Saturday 29 September 2018

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

பரியேறும் பறையர்

பரியேறும் பறையர்

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பறையர் திரைப்படத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.

106 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை ஒத்துள்ளது "பரியேறும் பெருமாள்" திரைப்படம்.

1913 இல் இராகவன் என்ற பறையர், தெலுங்கு உயர் சாதியினரான ரெட்டிகளால் படுகொலை செய்யப்பட்டதே அது.

'பறையன்' பத்திரிக்கை மோதலின் ஆரம்பம் முதலே அந்த பறையருக்காகக் குரல்கொடுத்து நியாயம் வாங்கித் தரமுடியாமல் தோற்றுப்போன கதை அது.

ஒரேயொரு வித்தியாசம் படத்தில் வருவது போல பறையர் கூலியாள் கிடையாது.
அவரும் நிலம் வைத்திருந்தார்.
தமது வேலையாட்களுக்கு அவர் அதிக கூலி கொடுத்ததால் ரெட்டிகளுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை.

ரெட்டியார்கள் மிரட்ட ராகவன் துணிந்து எதிர்க்கிறார்.

1890 களில் திண்டிவனம் அருகே விட்லாபுரம் எனும் கிராமத்தில் இது நடக்கிறது.
அக்கிராமத்தின் ஜமீன்தார் குடும்பமான கோவிந்தராஜுலு குடும்பம் வேலையாட்களுக்கு ஒரணா கூலி கொடுத்து வேலை வாங்குகிறது.
ராகவன் தமது வேலையாட்களுக்கு இரண்டணா கொடுத்து வந்தார்.
இதனால் மோதல் தொடங்குகிறது.

1897 இல் ராகவனின் விளைந்து நின்ற வயலை ரெட்டிகள் தமது கால்நடைகளை விட்டு நாசம் செய்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு நெருப்புக்கு வைக்கின்றனர்.

ராகவனைக் கொலைசெய்ய நாள் குறிக்கின்றனர்.
இதையறிந்த ராகவன் சென்னை தப்பிச் செல்கிறார்.

சென்னையில் இராயப்பேட்டையில் இருந்த தமது உறவினர் தங்கவேலுப்பிள்ளை என்பவர் மூலம் பறையன் இதழுக்கு இது பற்றி எழுதுகிறார்.
அது செய்தியாக வருகிறது.

(பிள்ளை பட்டத்தை பறையரும் பயன்படுத்துவது உண்டு.
அப்போது பறையன் ஏட்டின் பத்ராதிபதியான ரெட்டமலை சீனாவாசன் கூட பிள்ளை பட்டம் கொண்ட பறையர்தான்)

இந்நிலையில் இராகவன் தமது வீடுகளில் திருடிவிட்டு ஓடியதாக ரெட்டிகள் தமது சாதியினரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டனர்.
ஏற்கனவே பறையன் இதழில் வெளிவந்த செய்தியை ராகவன் ஆதாரமாகக் காட்ட  திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணசாமி ஐயர் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதோடு ரெட்டிகளை கண்டித்து அனுப்பினார்.
இது நடந்தது 1903.

பிறகு ராகவனும் ஊர்திரும்பினார்.
பணவிரயமும் அவமானமும் அடைந்த ரெட்டிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து இராகவன் கதையை முடித்தனர்.

  திட்டமிட்டு தமது மாடுகளை ராகவன் நிலத்தில் மேயவிட்ட ரெட்டிகள் இராகவன் அந்த மாடுகளைப் பிடித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கச் சென்றபோது  இராகவனை வழியிலேயே மறித்து அடித்தே கொலை செய்தனர்.

இந்த கொலைவழக்கு நடந்தபோது தங்கவேலுப்பிள்ளை ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்த பிறகு ராகவனின் மகன் கணபதி என்பவர் எழுதிய விரிவான கடிதமும் 19.03.1913 தேதியிட்ட பறையன் இதழில் வெளியானது.

1914 க்குப் பிறகு பறையன்  இதழ் நலிவடைந்து விட்டதால் கொலைவழக்கின் தீர்ப்பு என்னவானது என்பது தெரியவில்லை.

நாம் கூறவிரும்புவது....

தமிழகத்தில் நிலவுடைமை பெரும்பாலும் வந்தேறிகள் கையில்.

தமிழகத்து ஜமீன்தார்கள் பெரும்பாலும் தெலுங்கர்.

விட்லாபுரம் போல கீழவெண்மணி, குறிஞ்சாக்குளம் என மேலும் எடுத்துக்காட்டுகள் உண்டு

படம்: ஆங்கிலேயர் கால நிலவுடைமைச் சாதிகள் (வரைபடம்)

Wednesday 26 September 2018

கயவாளி கட்டபொம்மன் - 7

கயவாளி கட்டபொம்மன்
பகுதி - 7
பதிவர்: ஆதி பேரொளி

"ஜாக்சன் துரை"
---------

1797 இல் கடைசிக் கட்டபொம்மன் பதவியேற்று ஏழாண்டுகள் ஆன நிலையில் தென்தமிழகத்துக்கு கலெக்டராக வருகிறான் டபிள்யூ. சி.ஜாக்சன் என்பவன்.

திமிர் பிடித்தவனாகவும் முன்கோப முரடனாகவும் அவன் இருந்தான்.

கலெக்டர் என்ற பதவி வரிகளை கலெக்ட் செய்யும் பதவியே ஆகும்.

