Wednesday 16 March 2022

இலங்கையை எள்ளி நகையாடும் முன்

இலங்கையை எள்ளி நகையாடும் முன்

 இலங்கையின் இன்றைய நிலையை நினைத்து மகிழ்ச்சி கொள்ளிம் தமிழர்களின் மனநிலையை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

 எனக்குத் தெரிந்து இந்த உலகத்திலேயே அயோக்கியத்தனமான ஒரு தத்துவம் என்னவென்றால் "நீ ஒருவனே அடித்தால் உன்னை வேறொருவன் அடிப்பான்" என்னும் கோட்பாடுதான்.
 இதனால் முதலில் அடி வாங்கியவனக்கு எந்த பலனுமில்லை. இழந்தவனுக்கு இழந்தது திருப்பி கிடைப்பதுதான் நியாயம். அல்லது இழந்தவன் பதிலுக்கு இழப்பை ஏற்படுத்துவதும் அறம் என்றாகும்.
 அதை விடுத்து "பிடுங்கிச் சேர்த்தது பிடுங்கலில் போகும்" என்று பொதுப்படையாகக் கூறுவது கடவுள் நம்பிக்கை போல 'கையறுநிலையில் மனதை ஆறுதல் படுத்தும்' ஒரு போலியான நம்பிக்கைதான்.
 ஒருவனை இன்னொருவன் அடித்து அவனை வேறொருவன் அடித்தால் நியாயம் கிடைத்ததாக அர்த்தம் இல்லை. முதலாமவன் இரண்டாமவனை திருப்பி அடிக்க வேண்டும், இரண்டாமவன் மூன்றாமவனைத் திருப்பி அடிக்க வேண்டும், அதுதான் நியாயம்.
 என் அறிவுக்கு எட்டியவரை சிங்களவர்கள் அவ்வளவு சீக்கிரம் திருந்துகிற மக்கள் இல்லை.
 சிங்களவர்கள் பற்றி ஒரு வரியில் கூறவேண்டுமானால் இந்த நிலையிலும் நாளைக்கு புலிகள் இயக்கம் மீண்டும் தோன்றினால் நாளை மறுநாள் ராஜபக்ச தலைமையில் ஓரணியில் திரண்டு நிற்பார்கள். 
 இன்று சிங்களவரில் இரண்டொருவர் 'புலிகளிடம் நாட்டை கொடுத்திருக்கலாம்' என்று கூறுவது விரக்தியின் உச்சத்தில் வெளிவரும் வெற்று வார்த்தைகள் மட்டுமே!
 தமிழர்களுக்கு அரசியல் பற்றிய புரிதல் இன்னமும் வரவில்லை என்றே தோன்றுகிறது.
  இன்றைய இலங்கையின் நிலைகண்டு நகைக்கும் தமிழர்களின் பதிவுகள் எல்லாம் கையாலாகாதவன் விடும் சாபம் போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

 சிங்களவர்கள் ராஜபக்ச குடும்பத்தை பிடித்து இழந்த பணத்தை திருப்பி வாங்கவேண்டும்!

 தமிழர்கள் சிங்களவரை பதில் இனப்படுகொலை செய்யவேண்டும்!

இதுதான் அறம்!

 

Friday 11 March 2022

1921 இலேயே எழுத்து சீர்திருத்தம்

1921 இலேயே எழுத்து சீர்திருத்தம் 

 திருக்களர் மு. சாமிநாத உபாத்தியாயர் எனும் சைவசமய அறிஞரால் 1921 இல் எழுதப்பட்டு திருக்கோட்டூர் மு. சீனிவாச தேவர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு 1922 இல் வெளியான நூல் "சைவசமயமும் தமிழ்ப்பாடையும்" (பாஷை = பாடை).

 அதில் ஈ.வே.ரா செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படும் லை, ணை, னை ஆகிய எழுத்து சீர்திருத்தங்கள் பற்றி வருகிறது. 

 அதிலும் சிறப்பாக இந்நூல் எழுத்து சீர்திருத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு நடைமுறையில் இருந்ததாக கூறுகிறது. 
 வடமொழி எழுத்துக்களை தவிர்க்கும் வழக்கம் இருந்ததையும் குறிக்கிறது. 

 நூலின் பக்கங்கள் தமிழ் எழுத்துகளில் இருப்பது கூடுதல் சிறப்பு.

தகவலுக்கு நன்றி: Rengasamy Kumaran 

நூல் தரவிறக்கம் : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005543