ஈழப் பார்ப்பனர் மூவர்
பார்ப்பனர் தமிழரே என்று கூறுகிறாயே?!
தமிழ்மொழியில் பார்ப்பனர் பங்கு ஏற்கொள்ளக்கூடிய வகையில் இருந்தாலும் தமிழர் உரிமைக்காக பார்ப்பனர் என்ன செய்துள்ளனர் இதுவரை?!
ஈழப்போராட்டத்திற்கு பார்ப்பனர் துரும்பையாவது அசைத்துள்ளனரா?
தமிழர் மத்தியில் வாழும் பார்ப்பனர்களில் பிரமணரல்லாத தமிழ்ப்பார்ப்பனர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இருந்தாலும் ஈழத்திற்காகப் போராடிய மூன்று பார்ப்பனர்களை என்னால் கூறமுடியும்.
தலைவர் பிரபாகரன் ஆல்பிரட் துரையப்பா என்ற துரோகியைக் கொன்றுவிட்டு தமிழகம் தப்பிவருகிறார்.
தமிழகத்தில் அடைக்கலமாக இருந்த ஈழப்போராளி இராஜரத்னம் அவர்களை சந்திக்கிறார்.
சேரர்,சோழர்,பாண்டியர் வரலாறை அவர்மூலம் நன்கு அறிகிறார்.
சோழர்களைப் பிடித்துப்போக தமது இயக்கத்திற்கு புலிகள் பெயரைவைக்க நினைக்கிறார்.
பெயர் வைத்தால் போதும் நிதிவேண்டாமா?
ஈழத்திற்கு திரும்புகிறார் கூட்டாளிகளைத் திரட்டி புத்தூர் வங்கியைக் கொள்ளையடிக்கிறார்.
இக்கொள்ளையின் போது உடன் நின்றவரும், கொள்ளையடித்த பணத்தை பொறுப்பில் ஏற்றுக்கொண்டவரும், கொள்ளைநடந்த மறுநாள் வழக்கம்போல வெற்றுடம்பில் பூணூலோடு கோயிலில் அர்ச்சகராக வேலைக்குச் சென்றவரும்,
தலைவரின் இயக்கம் தொடங்கப்பட்டு அதில் அமைக்கப்பட்ட மத்திய நிர்வாகக் குழுவில் தலைவர் உட்பட ஐவரில் ஒருவராகவும்,
தலைவரோடு முழுநேர ஊழியராக தோள்நின்றவரும் ஒரு பார்ப்பனர்தான்.
1985ல் பழ.நெடுமாறன் அவர்கள் ஈழத்திற்கு புலிகள் பாதுகாப்புடன் ரகசிய சுற்றுப்பயணம் சென்று அந்த நிகழ்வுகளை 'ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலாக வெளியிட்டார்.
அதில் அவர் ஒரு வயதான பூசாரியைச் சந்திக்கிறார்.
அவரது ஈழ ஆதரவு கண்டு வியக்கிறார்.
புலிகள் இயக்கத்தில் பார்ப்பனர் பலர் உண்டு என்பதையும் அதில் தலைவருக்கு நெருக்கமான கணேசன் என்பவரைப் பற்றியும் அப்பூசாரி குறிப்பிடுகிறார்.
இந்த கணேசன் தான், நான் மேற்சொன்ன பார்ப்பனர்.
இவர் பிறகு புலிகள் இயக்கம் பிளவுண்டபோது உமாமகேசுவரனுடன் ப்ளோட் இயக்கத்தில் இணைந்தவர்.
தற்போது புலம்பெயர்ந்து வசித்துவரும் இவர்.
27ஆண்டுகள் முன்பு புலிகளுடனான தனது நினைவுகளை 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற நூலாக எழுதியுள்ளார்.
.
இரண்டாமவர் மற்றும் முக்கியமானவர்
கோதண்டராம நடேசையர் அவர்கள்.
தஞ்சாவூரில் பிறந்து இலங்கை மலையத்தமிழர்களுக்காக போராடியவர்.
அக்காலத்தில் 'அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்தின்' கிளை ஒன்றைத் தோற்றுவிக்க கொழும்புக்குச் சென்றவர்,
அங்கே மலைநாட்டில் ஆங்கிலேயரால் அடிமையாகக் கொண்டுசெல்லப்பட்ட தமிழக வம்சாவழி மலையகத்தமிழர்கள் அடிமைகளாக இருப்பதைக் கண்டு மனம் கொதித்துபோனார்.
எளிதில் யாருமே நுழையமுடியாத மலையகத் தோட்டங்களில் ஒரு புடவை வியாபாரியாக வேடமிட்டு அத்தமிழர்களைச் சந்தித்தார்.
மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் கல்வியறிவின்மையும், விழிப்புணர்வின்மையையும் போக்க தன்வாழ்வை அர்ப்பணிக்க முன்வந்தார்.
தோட்டப்புறத் துரைமார்களிடமும், கங்காணிகளிடமும், சிக்குண்டு துன்பத்தில் கிடக்கும் தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவும் அவர் சூளுரைத்தார்.
