் ஆதிக்கவர்த்தினர் ஆவர்.
அதற்காக அக்கட்சியில் தமிழர் குறைவென்று நினைக்கவேண்டாம். தமிழ் வாக்காளர் குறைவென்றும் நினைக்கவேண்டாம்.
சரி.
நிறையபேர் தாழ்த்தப்பட்டோர்க்கு உரிமை பெற்றுத்தருவதே திராவிடம் என்று முழங்குகின்றனர்.
கிடையவே கிடையாது.
வந்தேறிய பிராமணரிடம் குவிந்து இருக்கும் அதிகாரத்தை மண்ணின் மைந்தருக்கு(அதாவது அவர்கள் பார்வையில் திராவிடருக்கு) பெற்றுத்தருவதாகக் கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாத தமிழர் வாக்குகளைப் பெற்றபிறகு,அவ்வாக்குறுதியை ஒருநாளும்  நிறைவேற்றியதில்லை.
அக்கட்சியில் திரு.ரெட்டைமலை சீனிவாசன், திரு.எம்.சி.ராசா, திரு.வி.ஐ.முனுசாமி, திரு.என்.சிவராஜ் ஆகியப் பட்டதாரி தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் முன்னனியிலிருந்தனர்.
இவர்களில் எவரும் ஒருமுறைகூட அமைச்சராகவிட்டதில்லை.
திராவிடம் என்பது பிராமணரின் அதிகாரத்தை மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் பிடுங்கிக்கொள்ள உருவாக்கப்பட்டது.
அதாவது தமிழ்நாட்டில் மட்டும்.
அந்தக் காலத்திலும் சரி இந்தக்காலத்திலும் சரி
இனி எந்தக்காலமானாலும் சரி
ஆந்திர-கேரள-கன்னட மக்கள்  தம் இனத்தைக் கூறுபோடும் திராவிடத்தைத் துளியும் ஏற்றுக்கொள்வதில்லை.
தமிழகத்தில் கட்சிப் பெயர்களில் திராவிடம், தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க ஆதிதிராவிடர் எனும் சொற்றொடர் எல்லாம் திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டத் தெலுங்கு மக்கள் ஆதிதெலுங்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.
தமிழகம் தவிர மற்ற எந்த இடத்திலும் திராவிடம் என்கிற பெயரோ, இயக்கமோ, கட்சியோ, நாளிதழோ எதுவும் இன்றுவரை வழக்கில் இல்லை.
'திராவிடம்' என்பது தமிழரை ஏமாற்றி தமிழகத்தை வேற்றினத்தவரின் கல்வி, வேலை மற்றும் தொழில் வேட்டைக்களமாக மாற்றித்தருவதே ஆகும்.
1936 ல் நடந்ததைப்பற்றி இப்போதென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம்; இன்றும் தமிழர் தமது அத்தனையையும் வேற்றினத்தவருக்கு 'மொய்' எழுதிவருகின்றனர்.
மற்ற இனத்தவரிடம் பரப்புரை செய்யாமலேயே இயல்பாக இருந்த இனவுணர்வு அவர்களைக் கொடிய திராவிடத்திலிருந்து காத்தது, ஆனால் அன்றையத் தமிழுணர்வாளர் கரடியாய்க் கத்தியும்கூடத் தமிழருக்கு அதெல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகிப்' போனது.
அந்தத்தவறை இன்று நாமும் செய்யக்கூடாது.
திராவிடத்தின் பிறவிகுணத்தைத் தெரிந்துகொண்டோம்.
மேலும் அலசலாம்தான்.
ஆனால் இது ஒரு குறிப்பிட்டக் கட்சியை விமர்சிப்பதாகிவிடும்.
1930க்குப் பிறகு திராவிடத்தின் அசுரப்பாய்ச்சல் பற்றியும், திராவிடம்  புதுவடிவம் எடுத்ததாகவும் தவறுகள் களையப்பட்டதாகவும் திராவிடவாதிகள் கூறலாம்.
அதையும் அலசத்தானே போகிறோம்.

. . .தொடரும்

No comments:

Post a Comment