விவகாரங்களிலாவத
ு அரசியல் கட்சிகள் சில
போராட்டங்களை நடத்தின.
அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம்
நாம்
இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக்
கொடுத்ததற்கு சமம்.
காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால்,
குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும்.
பழந்தமிழில் குடக்கு என்றால்,
மேற்கு என்று பொருள்.
அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க்
மொழி.
சுமார்முக்கால்
நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும்
கூர்க்
மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக்
கொண்டிருந்தார்கள். அதனால்,
மொழிவாரி மாநிலப்
பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள்,
‘நாங்கள்
எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின்
அடிப்படையாக
இருக்கும்
தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’
என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள்,
கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய
அளவில்
போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண்
காட்டி இருந்தால்கூட அவர்கள்
ஓடி வந்து ஒட்டிக்
கொண்டிருப்பார்கள்.
அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால்,
காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி,
தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள்.
நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.
கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால்
முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய
பெங்களூரு,
மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார்
தங்கவயல்
பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள
கர்நாடகத்தினர்
காய் நகர்த்திய விதம், அவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக்
காட்டுகிறது.
ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட
வேண்டும்
என்றால் முதலில் நிலத் தொடர்பு,
அடுத்து மொழித்
தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி.
ஓசூரில்
அப்போது தெலுங்கு பேசுவோர் 39
சதவிகிதமும்
அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும்
இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம்
இருந்தாலும்
ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற
காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது.
அன்று அது வறண்ட
பூமி என்பது வெளியே சொல்லப்படாத
காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத
பட்சத்தில்
கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால்,
அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க
வேண்டும்.
ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட
மக்கள் அதிகம்
இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக்
தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம்
பேசும்
மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம்
இருந்தாலும்
நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம்
என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.
தமிழகம் அதற்கு உரிமையான
நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில்
அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத-
வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609
சதுர
கிலோமீட்டர்கள் தமிழகம்
அண்டை மாநிலங்களிடம் இழந்த
நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர
கிலோமீட்டர்கள். இவையும்
நம்மோடு இருந்திருந்தால்
தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய
மாநிலமாக
இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட
சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும்
என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய
மாநிலங்களைவிட வளமான மாநிலமாக
இருந்திருக்கும்
நன்றி: அசுஆ சுந்தர் (Asa sundar)
No comments:
Post a Comment