வந்தவுடன் அவன் வரிப்பணம் எங்கெங்கு தேங்கி நிற்கிறது என்று பார்த்து அதற்கு காரணம் யார் யார் என்று பட்டியலிட்டான்.

ஆங்கிலேயருக்கு அடங்கிய பாளையக்காரர் பட்டியலில் வரியேய்ப்பில் முதலிடம் பிடித்திருந்தான் கட்டபொம்மன்.

வரி கட்டாமல் சாக்கு போக்கு சொல்லியும் வரிவசூலிக்க வருவோரை தாஜா செய்துமே அவன் காலத்தை ஓட்டி வந்துள்ளான்.
அதுவும் ஆறு ஆண்டுகளாக.
அந்த வரிப் பாக்கி ஆறாயிரம் சக்கரம் அளவு வளர்ந்திருந்தது.

ஜாக்சன் உடனே ஆலன் துரை என்பவனை அனுப்பினான்.
அவனை தடபுடலாக வரவேற்று எல்லா வகையிலும் திருப்தி செய்து வரிப்பணம் கொடுக்காமல் சாக்குபோக்கு சொல்லி திருப்பி அனுப்பினான்.

1798 ஜனவரி 30 அன்று ஆழ்வார்திருநகரியில் திருவிழா ஒன்று நடந்தது.
அப்போது இரவுநேரத்தில் அப்பகுதியைச் சுற்றிவளைத்தது கட்டபொம்மனின் கொள்ளைப்படை.

இத்தனை ஆண்டுகளாக பெரும்பொருள் ஈட்டியிருந்த அவன் நிறைய ஆயுதங்களும் ஆட்களும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலே புகுந்து ஆயிரக்கணக்கான மக்களை சுற்றிவளைத்து வெளிப்படையாக கொள்ளையடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்.

அப்பகுதி ஹாமில்டன் என்கிற அதிகாரியின் கட்டளையின் கீழ் இருந்தது.
அந்த அதிகாரியின் விடுதியையும் கட்டபொம்மன் ஆட்களால் சுற்றிவளைத்து கதவுகளைப் பூட்டி அவன் வெளிவராதபடி செய்திருந்தான்.

நள்ளிரவில் மக்களனைவரையும் கொள்ளையிட்டுவிட்டு பாஞ்சாலங்குறிச்சி திரும்பினான்.

கட்டபொம்மன் உண்மையிலேயே விடுதலை வீரன்தானோ என்று ஐயம் எழும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இது பற்றி மறுநாள் ஹாமில்டன் ஜாக்சனுக்கு கடிதம் எழுதி புகார் செய்தான்.

இதனால் ஜாக்சன் 03 பிப்ரவரி, 28 ஏப்ரல், 23 மார்ச், 08 ஏப்ரல் ஆகிய தேதிகளில் நான்கு  முறை கடிதம் எழுதியும் ஆளனுப்பியும் எந்த பயனும் இல்லாமல் போனது.

ஒரு ஆளை இவன் அனுப்பினால் கட்டபொம்மன் வந்த ஆளை தடபுடலாக வரவேற்று கழுவிவிடாத குறையாக உபசரித்து சாக்குபோக்கு சொல்லி வெறுங்கையுடன்   திருப்பி அனுப்பினான்.
போனவர்களும் கட்டபொம்மனின் விருந்தோம்பலில் மயங்கி திப்புவுடனான மோதல் நடந்து முடியும்வரையும் அது முடிந்தாலும் சில காலம்வரை படை நடவடிக்கை எதுவுமிருக்காது என்று அரசின் உள்விவகாரங்களை உளறிவிட்டு வந்தனர்.

இறுதியாக 18.08.1798 அன்று தன்னை இராமநாதபுரத்தில் வந்து நேரில் சந்திக்குமாறும் இல்லாவிட்டால் பாளையக்கார பதவி பறிக்கப்படும் என்றும் மிரட்டி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

'இதைப் பார்த்து அவன் பயந்து ஓடிவந்தால் அவன் நமக்கு அடிமை
இல்லன்னா நாம அவனுக்கு அடிமை' என்று ஜாக்சன் மனதில் நினைத்துக் கொண்டான்.

(அக்காலத்தில் எல்லா கடிதங்களும் இரண்டாக எழுதப்பட்டு ஒன்று அனுப்பப்படுவதும் ஒன்று ஆவணமாக சேகரிக்கப்படுவதும் வழக்கமாக இருந்ததால் இக்கடிதங்கள் நமக்கு கிடைத்துள்ளன.)

பதவியைப் பறித்துவிட்டால் கூடிய விரைவில் ஆங்கிலப் படையுடன் மோதல் வரும் என்று உணர்ந்த கட்டபொம்மன் அதற்குமுன்பே முழுதாக தன்னை தயார்படுத்திக் கொண்டு நாலாயிரம் பேர் கொண்ட படைபரிவாரத்துடன் இராமநாதபுரம் நோக்கி "போர்! ஆமாம் போர்!" என்று கத்திக்கொண்டு சென்றான்.

எதற்காக சென்றான் என்றால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கத்தான்.

எதை? வேறு எதை?! வரி பாக்கியைத்தான்.

ஆறாண்டு வரிப்பணம், வட்டி, அபராதம், பரிசுகள் இதையெல்லாம் ஆங்கிலேயரிடம் கொண்டு சேர்ப்பிக்கத்தான் நாலாயிரம் பேர்!

