Saturday 30 April 2016

புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை

புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஆகஸ்ட் 03, 1990இல் காத்தான் குடியிலுள்ள மீரா ஜும்மாவிலும்
ஹீசைனா பள்ளியிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக்கொண்டிருந்த 200 முஸ்லீம்களை,
வாகனங்கள் பலவற்றில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் தாக்கினர்.

தானியங்கித் துப்பாக்கிகளாலும், கிரனேடுகளினாலும்தாக்கப்பட்டு நூற்றுக்குமதிகமானோர் கொல்லப்பட்டனர் 87பேர் காயமடைந்தனர்

அந்த இரண்டு பள்ளி வாசல்களும் 1.5 கிமீ அகலமுள்ள ஒடுங்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
அதன் ஒரு பக்கத்தில் இந்து சமுத்திரமும் , மறுபக்கத்தில் கடல் நீரேரியும் அதன் எல்லைகளாக உள்ளன.
காத்தான்குடி மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் இலங்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலம் அது.

காத்தான்குடிக்குள் நுழையும் பாதையின் இரண்டு பகுதிகளிலும் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்தன.
இராணுவத்தின் சோதனையை மீறி எந்த வாகனமோ, அல்லது மனிதர்களோ உள்ளே நுழைய முடியாது.

அந்த பிரதேசம் அத்தகைய பாதுகாப்புக்குட்பட்ட வலயமாக இருந்தும், பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள், பல வாகனங்களில்,நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன் காத்தான்குடிக்குள்நுழைந்தது மட்டுமல்ல,
கொலைகளைச் செய்த பின்னர் ஒருவர் கூட அகப்படாமல் தப்பியும் போயிருக்கிறார்கள்.
உடனடியாக புலிகளைக் குற்றம் சாட்டியது இலங்கை இராணுவம்.

ஆனால் புலிகளோ அந்தப் படுகொலையைத் தாம் செய்யவில்லையென மறுத்தனர்.

தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து, பகையையும், வெறுப்பையும் வளர்க்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் சதித் திட்டங்களிலொன்று தான் இதுவும் எனவும்,
தாம் காத்தான்குடி படுகொலையை செய்யவில்லை எனவும்தீவிரமாக மறுத்தனர் புலிகள்.
அத்துடன் இதே போன்ற பல முந்தைய சம்பவங்களையும் அவர்கள் நினைவூட்டினர்.

காத்தான்குடிச் சம்பவம் நடந்த போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னா இஸ்லாமிய நாடுகளில், ஈழத் தமிழர்களுக்கெதிரான போருக்கு பணமும் , ஆயுத உதவியும் கேட்டுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி: பத்மநாபன் பட்ஜெட்மாஸ்ரர்

No comments:

Post a Comment