தமிழர் மரபணு
மதுரை அருகே ஜோதிமாணிக்கம் சிற்றூரைச் சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு பழமையான M130 மரபணுவுடன் ஒத்துப்போவதாக ஆக்ஸ்போர்டு ஆய்வறிக்கை கூறுகிறது.
இது 70,000 ஆண்டுகள் பழமையான மரபணு.
"Journey of Man" என்ற National Geographic தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் 'பிறமலைக் கள்ளர்' மரபணுவானது 60,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது.
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தின் பேராசியர் ஆர்.எம்.பச்சையப்பன் திரட்டிய ஆதாரங்கள் மூலம் இது கண்டறியப்பட்டது.
இதன்பிறகு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Dr. Spencer Wells என்பவர் மேற்கொண்டு விரிவான ஆய்வு செய்து தனது 'Deep Ancestry' என்ற புத்தகத்தில் எழுதினார்.
பிறகு 2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள 'ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்' நடந்த 'உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள்' மாநாட்டில்,
மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.
இதன்படி இந்தியத்துணைக் கண்டத்திலேயே பழமையான மூத்தகுடி தமிழரே என்பது விளங்கும்.
இதுமட்டுமல்லாது,
2011 ஆம் ஆண்டு Indian Academy of Sciences வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையானது,
'பரயர்' (பறையர்) மற்றும் 'முத்தரையர்களை' பழைய கற்கால(Paleolithic period) மனிதர்கள் என்று சொல்கின்றது.
(பழைய கற்காலம் என்பது 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்,
இருபது லட்சம் ஆண்டுகள் வரை இந்த காலகட்டம் நீள்கிறது)
மேற்கண்ட மரபணுக்கள் ஆப்பிரிக்கருடன் ஒத்துப்போகின்றன.
இதேபோல ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மரபணுவானது குறும்பர்களுடன் ஒத்துப்போகின்றன.
அதாவது Y குரோமோசோமில் உள்ள M130 haplotype உள்ள சில பொருட்கள் ஆஸ்திரேலிய அபாரிஜின் மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவாக உள்ளன.
இதைக் கண்டறிந்தவர் Anthropological Survey of India ஜச் சேர்ந்த Dr.Raghavendra Rao என்பவர் ஆவார்.
இந்த அபாரிஜின்களும் பழமையான மரபணுவைக் கொண்டவர்களே ஆவர்.
மேலும் பறையர்களின் Y-குரோமோசோமில் G2a3b1 ஆனது
ஐரோப்பிய மூதாதைய இனமான Caucasians மரபணுவிலும் காணப்படுகிறது.
இது 10% ஐயர்களிடமும் 13% ஐயங்கார்களிடமும் காணப்படுகிறது.
மேலும் ஆய்வுகள் பல செய்யவேண்டியுள்ளன.
அதைச் செய்துவிட்டால் உலகின் பழமையான மரபணு தமிழர்களிடம் உள்ளதையும்
உலக மக்கள் அனைவரிடமும் தமிழர்கள் நேரடியாக மரபணுத் தொடர்பு உள்ளவர்கள் என்பதையும் நிறுவ இயலும்.
இதன்மூலம்
முன்தோன்றிய மூத்தகுடி என்பது வெறும் சொற்றொடர் அல்ல அது முற்றிலும் உண்மை என்று புலப்படும்.
No comments:
Post a Comment