ஜாக்சன் தனக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டானென்று வைத்திருந்த வஞ்சத்தையெல்லாம் கொட்டி  அவனை 'வைத்துசெய்ய' முடிவெடுத்தான்.

கெட்டிபொம்மு ராமநாதபுரம் வரவும் கலெக்டர் குற்றாலம் புறப்பட்டு போய்விட்டான்.
கட்டபொம்மன் அங்கேயும் போனான்.
அவனை பார்க்காமல் காக்கவைத்த ஜாக்சன் சொக்கம்பட்டிக்கு கிளம்பினான்.
கட்டபொம்மன் படையும் பின்தொடர்ந்து போனது.

இப்படியே கட்டபொம்மன் கொள்ளையடித்த சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களுக்கு அடுத்தடுத்து சென்று முகாமிட்டான் ஜாக்சன்.
கெட்டிபொம்மனை ஊருக்கு வெளியில் காத்துக்கிடக்க வைத்து அவமானப் படுத்தினான்.

அப்பகுதி மக்களெல்லாம் கைகொட்டி சிரித்தனர்.
'கொள்ளைக்கார கெட்டிபொம்மு கும்பினிக் குண்டியைத் தாங்கும் அழகென்ன?' என்று எள்ளி நகையாடினர்.

இப்படி செய்தால் கட்டபொம்மு ரோசம் வந்து தன் பாளையம் போய்விடுவான்.
அவனை மேலிடத்தில் சொல்லி சிதைத்துவிடலாம் என்பது ஜாக்சனின் நோக்கம்.

கெட்டிபொம்முவோ "மானமா? பதவியா? பதவிதான்" என்கிற முடிவில் இருந்தான்.

அடுத்து பேரையூர், பவாலி, பள்ளிமடை, கமுதி என அலைக்கழித்தான் ஜாக்சன்.
கெட்டிபொம்மு நாயினும் கேடாக பின்னாலேயே அலைந்தான்.

ஆகஸ்டு 24 அன்று ஆரம்பித்த இந்த 'சுற்றோ சுற்று பயணம்' செம்டம்பர் 9 அன்று இராமநாதபுரத்தில் முடிந்தது.

அடுத்த நாள் கட்டபொம்மன் அழைக்கப்பட்டான்.
படைகள் கோட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு துணையாட்கள் கீழே நிறுத்தப்பட்டு கட்டபொம்மன்  இரண்டு பேருடன் மாடிக்கு சென்றான்.
தலையைத் தொங்கப்போட்டபடி பெட்டிப்பாம்பாக உள்ளே நுழைந்தான்.

கெட்டிபொம்மு மீது ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் குவிந்திருந்ததால் ஆங்கில மேலிடம் கட்டபொம்மனை விசாரிக்கும்போது அதை அப்படியே பதிவு செய்து ரிப்போர்ட் அனுப்புமாறு சொல்லியிருந்தது.
எனவே அங்கு நடந்தவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்சனின் முதல் கேள்வி "உன் கிஸ்தி பாக்கி எங்கே?" என்பது.
சல்லி பாக்கியில்லாமல் கொண்டுவந்துள்ளதாக கூறினான் கட்டபொம்மன்.

ஆனால் கட்டபொம்மன் பக்தர்கள் எப்படி எழுதியுள்ளனர்.
"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி?" என்று தூய தமிழில் பேசியதாக கதைவடித்துள்ளனர்.

உண்மையில் "Heavens supplied earth with rain. our cattle ploughed the land. why we should pay?" என்று மதுரை கள்ளர் ஏற்படுத்திய 'தன்னரசு நாடு' எனும் அமைப்பு இவ்வாறு பேசியதாக ஆங்கிலேயர் குறித்துள்ளனர்.
(சான்று: East india magazine by R.Alexander
மற்றும் Edger Thurston)

பணம் கிடைத்துவிடும் என்றதும் சற்று சாந்தமடைந்த ஜாக்சன் தனது கெத்தை விடாமல் அதுவரை தான் எழுதிய கடிதங்களை படித்துக்காட்டச் சொல்லி அதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்டான்.

கட்டபொம்மன் தான் ஒரு கைநாட்டு என்றும் தனக்கு தமிழே ததிங்கினத்தோம் போடும் என்றும் எல்லாவற்றிற்கும் வாய்வார்த்தையாக பதிலளித்ததாகவும் கூறினான்.

சமாதானமடையாத ஜாக்சன் "இந்த ரிப்போர்ட் சென்னைக்கு போய் பதில் வந்த பிறகுதான் நீ இங்கிருந்து போக முடியும்.
அதுவரை இங்கேயே கிட" என்று மிரட்டினான்.

  ஜாக்சனின் முரட்டு தோற்றத்தையும் கணீரென்ற குரலையும் கண்டு வெலவெலத்துபோன கட்டபொம்மன் இங்கேயே இருந்தால் இவன் கொன்று தின்று விடுவானே என்று நடுநடுங்கினான்.
அப்போது அவன் வயிற்றில் கடமுடா என்று சத்தம் கேட்டது.

அவன் ஜாக்சனிடம் தனக்கு வயிற்றை கலக்குவதாகவும் 'ஆய்' வருவதாகவும் கூறினான்.

ஜாக்சன் 'கொல்லைப்பக்கம் ஓடு' என்று எரிச்சலுடன் கூறினான்.

