Monday, 24 January 2022

தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

முத்துர்ஜிகின் (Mutur Zinkin) எனும் ஆய்வாளர் உலகம் முழுவதும் சுற்றி ஆய்வு செய்து மொழி வரைபடம் வெளியிட்டுள்ளார்.
2010 வாக்கில் அவர் வெளியிட்ட மொழி வரைப்படத்துடன் தற்போதைய மாநில வரைபடத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மலையாளிகளிடம் நாம் இழந்தவை ஓரளவு இன்றும் தமிழ்பேசும் பகுதிகளாக உள்ளன.
தெலுங்கர் மற்றும் கன்னடர்களிடம் நாம் இழந்த பகுதிகளில் பாதிக்கும் மேல் அவர்கள் வசம் சென்றுவிட்டது. தமிழ்ப் பகுதிகள் எல்லைக்கு அருகே இன்றும் சில இடங்களில் மிகச் சிறியனவாக எஞ்சியுள்ளன.
அதேநேரத்தில் சில இடங்களில் எல்லை தாண்டி அந்நியர் குடியேற்றம் நடந்துள்ளது. 




Thursday, 20 January 2022

பத்து தலைமுறை கடந்த வந்தேறிகள்

பத்து தலைமுறை கடந்த வந்தேறிகளையும் நம்பமுடியாது ஏனென்றால்

எந்த ஒரு இனத்தாரும் வேறொரு இனத்திற்கு மத்தியில் குடியேறும்போது வந்த புதிதில் நன்றியுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களது அடுத்த தலைமுறையில் இந்த நன்றி மிகவும் குறைந்துவிடும். பத்து தலைமுறை கடந்துவிட்டால் இந்த நன்றி சுத்தமாக இருக்காது.

இந்த பழைய வந்தேறிகள் நன்றி இல்லாவிட்டாலும் நிலத்தின் அதிகாரம் மண்ணின் மைந்தர்கள் கைகளில்  இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுசரித்து நடந்து நன்றியுள்ளதுபோலக் காட்டிக்கொள்வார்கள்.

அதாவது இதுவே தமிழர்நாடு அமைந்து தமிழர் தலைமையில் தனியரசு செயல்பட்டு வரும்போது இங்கே புதிதாக தெலுங்கர், கன்னடர், மலையாளி, சிங்களவர், இந்தியர் அல்லது வேறுநாட்டவர் குடியேறினால் அவர்களை மூன்று தலைமுறைகள் கழித்து முழுமையாக நம்பலாம்.
அவர்கள் தமிழர்களோடு தமிழர்களாக நாட்டுப்பற்றுடன் நிச்சயம் இருப்பார்கள்.

ஆனால் இங்கே ஏற்கனவே குடியேறியிருக்கும் தெலுங்கு, கன்னட, மலையாள, சிங்கள, இந்தியர்களை (தமிழர்நாடு அமைந்தாலும் கூட) இன்னமும் பத்து தலைமுறை கடந்தாலும் நம்ப முடியாது.
ஏனென்றால் அருகிலேயே இவர்கள் தாய் நிலம் இருக்கிறது. அங்கே இவர்களுக்கான அரசாங்கம் இருக்கிறது.  இவர்களுக்குப் பிரச்சனை என்றால் அவர்கள் குரல்கொடுப்பார்கள். எல்லைகளும் திறந்தே கிடக்கின்றன. தமிழர் பலமற்று இருப்பதே இவர்களுக்கு லாபம்.
இது தவிர நமது தாராள மனத்தால் இவர்களுடைய ஆதிக்கம் தமிழர் நிலம் முழுவதும் பரவியிருக்கிறது.
வந்தேறிகள் மக்கட்தொகையும் தமிழினததின் எந்த தனி சாதிக்கும் குறைந்தது அல்ல.
எனவே இவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய அவசியம் குறைவு.

இதுவே தமிழர்நாடு அத்தனை ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முழுக்க தமிழருடைய கட்டுப்பாட்டில் வந்தபிறகு மூடப்பட்ட எல்லைக்குள் வாழும் பிற இனத்தார் தமிழர்களை விட இனப்பற்றும் மொழிப்பற்றும் நடந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஒரு மனிதன் பிறக்கும் சூழல்தான் அவனை அதற்குத் தக்க வடிவமைக்கிறது.

Tuesday, 18 January 2022

பாரதி ஏன் சிங்களத் தீவு என்று சொன்னார்

பாரதி ஏன் சிங்களத் தீவு என்று சொன்னார்

ஈழத்துப் பூதனார் என்று சங்க காலத்திலேயே ஈழத்தைப் பெயரோடு சேர்த்துக்கொண்ட புலவர் இருந்திருக்கிறார்.
பட்டினப்பாலையில் காவிரிப் பூம்பட்டினத்தில் ஈழத்து உணவு என்று ஈழத்தின் பெயரோடு உணவு இருந்திருக்கிறது.
இராமாயணத்தில் இலங்கை இருக்கிறது.
அப்படியிருக்க ஈழத்தையும் இலங்கையையும் விட்டுவிட்டு, பாரதியார் சிங்களத் தீவினுக்குப் பாலம் அமைக்கச் சொன்னது ஏன்?
பாரதியின் அடுத்த வரியும் நினைவுக்கு வந்தது.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" .
ஒரே நாட்டுக்கு வீதியும் பாலமும் ஏன்?
தமிழுக்கு வீதி; சிங்களத்துக்குப் பாலமா?
உறவுக்கு வீதி; ஒற்றுமைக்குப் பாலமா?
வீதிக்கும் பாலத்துக்கும் பாரதியார் வேறுபாடு காட்டிப் பாடியிருப்பது புரிந்தது.

ம. இராசேந்திரன்
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
-----------------------

தமிழர் பழமை மற்றும் சோழர் பேரரசு பற்றி அறிந்திருந்திருந்த பாரதியார் பூகோள அறிவும் வானியல் அறிவும் கொண்டிருந்தார் என்பது அவரது பாரத தேசம் கவிதை பாடலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

ஈழம் தமிழகம் இடையே மண் போட்டு நிரப்பி நிலவழித் தொடர்பு ஏற்படுத்துவது பற்றி அவர் கூறியிருப்பது மிகமிக வியப்பாக இருக்கிறது.

அவர் சிங்களவர் நாட்டுக்குப் பாலம் என்று குறிப்பிடுவது குமரி முனையில் இருந்து கொழும்பு நோக்கி என ஊகிக்கலாம்.

இதே பாடலில் சந்திர மண்டலம் வரை சென்று பார்த்து கற்கவேண்டும் என்று கூறியிருப்பதும்  வியப்பாக இருக்கிறது. 1917 லேயே ரஷ்ய அரசியல் பற்றி தெரிந்துவைத்திருந்த பாரதியார் அப்போது அங்கே ஆரம்பகட்ட ஆய்வில் இருந்த ராக்கெட் விஞ்ஞானம் பற்றியும் அறிந்துவைத்துள்ளார்.