மொழி வரைபடம் (1928)
----------------------------------------
ஆங்கில ஆட்சியில்கீழ் இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி கணக்கெடுப்பு நடத்திய க்ரையெர்ஸன் (Grierson) என்பார் வெளியிட்ட Linguistic Survey of India என்ற நூலில் உள்ள வரைபடம் (அதன் ஒரு பகுதி).
1928வாக்கில் கையால் வரையப்பட்ட இந்த வரைபடத்துடன் தற்போதைய தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப்பார்க்கையில் ஓரளவு நாம் இழந்த பகுதிகளை அறியமுடிகிறது.
( Madras Presidency என்ற தலைப்பில் சென்னை மாகாணம் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இதுவே நிறமில்லாத வடிவில் இடம்பெற்றுள்ளது)
ஆனாலும் இது முழுமையாக சரியென்று சொல்லமுடியாது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கன்னடம் பேசும் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மாவட்டத்தில் தமிழர்களும் அல்லர் காடர் போன்ற (தமிழ்)பழங்குடி மக்களும் சில பகுதிகளில் மலையாளிகளுமே இருக்கின்றனர்.
அதேபோல மைசூர் தமிழர் பெரும்பான்மை நகரம்
அதுவும் இதில் இல்லை.
அதேபோல ஈழத்தின் கிழக்குபகுதி சிங்களப் பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
கிரையர்சன் வடமொழிகளில் மிக மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
தனது நூலின் முதல் தொகுதியில் தொடக்கத்திலேயே தனது ஆய்வில் தென்னிந்தியா இடம்பெறவில்லை என்பதை வரைபடம் மூலம் குறிப்பிட்டும் உள்ளார்.
அதாவது தென்னிந்தியாவில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறலாம்.
ஆந்திரா மற்றும் கேரளா பறித்துக்கொண்ட தமிழ் நிலத்தினை ஓரளவு அறிந்துகொள்ள இந்த வரைபடம் உதவுகிறது.
இவ்வரைபடத்தின் படி
தற்போதைய ஆந்திராவின்
சித்தூர் மாவட்டத்தில் பாதி
தமிழர் பெரும்பான்மை கொண்டது.
தற்போதைய கர்நாடகத்தின் கோலார் கால்பகுதி
மற்றும் பெங்களூர் மாவட்டத்தில் கால்வாசி
ராமநகரா கால்வாசி
சாம்ராஜ்நகர் பாதி
தமிழ் பெரும்பான்மை உடையன.
தற்போதைய கேரளத்தின் பாலக்காடு முழுவதும்
இடுக்கி பாதியும்
திருவனந்தபுரம் முழுவதும்
தமிழ் பெரும்பான்மை உடையன.
No comments:
Post a Comment