மாடிப்படி இறங்கிய கட்டபொம்மன் பாதியிலேயே கழிந்துவிட்டான்.
பயத்தில் நாவறண்டு கண்கள் இருட்டிக்கொள்ள கைகால் விறைத்துக் கொள்ள அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.

கீழே இருந்த அவனது ஆட்கள், பீதியில் பேதியாகி நடுவழியில் நட்டுக்கொண்ட கட்டபொம்மனை விரைந்து சென்று அப்படியே தூக்கிக்கொண்டு தப்பித்தால் போதுமென்று ஓடினர்.

கோட்டையைக் கடக்கும்போது கோட்டைக் காவல்படை அதன் அதிகாரி லெப்டினன்ட் க்ளார்க் என்பவன் தலைமையில் கட்டபொம்மன் படையைத் தடுக்கப் பார்த்தது.
இம்மோதலில் இருபுறமும் பலர் உயிரிழந்தனர்.
கட்டபொம்மன் படை பெரிது.
அது கிளார்க்கை கொலை செய்துவிட்டு போட்டது போட்டபடி ஓட்டமெடுத்தது.

கட்டபொம்மனை ஆயோடு ஆயாக அள்ளிக்கொண்டு ஓடிய கதை பட்டிதொட்டியெல்லாம் பரவி மக்களெல்லாம் கைகொட்டி சிரித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கட்டபொம்மன் பொதுமக்கள் மீது கோபத்தைக் காட்டினான்.
பாஞ்சாலங்குறிச்சி நோக்கி போகும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையடித்தபடி சென்றனர்.

பாஞ்சாலங்குறிச்சி வந்ததும் தூத்துக்குடி கள்ளக்கடத்தலில் தனக்கு பழக்கமான ஒரு ஆங்கிலேய உளவாளியை அவன் வரவழைத்தான்.
டேவிசன் என்கிற அவன் யோசனைப்படி திருச்சியில் இருந்த ஆங்கிலேய உயரதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
அதில் ஜாக்சன் தனக்கு செய்த கொடுமைகளை விவரித்து 'இது நியாயமா?' என்று கேட்டு எழுதினான்.

இருவரையும் கும்பினி மேலிடம் 05.10.1798 அன்று திருச்சிக்கு அழைத்து விசாரணை நடத்தியது.

கட்டபொம்மன் ஆறு ஆண்டுகளாக விளைச்சல் சரியில்லை என்றும்
தானும் மக்களும் வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும்
கொள்ளையர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
அதனாலேயே வரியை கட்டவில்லை என்றும் கூறி திறமையாக நடித்தான்.
தான் உயிருக்கு பயந்தே ஓடியதாகவும் தப்பிக்க நினைக்கவில்லை என்றும் கண்ணீர்விட்டு காலில் விழாத குறையாக கெஞ்சினான்.

ஜாக்சனோ கட்டபொம்மன் தேர்ந்த ஒரு கயவாளி என்றும் இவனை நம்புவது நமக்கு பெருங்கேடாக முடியும் என்றும் வாதிட்டான்.

ஜாக்சனின் முரட்டு சுபாவத்தால் கோபமடைந்த கும்பினி நிர்வாகம் அவனை வேலையை விட்டு தூக்கியது.

இதற்கு அனுபவிப்பீர்கள் என்று கறுவிக்கொண்டு ஜாக்சன் போய்விட்டான்.

கட்டபொம்மன் அனைத்து பாக்கியையும் கட்டியதுடன் ஆங்கிலேயருக்கு அடிமைச் சாசனமும் எழுதிக் கொடுத்ததால் அவனுக்கு மன்னிப்பு வழங்கியதோடு அவனை தம்முடன் சில நாட்கள் தங்கச் செய்து விருந்தளித்தது கும்பினி மேலிடம்.

அவன் புறப்படும் முன்பு ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள முத்துமாலையையும் இருபுறமும் கூர்மையுள்ள ஆங்கிலக்கொடி முத்திரை பதித்த வடிவாள் ஒன்றையும் ஏழு குதிரைகளையும் பரிசாக அளித்து சூடாமணி என்ற பட்டத்தையும் மேலதிகாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு அளித்தனர்.

கட்டபொம்மு ஆங்கிலேயரோடு 'ஒன்றுக்குள் ஒன்றாக' ஆன இந்த திருச்சி படலம் கட்டபொம்மன் பக்தர்களால் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

கட்டபொம்மனைப் புகழ்ந்த அனைத்து புத்தகங்களும் ஜெகவீரபாண்டியன் என்ற தெலுங்கர் எழுதிய "பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டன.
அதிலேகூட திருச்சி நிகழ்வுகள் மறைக்கப்படவில்லை.

இவ்வாறு கட்டபொம்மன் முந்தைய குற்றங்கள் அனைத்திலிருந்தும் தப்பித்தான்.
என்னதான் இருந்தாலும் கொல்லப்பட்ட கிளார்க் ஒரு வெள்ளையன்.
எனவே அந்த கொலைவழக்கில் மட்டும் கட்டபொம்மன் பெயருக்கு சேர்க்கப்பட்டு சிறிதுகாலம் அலைக்கழிக்கப்பட்டான்.

"என்னையே தூக்கிக்கொண்டுதான் போனார்கள் நான் எப்படி கொலைசெய்வேன்?!
வேண்டுமானால் கிளார்க் குடும்பத்திற்கு நட்டயீடு தந்துவிடுகிறேன்" என்று கூறி விடுதலையானான்.

இதன்பிறகாவது அவன் ஒழுங்காக இருந்தானா?!
கட்டபொம்மன் என்கிற வேதாளம்  வரிபாக்கி, கொலை, கொள்ளை என மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

கலெக்டராக இருந்த லூசிங்டன் எடுத்த அலுவலக நடவடிக்கைகள் பயனற்றுப் போயின.

அப்போது கட்டபொம்மனுக்கு முடிவுரை எழுத வந்துசேர்ந்தான் ராணுவ அதிகாரி பானர்மேன்.

(தொடரும்)




Monday 24 September 2018

சாய் பாபா ஒரு இசுலாமியர்

சாய் பாபா ஒரு இசுலாமியர்

1999 இல் மாயா என்றொரு படம் வந்தது.
சாய் பாபா பற்றிய படமான அதில் சாய் அவதாரமான சிறுவன் "அல்லா மாலிக்" "அல்லா மாலிக்" என்று கூறுவான்.

இதன் பொருள் இறைவனே(அல்லா) முதலாளி என்பது.

(இறைவன் ஒருவனே என்பது இசுலாமியக் கொள்கை)

சாய்பாபா புகைப்படங்கள் சில உண்டு.
காவி உடை, பட்டை, நாமம், குங்குமம், கழுத்தில் மாலை என எந்த இந்து அடையாளமும் அதில் இல்லை.

அவர் தங்கி இருந்தது பாழடைந்த பள்ளிவாசல்.

தலையை மூடியவாறு வெள்ளைத்துணியை அணிந்துள்ளார்.

அவர் இசுலாமிய சூபி ஞானி என்பதற்கு இத்தகைய சில சான்றுகள் உண்டு.

ஆனால் இந்து என்பதற்கு எந்த சிறு சான்றும் கிடையாது.

டிவி தொடர்களில் வரும் அத்தனையும் கட்டுக்கதைகள்.

அவர் அன்னதானம் நடத்தும்போது ஒரு பிடி அரிசியோ உள்ளங்கையளவு எண்ணெயோ ஒருவரும் வழங்கவில்லை.

அவர் மிக மிக ஏழ்மையில் கிடந்து இறந்துள்ளார்.

இப்போது சீரடியில் வைர மகுடம் என்ன?
தங்க சிம்மாசனமென்ன?  
பட்டு உடையென்ன?
நெய் பலகாரப் படையல்கள் என்ன?

இந்த நாட்டு மக்கள் எவ்வளவு கூமுட்டைகள் என்பதற்கு சாய்பாபா பக்தி ஒரு உதாரணம்.

தமிழ்நாடும் அத்தகைய கூமுட்டைநாடாக ஆகவேண்டாம்.

கயவாளி கட்டபொம்மன் - 6

கயவாளி கட்டபொம்மன் - 6

  ஏற்கனவே கட்டபொம்மனின் முன்னோர் பற்றி ஐந்து பகுதிகளாக பார்த்துவிட்டோம்.
இதுவரை அன்பெழில் என்பவர் எழுதியது.
இனி அவரது நகைச்சுவை நடையிலேயே தெலுங்கர் தலையில் வைத்து கொண்டாடும் கடைசி கட்டபொம்மனைப் பற்றி நாம் அடுத்த வரும் பகுதிகளில் எழுதுகிறோம்.
--------
பதிவர்: ஆதி பேரொளி

பகுதி - 6
கடைசி கட்டபொம்மன்
---------
கட்டபொம்மன் பரம்பரையில் கடைசி வாரிசு 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஆவான்.
இவன் பிறந்த்து 1760.
'விளக்கமாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சலம்' என்பதுபோல பாண்டியர் பெயரை இவனும் சூடிக்கொண்டு திரிந்தான்.

முப்பது வயதில் 1790இல் தந்தை இறந்ததை அடுத்து இவன் பதவிக்கு வந்தான்.

இவன் தன் முன்னோர்களையும் விட பயங்கரமான கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக இருந்ததோடு புதிதாக கூலிப்படைத் தலைவன் என்ற அவதாரமும் எடுத்தான்.

இவன் காலத்தில் நடத்திய கொள்ளைகள் பற்றி கும்மி பாடல்கள் உண்டு.
வெள்ளைக்கார துரையிடம் கொடுத்த பிராது மனுக்களும் உண்டு.

அருங்குளத்தில் கம்பஞ்சோலையில் புகுந்து ஆயிரம் கட்டு அறுத்துச் சென்றான்.
வருமாங்குளம் தட்டைப் பயிரில் நெருப்பு வைத்துவிட்டான்.
இரவு நேரங்களில் எல்லை தாண்டி பொதுமக்கள் வீடு புகுந்து கொள்ளையிட்டான்.
காட்டிநாயக்கன்பட்டி எல்லையில் மேய்ந்த முப்பது காளைகள் மற்றும் நாற்பது பசுக்களை ஒட்டிக்கொண்டு போனான்.
பக்கத்து சீமைகளில் ஆடிக்காற்று வீசும் நேரம் வயல்வெளிகளில் நெருப்பு மூட்டிவிட்டான்.
இதிலே பயிர்களுடன் பட்டி போட்டிருந்த ஆடுகள் எரிந்து இறந்தன.
இதெல்லாம் ஒரு சாம்பிளுக்கு சொல்லியவை.

அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் டோரின் என்பவன்.
அவனிடம் பொதுமக்களின் பிராதுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதோடு எட்டயபுரமும் கட்டபொம்மன் தமது எல்லைக்குள் வந்து கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார் அனுப்பி வந்தது.

திப்பு சுல்தானுடன் போர்மூளும் சூழல் இருப்பதால் தெற்கே படை நடவடிக்கை எதுவும் செய்யமுடியாத நிலை எனவே டோரின் கர்னல் மாக்ஸ்வெல் என்பவனை அனுப்பி எல்லைகளை வரையறுக்க சொன்னான்.

இதன்படி தந்தைக் காலத்திலே ஆட்டையைப்போட்ட (எட்டயபுரத்திற்கு சொந்தமான) அருங்குளம் மற்றும் சுப்பலாபுரம் ஆகிய கிராமங்களை கட்டபொம்மன் ஆண்டு அனுபவித்து வருவது தெரிந்தது.

டோரின் ஒரு எல்லைக்கோடு வரைந்து "இதைத்தாண்டி நீயும் வரக்கூடாது அவனும் வரமாட்டான்" என்று கூறிச் சென்றான்.
ஆனால் கட்டபொம்மன் கேட்கவில்லை.
'போடா ஹைகோர்ட்டு' என்று எப்போதும்போல தன் அடாவடியைத் தொடர்ந்தான்.

கட்டபொம்மன் 'ரொம்ப தைரியமான ஆள்' என்று  இதற்கு அர்த்தமல்ல.
டோரினின் அல்லக்கை ஒரு கம்பளத்து நாயக்கன்.
அவனை கட்டபொம்மன் கைக்குள் போட்டுக் கொண்டான்.
ஆங்கிலப்படை திப்புவை அடக்குவதில் கவனமாக இருப்பதையும் தெற்கே படை நடவடிக்கை நீண்டகாலத்திற்கு இருக்காது என்றும் அவன் கட்டபொம்மனிடம் 'செப்பி' இருந்தான்.

கட்டபொம்மன் தனது கொள்ளைப்படையை தற்போது கூலிப்படையாகவும் பயன்படுத்தினான்.
ஆட்களை கடத்திவந்து பணயம் கேட்டு பணம்பெற்றுக்கொண்டு விடுவிப்பது, பணத்திற்கு கொலைசெய்வது,  கட்டப்பஞ்சாயத்து செய்வது என திருநெல்வேலி ஏரியாவில் பெரிய ரவுடியாக அவன் ஃபார்ம் ஆகிவிட்டான்.

அப்போது சிவகிரி மறவர் பாளையத்தில் பதவியில் இருந்தவர் வயதானவர்.
அவரது மருமகனும் அல்லக்கை ஒருவனும் சேர்ந்து அவரது மகனை பதவியில் அமர்த்த திட்டமிட்டனர்.

சிவகிரி பெரியவரைத் தீர்த்துக்கட்ட கட்டபொம்மனே சரியான ஆள் என்று நினைத்து இம்மூவரும் அவனை நாடினர்.

கட்டபொம்மன் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தான்.
அதன்படி ஒரு விழாவில் விருந்தினனாக கட்டபொம்மனை அழைத்தனர்.
அன்றிரவு பெரியவரைக் கொலைசெய்வதாகத் திட்டம்.
ஆனால் கட்டபொம்மனின் 'நல்ல குணத்தை' அறிந்திருந்த பெரியவர் இதை யூகித்து இரவே தப்பி தனது நண்பரான சேத்தூர் பாளையக்காரரிடம் தஞ்சமடைந்தார்.

பிறகு அவரது மகனும் அரியணை ஏறினான்.
அவனது சகாக்களும் பெரிய பதவிகளில் அமர்ந்தனர்.
கட்டபொம்மனுக்கு பெரிய தொகை கிடைத்தது.

ஆனால் சேத்தூர் பாளையக்காரர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்றெண்ணி கட்டபொம்மன் தொடைநடுங்கிக் கிடந்த வேளையில் சிவகிரி பெரியவரை சேத்தூரில் இருந்து கடத்தி கொண்டுவரும் ப்ராஜக்ட் அவனிடம் வந்தது.

பணம் என்றவுடன் ரிஸ்க் எடுக்க முடிவுசெய்த கட்டபொம்மன் சேத்தூர் பாளையக்காரருக்கு, சிவகிரியார் தன்னை தவறாகப் புரிந்துகொண்டதாகவும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதினான்.

சேத்தூரில் சமாதானக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கட்டபொம்மன் நல்லவன் போல திறம்பட நடித்தான்.
ஆனால் சிவகிரியார் மசியவில்லை.
'நீ படம் ஓட்டுனது போதும்' என்று கூறிவிட்டார்.

எனவே சிவகிரி பெரியவர் சேத்தூரிலேயே தங்கிவிடுவது என்றும் அதற்கு சிவகிரி பாளையம் மாதாமாதம் ஒரு தொகை கொடுக்கும் என்று பேசி முடிக்கப்பட்டது.