அவர்களுடனேயே தங்கினார்.
1921 -ஆம் ஆண்டு 'தேசநேசன்' என்ற நாளிதழைத் தொடங்கினார்.
இதுவே இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ்.
தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட சிறப்பு தேசநேசன் இதழுக்கே உண்டு.
தோட்டப்புறத் தமிழர்களின் துன்ப வாழ்க்கையையும், அவர்களை அடிமைப்படுத்திய கரங்களையும் தேசநேசன் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டினார் நடேசையர்,
'தி சிட்டிசன்' என்ற ஆங்கில,வார இதழையும் தொடங்கினார்.
நடேசய்யரின் பத்திரிகை எழுத்துகளும், பேச்சுகளும் ஆங்கிலேய அரசைத் திணறடித்தன.
தமிழ்ப் பார்ப்பனர் பாரதியாரின் சுதந்திரப் பாடல்களை ஈழத்தமிழரிடம் பரவச்செய்தார்.
இலங்கையில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடியும் நடேசய்யரே.
இறக்குமதி செய்து வைத்திருந்த அடிமைகளை, சகமனிதர்களாக மாற்றி வந்த நடேசயரை நாடு கடத்திவிட அரசு பலமுறை முயற்சி செய்தது.
ஆங்கில ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் சிங்களவரின் இனவெறிப்போக்கு வெளிப்படத் தொடங்கியது.
நடேசையர் தமிழர் உரிமைப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் கைகோர்த்தார்.
1947ல் ஜூன் 1,
தந்தை செல்வா 'சுதந்திரன்' எனும் பத்திரிக்கையைத் தொடங்கினார்.
அதன் ஆசிரியர் பொறுப்பை நடேசையர் ஏற்றுக்கொண்டார்.
ஊடகத்தை உரிமைகளுக்காகச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் தராகி சிவராமுக்கு முன்னோடி இவரே.
1924ல் இலங்கையின் முதல் சட்டசபை அமைந்தபோது அதில் மலையகத் தமிழர் உறுப்பினராகவும்
1936 இலங்கை அரசாங்க சபையில் அட்டன் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
இவரது மனைவியும் இவரது போராட்டத்தில் பங்கெடுத்தமை இங்கே குறிப்பிட்டாகவேண்டிய ஒன்று.
ஒரு தமிழகப் பார்ப்பனர் ஈழத்தில் குடிபெயர்ந்து தமிழகவம்சாவழித் தமிழருக்காக அங்கேயே தங்கி போராடி மறைந்தார்.
இதேபோல ஈழத்துப் பார்ப்பனர் ஒருவர் தமிழகத்திறகு வந்து ஈழத்தமிழருக்காகப் போராடி இங்கேயே மறைந்தார்.
அவர்தான் பட்டியலில் மூன்றாமவர்.
கோவை மகேசன் அவர்கள்.
ஈழத்தில் யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்தவர் இவர்.
ஐயர் குலத்தில் பிறந்தவரான இவர் தமிழார்வம் கொண்டவர்.
தந்தை செல்வா தொடங்கிய சுதந்திரன் பத்திரிக்கைக்கு இவரும் ஆசிரியராக இருந்தார்(1968).
சிங்களத் திணிப்பை எதிர்த்து பேருந்துகளில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்துடன் தமிழர் பகுதிகளுக்கு வந்த பேருந்துகளை மறித்து நடந்த 'ஸ்ரீ எதிர்ப்பு' போராட்டத்தில் இவர் நேரடியாக ஈடுபட்டார்.
பிறகு புலிகளுக்கு மருத்துவ உதவி செய்ததற்காக சிறையிலடைக்கப்பட்டார்.
1983 கருப்பு ஜூலையின்போது நடந்த வெலிக்கடை சிறைச்சாலை தமிழ்க்கைதிகள் படுகொலையில் மயிரிழையில் உயிர்தப்பினார்.
பிறகு தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
இங்கேயும் 'வீரவேங்கை' என்ற புலிகள் ஆதரவு இதழ் ஒன்றை நடத்தினார்.
1992ல் இவர் மறைந்தபோது பல தமிழுணர்வாளர்களும் கலந்துகொண்டனர்.
போதுமா?
ஆரியர் வேறு
பிராமணர் வேறு
பார்ப்பனர் வேறு
பார்ப்பனர் தமிழரே.
எஏஎஏஎஏஎஏஎஎஏஎஏஎஏஎஏஎஏஎ
ஈழப்போர்முனையில் புலிகளுடன்
http://padippakam.com/index.php?option=com_content&view=article&id=1530:lt-191&catid=35:ltte&Itemid=138
ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்
http://inioru.com/9025/70களில்-பிரபாகரன்-எமக்கெல/
http://ta.m.wikipedia.org/wiki/கோவை_மகேசன்
http://ta.m.wikipedia.org/wiki/கோ._நடேசையர்
No comments:
Post a Comment