தமிழர்களுக்கு இங்கேயே எல்லைப்பகுதி வருகிறது எனவே, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தொழிற்சாலைகள், படைத்தளங்கள், பயிற்சி நிலையங்கள் என இளைஞர்கள் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்;
அதாவது நடுப்பகுதி தமிழர்கள் வெளிப்பகுதிக்கும் வெளிப்பகுதி தமிழர் நடுப்பகுதிக்கும் அடிக்கடி வந்துபோகவேண்டும்;
இவர்கள் வேற்றினத்தவரைத் தாண்டித்தான் இதைச் செய்யவேண்டும் எனவே ஒருமைப்பாடு கூடும்;
மொத்த நிலப்பரப்பில்
10% நடுப்பகுதியாகவும்
30% வளையப்பகுதியாகவும்
60% வெளிப்பகுதியாகவும் ஆக்கப்படவேண்டும்.
ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 65%க்கு குறையாமல் தமிழர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்;
வேற்றினத்தவரின் இருபுறமும் தமிழர் எனவே அவர்கள் வெளியிலிருந்து வரும் எந்த சதிவேலைக்கும் இரையாக மாட்டார்கள்; பாதுகாப்பின்மையை உணர்வார்கள்; அதே நேரத்தில் அவர்கள் பக்கவாட்டின் இருபுறமும் தமிழரல்லாதோர் வளையமாக இருப்பார்கள்; எனவே அவர்கள் பாதுகாப்பாகவும் உணர்வார்கள்;
உள்பகுதி மக்கள் வளையப்பகுதி மக்களை விட குறைந்த எண்ணிக்கையில் இருப்பர் எனவே பாதுகாப்பின்மையை உணர்வார்கள்; அதே நேரத்தில் வெளிப்பகுதித் தமிழர் வளையப்பகுதியை விட அதிகம் எனவே அவர்கள் பாதுகாப்பாகவும் உணர்வார்கள்;
வெளிப்பகுதிமக்கள் வளையப்பகுதியைச் சூழ்ந்திருப்பதுபோல வளையப்பகுதி நடுப்பகுதியைச் சூழ்ந்துள்ளது எனவே நடுப்பகுதியின் பாதுகாப்பு இவர்கள் வளையப்பகுதியைப் பாதுகாப்பதில் உள்ளதை உணர்ந்து செயல்படுவார்கள்;
அரசியலிலும் உச்சதலைமை(அதிபர்) தமிழரிடம் இருக்கும் அதற்கடுத்த நிலை(பிரதமர்) தமிழரல்லாதவரிடம் தரப்படும்;
முப்படைகளிலும் உச்சதலைமைகள் தமிழரிடத்திலும் அதற்கடுத்த நிலைகள் தமிழரல்லாதவருக்கு வாய்ப்பளிக்கப்படும்.
எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்; இரு இனத்தார் கலந்து பிறந்தோர் 'ஈரினத்தார்' ஆவர்; இவர்களை அவ்விரு இனவொற்றுமைக்கு பரப்புரை செய்ய பயற்படுத்தலாம்;
ஈரினத்தவரான ஒரு ஆண் தாயின் இனத்தில் திருமணம் செய்தால் அவரது பிள்ளைகள் தமது தாய்-பாட்டி இனத்தவராக எண்ணப்படுவர்;
இதே அவர் தந்தையின் இனத்தில் திருமணம் செய்தால் அவரது பிள்ளைகள் தந்தை,தாத்தா எந்த இனமோ அந்த இனத்தவராக எண்ணப்படுவர்;
ஈரினத்தவர் மூன்றாவதாக ஒரு இனத்தில் திருமணம் புரிவாராயின் அவர் பெறும் பிள்ளைகள் இனமற்றவராக எண்ணப்படுவர்; இனமற்றவர் எந்த இனத்தில் மணம் புரிகிறாரோ அந்த இனமாக அவரது பிள்ளைகள் எண்ணப்படுவார்கள்; அதாவது தாத்தாக்கள்,பாட்டிகள்,அம்மா,அப்பா என அறுவரில் நால்வர் எந்த இனமோ அந்த இனமாக பேரப்பிள்ளைகள் எண்ணப்படுவர்;
தமிழ் நிலம் மக்கள்தொகைக்கு மிகச் சிறியது எனவே மக்கட்தொகைப் பெருக்கம் ஊக்குவிக்கப்படாது;
ஆனால், மக்கட்தொகை குறைவாக உள்ள நாடுகளில் குடியேறியுள்ள தமிழர் அதிகக் குழந்தைகள் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்;
அவ்வாறு வேறுநாடுகளில் வாழ்வோர் தாய்நாட்டுக்கு அடிக்கடி வந்துபோகவேண்டும் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் தலையெடுத்ததும் முதியகாலத்தில் தமிழ்க்குடியரசிலேயே கடைசிக்காலத்தைக் கழிக்க வந்துவிடவேண்டும்;
தாய்நிலத்தில் வாழ்வோர் வெளிநாட்டுத் தமிழரையும் வெளிநாட்டுத் தமிழர் தாய்நாட்டுத் தமிழரையும் திருமணம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்;
எந்த மதத்தையும் பின்பற்றலாம் பரப்புரை செய்யத்தான் தடை;
தமிழ்க்குடியரசில் இனவேறுபாடு காட்டுவது தடைசெய்யப்படுகிறது; இனவுரிமைகள் வலியுறுத்துவது வரவேற்கப்படுகிறது;
தமிழ்க் குடியரசில் குடியுரிமை பெற்ற வேற்றினத்தவர் தமிழில் பேச அவசியமில்லை; தமது தாய்மொழி உரிமைகள் கிடைக்கப்பெற்றிருப்பதால் தமது மாநிலத்துக்கு வெளியே அவர்கள் இணைப்பு மொழியையே(ஆங்கிலம்) நாடெங்கும் பயன்படுத்தவேண்டும்;
தமிழின எதிரி இத்தீர்வினை வேற்றினத்தார் சிறைவைப்பதாக திரிப்பார்;
தீவிரத் தமிழியர் வேற்றினத்தாரை சுகமாக குடிவைத்துவிட்டு தமிழினம் மட்டும் போராடவேண்டுமா என்று கேட்பார்.
சரி. முதலில் விடுதலையைப் பெறுவோம்; கியூபா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் என விடுதலை பெற்ற நாடுகள் வல்லரசாக ஆகமுடியவில்லை;
வங்கதேசம்,எரித்ரியா,தென் சூடான் போன்ற நாடுகள் பெற்றவிடுதலையே போதும் என்று நின்றுவிட்டனர்; விடுதலைக்குப் பிறகான பிரச்சனைகளை இப்போது கிளரவேண்டாம்; முதலில் விடுதலையடைவோம் அறிவார்ந்த தமிழினம் விடுதலையடைந்தால் மீதி தானாக நடக்கும்.
இப்போது நான் சொல்வதெல்லாம் நகைப்பாகக்கூடத் தெரியலாம்;
வருங்காலத்தில் இதன் அருமை உணரப்படும்.
நிச்சயமாக
ReplyDelete