கட்டபொம்மன் 'நான் ட்ரீட் தருவேன்' என்றான்.
தூத்துக்குடியில் கள்ளக்கடத்தல் செய்யும் டச்சுக்காரர்கள் தன் 'அருமை நண்பா கட்டபொம்மா'வுக்கு பரிசாகத் தந்த 'ஃபாரின் சரக்கு' பாட்டில்களை எல்லார் முன்பும் அடுக்கினான்.

புதுவித சரக்கு என்றதும் எல்லாருக்கும் ஜொள்ளு வடிய 'ஓகே' என்றனர்.
மதுவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அனைவரும் சிறிது நேரத்திலேயே மட்டையாகினர். பார்ட்டி முடிந்தது.

அப்போது சிவகிரியாரை ஒரு மூட்டையில் கட்டினான் கட்டபொம்மன்.
அப்போது லேசாக விழிப்பு தட்டிய சேத்தூரார் சத்தம் போடத் தொடங்கினார்.
அவர் தொண்டையில் வாளைப் பாய்ச்சி கொலை செய்தான் கட்டபொம்மன்.
விருந்திட்டவனையே ஊற்றிக்கொடுத்து படுகொலை செய்தான்.

சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி வெட்டி கொலைசெய்தான்.

சிவகிரி பெரியவரை கட்டித் தூக்கிக் கொண்டு சிவகிரிக்கு கொண்டுவந்து சிறையில் இட்டு நல்ல கூலி வாங்கிக்கொண்டான்.

ஆம். வீராதி வீரனென்று தலையில் வைத்தாடும் கடைசி கட்டபொம்மன் ஒரு  முதியவரைக் கொல்லப்பார்த்தவன்.
ஒரு நிராயுதபாணியையும் ஒரு பெண்ணையும் பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்த படுபாவி.
எல்லாம் பணத்துக்காக.

இந்த சதிக்கூட்டணி செய்த ஒரே தவறு சிவகிரியாரை உயிரோடு விட்டது.

சிறையில் கிடந்த அந்த முதியவர் வேறுவழியின்றி நடந்ததை நம்பிக்கையான ஒரு ஆள் மூலம் ஆங்கிலேயருக்கு செய்தி அனுப்பி தன்னைக் காப்பாற்றுமாறு கோரினார்.
இதைச் செய்தால் ஆங்கிலேயருக்கு என்றும் விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தார்.

ஒரு கூலிப்படைக்கு பதிலடி கொடுக்க இன்னொரு கூலிப்படைதானே வரவேண்டும்?!

ஆகா! சிவகிரியை வளைக்க நல்ல தருணம் என்று படையோடு ஓடோடி வந்தான் கர்னல் மாக்ஸ்வெல்.

'படை எதுவும் வராது' என்று எண்ணியிருந்த கட்டபொம்மன் மாக்ஸ்வெல் வருவது தெரிந்ததும் சிவகிரி சின்னவனை நட்டாற்றில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான்.

கட்டபொம்மு காணாமல் போய்விட்டான் என்றறிந்த சிவகிரி சின்னவன் 'மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு' என்று  தன் சகாக்களைத் தேட அவர்களும் கம்பிநீட்டிவிட்டது தெரிந்தது.
வேறுவழியின்றி ஆங்கிலேயரிடம் சரணடைந்தான்.

சிவகிரி பெரியவரை மீண்டும் பதவியில் அமர்த்தினான் மாக்ஸ்வெல்.
ஓடிப்போன இருவரையும் தேடும் குற்றவாளியாக அறிவித்தான்.

இந்நிலையில் தலைமறைவான சிவகிரி பாளையத்தின் முன்னாள் அல்லக்கை ஊற்றுமலையில் பிடிபட்டான்.
அவன் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று பீதியடைந்த கட்டபொம்மன் கலெக்டர் டோரினின் அல்லக்கையான தன் சாதிக்காரனைத் தொடர்புகொண்டு இந்த வழக்கில் தன்னை சேர்க்காமல் இருந்தால் கலெக்டருக்கு லஞ்சம் தருவதாக கூறும்படி பேரம்பேச அனுப்பினான்.

டோரின் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டபொம்மன் சம்பந்தப்பட்ட சேத்தூர் கொலை வழக்கு ஆவணங்களைத் தீவைத்து கொளுத்தினான்.

இந்த டீலிங் கர்னல் மாக்ஸ்வெல்லுக்கு தெரிந்துவிட்டது.
அவன் கலெக்டர் டோரினையும் சேர்த்து மேலிடத்தில் போட்டுக்கொடுத்தான்.

டோரின் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
அவனது அல்லக்கையான கம்பளத்தானைப் பிடித்து உள்ளே தள்ளி நொங்கைப் பிதுக்கிவிட்டனர்.

ஆவணங்கள் எரிந்துவிட்டதாலும் அல்லக்கை கம்பளத்தான் தன் இனத்தானைக் காட்டிக்கொடுக்காமல் இனப்பற்று காட்டியதாலும் கட்டபொம்மன் கொலைப்பழியில் இருந்து தப்பினான்.

கலெக்டர்கள் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க ஆங்கிலேய மேலிடம் கலெக்டர்களது சம்பளத்தை 250 வராகனாக உயர்த்தி அத்தோடு வசூலிக்கும் தொகையில் 1.5% கமிஷனும் தரப்படும் என்று உத்தரவிட்டனர்.

