Monday 15 February 2016

டாக்டர் கொலைஞர்

டாக்டர் கொலைஞர்
---------------------------------

ஒரு காவல்துறை வண்டி வந்து வீடு முன்பு நின்றது.
காவல் அதிகாரி இறங்கி வீட்டிற்குள் சென்றார்.
அங்கே ஒரு இளைஞனின் படம் மாலைபோடப்பட்டு பொட்டுவைக்கப்பட்டு இருந்தது.
கீழே உதயகுமார் என்ற பெயரும் தோற்றம் மறைவு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.
கீழே தரையில் சோகத்துடன் முதியவர் அமர்ந்திருந்தார் ஒருவர்.
காவலதிகாரியைக் கண்டதும் நடுங்கியபடி எழுந்தார்.

"இன்னக்கிதான் விசாரணை உடனடியா கிளம்பு"

அதிகாரத் தேரணையில் கூறினார் அந்த அதிகாரி.

முதியவரை வண்டியில் ஏற்றுக்கொண்டு சென்றனர்.

வழிநெடுக 'டாக்டர்' கலைஞர் வாழ்க என்ற சுவரொட்டிகளும் பதாகைகளும் காணப்பட்டன.

நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் தனியாக இருந்த ஒரு கட்டிடத்தில் நுழைந்தனர்.

சுற்றிலும் மக்கள் யாரும் இல்லை.
அந்த கட்டடத்தில் வெளித்திண்ணையில் திமுக கரைவேட்டி கட்டிய பத்துபதினைந்து தடியர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் கண்கள் சாராயபோதையில் சிவந்திருந்தன.
கூடத்தில் நுழைந்ததும் அங்கே சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர்.

நீதிபதி வந்தார்.
வழக்கு தொடங்கியது.
வழக்கறிஞர் டாக்டர் பட்டம் கண்டவர்களுக்கும் வழங்கப்படுவதை எதிர்த்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்  உதயகுமாரை  கொலைசெய்தது தி.மு.க குண்டர்கள்தான் என்றும்
இது பற்றி அம்மாணவரின் தந்தையை விசாரிக்க வேண்டுமென்றும் கோரினார்.

"சொன்னது நினைவிருக்குல்ல?" காவல் அதிகாரியின் மிரட்டல் குரல் முதியவர் காதில் விழுந்தது.

அவர் நடுக்கத்துடன் கூண்டில் ஏறி நின்றார்.

"உதயகுமார் உங்கள் மகன் தானே?"

"இல்லை" இறுகிய குரலில் கூறினார் முதியவர்.

நீதிபதி அவரிடம் "யாருக்கும் பயப்பட வேண்டாம்.
தைரியமாக உண்மையைக் கூறுங்கள்" என்றார்.

முதியவர் காவலதிகாரியைப் பயத்துடன் பார்க்க நீதிபதி புரிந்துகொண்டு காவலர்களை வெளியேறச் சொன்னார்.
மீண்டும் தைரியமூட்டினார்.
ஆனால் முதியவர் கடைசிவரை உதயகுமார் தனது மகனே இல்லை என்று கூறிவிட்டார்.

நீதிபதி ஆதாரம் போதாது என்று வழக்கை ஒத்திவைத்தார்.

தன் மீதி குடும்பத்தையாவது வாழவிடுவார்கள் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கூண்டை விட்டு கீழே இறங்கினார்.

விறுவிறுவென உள்ளே வந்த காவலதிகாரி நீதிபதி முன்பே முதியவர் பிடரியில் ஓங்கி ஒரு அறை வைத்தார்.
அங்கே பார்வையாளராக அமர்ந்திருந்தோர் வாய்விட்டு சிரித்தனர்.

நீதிபதி "என்னய்யா? அதான் சொல்லிக்குடுத்தமாதிரி அப்டியேதானே செஞ்சான்?!
அப்பறம் என்ன?"

காவலர் "போயா, உண்மையான விசாரணை நடக்கும்போது இதேமாதிரி என்ன திரும்பிப் பாத்தா என்னாகுறது?"

அப்போதுதான் அந்த முதியவருக்கு இந்த நீதிமன்ற வளாகமே போலியாக வடிவமைக்கப்பட்டது (செட்டப்) என்று புரிந்தது.
அடித்து உதைத்தபடி வெளியே இழுத்துவந்தனர்.

திமுக குண்டர் அருகில் கூட்டம் வந்தது.

அதில் ஒருவன் "இதேமாதிரி உண்மையான விசாரணைல சொல்லணும்.
எடைல திரும்பி அங்க இங்க பாத்த உன் குடும்பமே இருக்காது.
நடக்குறது எங்க ஆட்சி.
எங்க தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தா உன் மவனுக்கு எங்க வலிக்குது?
ஈனசாதி நாய் நீ பெத்த மவனுக்கு என்ன கொழுப்புனு கேட்டேன்?
கூட்டம் சேந்து எதிர்ப்பு தெரிவிக்குற அளவு வந்துட்டீங்கள்ல?!
இப்ப புரியுதா எங்கள பகச்சா என்ன நடக்கும்னு?!
இனி ஒழுங்கா நடந்துக்கணும்"
என்று மிரட்டினான்.

நீதிபதி வேடம் போட்டவன் வந்தான்
"கவலபடாத பெரிசு.
போனவன் திரும்பிவரவா போறான்?
உனக்கு இன்னொரு மகன் இருக்கான்ல.
அவன் பேரென்ன மனோகரனா?
பி.யூ.சி படிச்சிருக்கான்ல?!
அவன போய் தலைவர பாக்க சொல்லு.
அரசாங்க வேலயோ பணமோ எதாவது தருவாரு"
என்று கூறி தோளில் தட்டிக்கொடுத்துவிட்டை போனான்.

தி.மு.க குண்டர்களும்
காவல்துறையினரும்
நீதிமன்ற நடிகர்களும் சிரித்து பேசியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சில பணியாளர்கள் வந்து அந்த கூடத்தில் இருந்த நீதிமன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர்.

ஒரு மணிநேரத்திலு அங்கே ஆள்நடமாட்டம் இருந்த சுவடே தெரியவில்லை.

அந்த நீதிமன்ற வளாகத்தின் கைவிடப்பட்ட கட்டிடத்தில் அனாதையாக நின்றார் முதியவர்.
தன் மகனின் பிணத்தைக் கூட பார்க்கமுடியாத தன் இயலாமையை எண்ணி தனியாக அங்கே நின்று அழுதுதீர்த்தார்.
கால்நடையாக வீடுநோக்கி நடக்கத் தொடங்கினார்.
-------------------------------
கருணாநிதி என்ற பெயருக்கு முன்னாள் இருக்கும் டாக்டர் என்ற நான்கு எழுத்துக்குப் பின் ஒரு தமிழனின் கொலை மறைந்துள்ளது.

கருணாநிதி வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும்
கருணாநிதியின் குடும்பம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையிலும் தமிழ் உயிர்கள் நசுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment