அக்கா-மகளை மணமுடித்தல்
777777777777777777777777777777
சொந்தத்திற்குள் திருமணம் செய்வது உலகம் முழுவதும்
வெவ்வேறு முறைகள் உள்ளன; லேவிஸ் ஹென்றி மோர்கன்
என்பவர் இம்முறைகளைப்(kinship) பற்றி ஆராய்ந்துள்ளார்.
தமிழ் மக்கள் பழங்காலத்திலிருந்து சொந்தங்களுக்குள்
திருமணம் செய்துவருகின்றனர்; வடயிந்தியர்கள்
தாத்தாவின் தாத்தா வரை சொந்தபந்தம் பார்த்துதான்
திருமணம் செய்கின்றனர்; அதே போல ஒரே கோத்ரத்தில்
அவர்கள் திருமணம் செய்வதில்லை (அவர்கள்
தூரத்து உறவினர் என்றாலும்);
கோத்திரம் என்பது நமது நாட்டுப்புறத்தில்
ஒரே குலதெய்வத்தை வழிபடும் 'சொக்காரர்கள்'
'பங்காளிகள்' போன்று;
அதாவது ஒரு பெண் திருமணமாகும் முன்
ஒரு கோத்திரத்திலும் திருமணம்
ஆனபிறகு கணவருடைய கோத்திரத்திலும்
சேர்க்கப்படுகிறாள்;
இது ஓரளவு நெருங்கிய சொந்தத்திற்குள்
திருமணத்தைத் தடுக்கிறது;
(தமிழகத்திலும் ஆந்திராவிலும் சில பிராமணர்கள்
இந்த கோத்ர முறையைக் கடைபிடிக்கின்றனர்)
தமிழர்களும் தென்னிந்தியரும், அண்ணனும்-தங்கையும்
தத்தமது பிள்ளைகளுக்குள் மணம்
செய்துவைப்பதை விரும்புகிறார்கள்;
இத்தகைய 'அண்ணன்-தங்கை' குடும்பங்களின்
மணமுறை ('cross-cousin marriage' or 'iroquois
kinship') உலகில் பல்வேறு இனங்களிலும் நடக்கிறது;
வட அமெரிக்க இனங்களும் , தென்னிந்தியரும்
,தமிழரும்,சிங்களவரும்,சீன இனங்களும் இத்தகைய
திருமண முறைகளை பின்பற்றுகின்றனர்;
அறிவியலாளர் டார்வின் தனது அத்தைமகளான
எம்மா என்பவரைத்தான் திருமணம் செய்துள்ளார்.
இதே போல உடன்பிறந்த அண்ணன்-தம்பி,அக்காள்-
தங்கை அண்ணன்-தங்கை தத்தமது குழந்தைகளுக்குத்
திருமணம் செய்துவைக்கும் முறையானது மத்திய ஆசிய
நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இசுலாமிய
நாடுகளிலும் காணப்படுகிறது;
அதாவது உடன்பிறந்தவரைத் தவிர யாரையும் திருமணம்
செய்யலாம் என்ற முறை;
யூதரான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தனது சித்தி மகளான
எல்சா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
மாமாவைத் திருமணம் செய்யும் முறையும் உலகம்
முழுவதும் உள்ளது; தமிழர்,கன்னடவர்,தெலுங்கர் ஆகிய
இனங்களில் அக்கா மகளைத் திருமணம்
செய்வது நடக்கிறது; அர்ஜன்டினா,ஆஸ்த
ிரேலியா,ஆஸ்திரியா,பிரேசில்,ரஷ்யா,பிரான்சு,மலே
சியா ஆகிய நாடுகளில் இத்தகைய திருமணங்கள்
நடக்கின்றன; ஹிட்லரின் தாயாரான
க்ளாரா தனது தாய்மாமாவைத்தான் திருமணம்
செய்திருந்தார் (மாமா என்றுதான்
கணவரை அழைப்பாராம்).
மேலே கூறிய மூன்று முறைகள் பரவலாக உலகம்
முழுவதும் உள்ளன; இம்முறைகளுக்கு சில நாடுகளில்
தடை உள்ளது; சிலநாடுகளில் வரவேற்பு உள்ளது; சில
நாடுகளில் ஒரு சில மக்களுக்கு மட்டும்
இசைவு(அனுமதி) வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல உடன்பிறந்தவர் உட்பட அனைவரையுமே அண்ணன்-
தங்கையாக பார்க்கும் முறை,தாய்மாமனின்
பிள்ளைகளை தமது பிள்ளைகளாகப் பார்க்கும் முறை,
அத்தை மகளை அம்மாவாகப் பார்க்கும் முறை என
ஆங்காங்கே சில குழப்பான முறைகளும் உள்ளன.
இவை சரியா? தவறா? என்று முடிவு செய்வதும்
கடினம்;
ஒரு ஆய்வில்
பத்து இளைஞர்களை உடற்பயிற்சி செய்யவைத்து அவர்களின்
வியர்வை தோய்ந்த மேற்சட்டையை பெட்டிகளில்
வைத்து எந்த பெட்டியில் யாருடைய
மேற்சட்டை உள்ளது என்று அறிவிக்காமல் அந்த
பத்து இளைஞர்களுடன் குருதித்தொடர்பு கொண்ட
(தாய்,தங்கை,அக்கா) பெண்கள்
பத்துபேரை எல்லா பெட்டிகளையும் ஒருமுறை முகரச்
சொன்னார்கள்; எந்த பெண்ணுக்கும் தன்னுடன் குருதித்
தொடர்பு கொண்ட ஆணின் வாடை பிடிக்கவில்லை;
இதேபோலத்தான் ஆண்களுக்கும்; அதாவது மிக நெருங்கிய
உறவுக்குள் திருமணம்
செய்வதை இயற்கை விரும்புவதில்லை (அவர்களுடைய
எம்.என்.சி ஒத்துபோகக் கூடாதாம்); அதே போல
'குருதித் தொடர்பில்லாத உறவுமுறைக்குள்' திருமணம்
செய்வது பிறவிக் குறைபாடுகளைத் தோற்றுவிக்கும்
என்று கூறுவதும் உறுதியான முடிவு அல்ல;
அதாவது, தொடர்ந்து உறவுமுறையில் திருமணம்
செய்யும் இனங்களையும், உறவுமுறைக்குள்
திருமணமே செய்யாத இனங்களையும்
ஆராய்ந்து பார்த்ததில் உறவுக்குள் திருமணம்
செய்வதால் குறையுடன் குழந்தைகள் பிறக்கும்
வாய்ப்பு கொஞ்சமே கொஞ்சம் அதிகம்; தவிர
பரம்பரை நோய்களும் பிறவிக்குறைபாடுகளும்
பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன; உறவுக்குள்
மணமுடிப்பதால் மட்டும் வருவதில்லை;
உறவுமுறைக்குள் திருமணம்
செய்வது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?
எந்தமாதிரியான உறவுத்திருமணங்கள் அதிக
பாதிப்பை ஏற்படுத்தும்? போன்ற
கேள்விகளுக்கு உறுதியான பதிலளிக்கும்
ஆய்வுமுடிவுகள்
தற்போதுவரை வெளிவரவில்லை என்றே தெரிகிறது;
மரபணுவியல் என்பது பெரிய கடல்; விரிவான ஆய்வுகள்
இன்னும் செய்யப்படவேண்டும்.
இவையனைத்தும் விக்கிபீடியாவில் படித்ததுதான்;
மேலும் தகவல்கள் தெரிந்தால் கூறுங்கள்.
https://m.facebook.com/photo.php?fbid=473826532721005&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
அக்கா மகள் மாமா மகள் அத்தை மகள் திருமணம் செய்யும் முறைகள் வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றன.தற்சமயம் இந்து குடும்பங்களில் பொருளாதாரத்திலும் சமூக ரிதியிலும் கல்வி ரிதியிலும் பின்தங்கிய குடும்பங்களிலே அக்கா மகளை திருமணம் செய்வது நடைபெறுகிறது. அக்கா மகளை திருமணம் செய்வது அறவே ஒழிந்து போய்விட்டது என்று கூறலாம். விரைவில் மிச்ச மீதியும் அழிந்து போய்விடும். படிப்படியான முன்னேற்றம் உள்ளது.
ReplyDeleteபண்டைய தமிழரின் மரபில் அக்கா மகளை திருமணம் செய்யும் வழக்கம் இல்லை.
ReplyDeleteஇது விஜய நகர தெலுங்கர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது
தமிழர்களின் சரியான திருமண உறவுமுறை பற்றி விளக்கும் வீடியோவை காணுங்கள்.
https://youtu.be/SWEaj8xJIo4