கொலைவழக்கிலிருந்து தப்பிய கட்டபொம்மனது அட்டகாசம் இன்னும் அதிகமானது.
எல்லைதாண்டி ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் வரை சென்று இரவு நேரங்களில் கொள்ளையடித்தான்.
ஏழை எளிய பெண்களின் சிறிய கம்மலையும் காதோடு அறுத்ததால் 'காதறுத்தான் கட்டபொம்மன்' என்று பெயர்பெற்றான்.
கொஞ்சம் வசதியானவர்களைத் தூக்கிவந்து பணயத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்தான்.
(இதை கட்டபொம்மன் பற்றி நூலெழுதியோரில்  ம.பொ.சி தவிர அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கால்டுவெல் கூட தனது திருநெல்வேலி வரலாறு எனும் நூலிலும் கட்டபொம்மனின் கொள்ளைகளைப் பற்றிக் கூறியுள்ளார்)

கெட்டிபொம்முவை அடியொற்றி பல கொள்ளைக்கூட்டங்கள் முளைத்தன.
அவற்றில் சில கட்டபொம்மன் படையில் சேர்ந்தன.

இந்நிலையில் ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானோடு போர் மூண்டது.
சொல்லப்போனால் திப்பு சுல்தான் அந்த நாட்டு கட்டபொம்மன்.
குறுக்குவழியில் மைசூர் அரியணையில் அமர்ந்த ஹைதர் அலியின் மகன்.
பிரெஞ்சு ஆதரவுடன் தெற்குநோக்கி படையெடுத்த இவனை அடக்க கல்கத்தாவில் இருந்து காரன்வாலீசு வரவழைக்கப்பட்டான்.
வந்த சூட்டோடு அவன் திப்புவின் படைகளை திருச்சியிருந்து பெங்களூர் வரை அடித்து துவைத்து விரட்டி விரட்டி துவம்சம் செய்தான்.
கடைசி கட்டத்தில் பாதி ராஜ்யத்தையும் பெருமளவு பணத்தையும் பிணையாக தன் இரு மகன்களையும் அளித்து 'சமாதான' ஒப்பந்தம் போட்டுக்கொண்டான் திப்பு.
இது நடந்தது 1792 இல்.

இந்நிலையில் ஆற்காடு நவாபு வரிவசூல் செய்ய தெற்கே ஒரு தாசில்தாரை அனுப்பினான்.
கம்பளத்து பாளையங்கள் அவனுக்கு முறைவாசல் செய்து அனுப்பின.
அதே குதூகலத்துடன் மேற்கே மறவர் பாளையங்களுக்கு போன அவனை கழுத்தறுத்து போட்டுவிட்டார்கள்.

நவாபும் மறவர் மீது ஆங்கிலேயரிடம் புகார் செய்தான்.

ஊற்றுமலையும் தலைவன்கோட்டையும் தமது எல்லையிலும் கட்டபொம்மன் கொள்ளையடிப்பதாக முறையிட்டனர்.

1793 க்கு பிறகு தெற்கில் நிலவிய இந்த குழப்பமான சூழலை கவனிக்க ஆங்கிலேய மேலிடம் முடிவெடுத்தது.
அப்போது வரிவசூலிலும் குழப்பம் இருந்தது.
இதனால் ஆங்கிலேயர் நவாபுகளின் அனைத்து அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இப்போது ஆங்கிலப் படை ப்ரீ ஆகிவிட்டது.
வரிவசூலும் ஆங்கிலேயர் பொறுப்பு.
போட்டியாக இருந்த புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் களையும் மற்றும் தூத்துக்குடி டச்சுக்காரர்களையும் ஆங்கிலேயர் தோற்கடித்து அடக்கினர்.

தன் பாளையத்து நெசவாளர்களிடம் துணிவாங்கி தூத்துக்குடி வழியாக இங்கிலாந்து அனுப்பும் கான்ட்ராக்ட் கட்டபொம்மனுக்கு கிடைத்தது.
அந்த அப்பாவி நெசவாளருக்கு ஆங்கில கம்பெனி அளித்த சொற்ப பணத்தையும் இடையில் குத்தவைத்த கட்டபொம்மன் அமுக்கிக்கொண்டான்.

இதனால் அப்பகுதி நெசவுத்தொழில் நலிந்தது, ஆங்கிலேய வணிகர்கள் இது பற்றி கம்பெனிக்கு புகார் எழுதினார்கள்.

பிளாக்மெயில், கிட்நாப்பிங், அசாசினேசன்,  கான்ட்ராக்ட் என பல படிகள் முன்னேறிவிட்ட கட்டபொம்மு ரவுடியில் இருந்து தாதாவாக பதவி உயர்வு அடைந்திருந்தான்.

இப்போது தூத்துக்குடியில் எஞ்சியிருந்த டச்சு வணிகர்களிடம் துப்பாக்கி வெடிமருந்து என ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தான்.

இப்படியாக கெட்டிபொம்மு ஆட்சிக்கு வந்த ஏழாண்டுகள் ஏறுமுகமாக இருந்தது.

டான் ஆகும் முயற்சியில்  ஆங்கிலேயருக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக இந்த ஆயுத கொள்வனவை நடத்தினான்.

இது உளவுத்துறை மூலம் ஆங்கிலேயர் காதுக்கும் போனது.

அப்போதுதான் 1797 இல் திருநெல்வேலி கலெக்டராக வந்தான் 'இரும்புத் தலையன்' என்றழைக்கப்பட்ட முரட்டு ஜாக்சன் துரை.

(தொடரும்)