திராவிடலு பகுதி-1
************
இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு.
ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு,
ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,
அதனால் விடுதலை அடைந்து,
அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு,
மதவழிதேசியம் எனும் போலி தேசியத்தை
இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.
இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி
1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.
அன்றைய எழுச்சிபெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.
அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.
கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம்,ஓரிசா,பீகார்,அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்,
பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து,மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்,
சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம்,ஆந்திரா,கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும்
ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.
மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.
இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் மற்றமொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.
அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந்தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்.
...தொடரும்
No comments:
Post a Comment