Thursday 28 September 2017

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


 அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.


* அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்


1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.


 1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.


 1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

 இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

 (அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5ஆண்டுகள் முன்பே)


1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%, 

BC 14%, 

Non Brahmin 44%, 

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7% 

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டுவந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே)


 தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்,


 தமிழகத்தில் மட்டும்தான்

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

 (இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்)

------------------


* அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்


 அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

 ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

 தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.


 (தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன)

----------------------


* அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்


 அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

 காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

 ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

-----------

* அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்


 தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

 இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்(9).

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்(5)

 

 பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).


சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

---------------

 

* அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்


 நிச்சயமாக இல்லை. 

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக்கொண்டாலும்.

 இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

 அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

 அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

 அது இன்றும் உள்ளது.

------------------


* அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்


 இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

 பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

 தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

 அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

 சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

 மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

 அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

 மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

 அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

-----------


* அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்.


 இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார்தான்(4).

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

 தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

 மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

 மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

 காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

 தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்(2).

-----------


* அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்


 அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

 தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

 அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

 அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்புதான்.

--------------


* அம்பேத்கர் ஒழுக்கமானவர்


 அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டவர்.

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார். 

------------


* அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி


 முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

 சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்துவைத்தது.


 எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.


 இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.


 நகலெடுத்து தமது பெயரில் போட்டுக்கொண்டது கூட பரவாயில்லை.

 அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

------------


* அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்


 வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்

 1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

-------------

 

* அம்பேத்கர் வந்தபிறகுதான் பறையர் முன்னேறினர்


 நிச்சயமாக இல்லை. 

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

 சொல்லப்போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர்தான்.

--------------


* அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார் 


 அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

 பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

 பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (4, தொகுதி 7, பக். 85)

--------------


* அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்


 அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

 ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

 ' உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

 பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக்கொடுத்து போராடுவேன்' என்றும் கூறியுள்ளார் (9).

 இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை. 

--------------------------


 அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து,

 தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு,

வரலாறும் உண்மையும் தெரியாமல்,

 மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே !


இனியாவது திருத்துங்கள்!


இதிலுமா வடக்கத்திய மோகம்!

----------------


1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states 

3. Maharashtra as linguistic 

4. Who were the untouchables? 

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143))

Wednesday 27 September 2017

ஈராக்கிய குர்திஸ்தான்

ஈராக்கிய குர்திஸ்தான்

சாதி, மதம், நாடு எல்லாம் கடந்து (நம் போல) இனமாக திரண்டு நிற்கும் குர்த் மக்களின் தாய்நிலத்தின் ஒரு பகுதி தனிநாடாக அமையவுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் ஆயுதம் தூக்கியதுதான்

நாமாவது இரண்டு நாடுகளுக்கு இடையே பங்கிடப்பட்டுள்ளோம்.
குர்தி மக்களோ துருக்கி, ஈரான், ஈராக், சிரியா என நான்கு நாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் நாடற்ற இனம்.

பிறக்கும் ஈராக்கிய குர்திஸ்தானுடன் மீதி தாய்நிலமும் இணைந்து குர்திஸ்தான் பிறக்க மனமார்ந்த வாழ்த்து!

#Kurdistan

வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை! இந்தி அரசின் அடுத்த ஆப்பு!

வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை
இந்தி அரசின் அடுத்த ஆப்பு

தமிழ் கட்டாயமாக இருந்த தேர்வுகளிலேகூட தமிழே தெரியாத ஹிந்தி மாணவருக்கு தமிழில் நல்ல மதிப்பெண் வழங்கி வேலையில் அமர்த்திக்கொள்ளும் மத்திர அரசின் இந்தி இனவெறி அம்பலமானதால் தற்போது இந்த அதிரடி முடிவு!

பொதுத்துறை வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7883 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 1277 காலியாக உள்ளன.
தமிழகத்தில் பத்து லட்சம் பேர் இதற்கான தயாரிப்பில் உள்ளனர்.
தற்போது தமிழக பொதுத்துறை தமிழ்மொழி கட்டாயம் என்ற விதியை தளர்த்தியுள்ளது.

News18 செய்தி
https://m.facebook.com/story.php?story_fbid=1046364758800510&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1046364758800510%3Atl_objid.1046364758800510%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-37368577874997661&__tn__=%2AW-R&_rdr

மேலும் அறிய,
search மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள் வேட்டொலி

search தமிழே தெரியாமல் தமிழில் 24/25, அரசு வேலையைத் தட்டிப்பறித்த ஹிந்தியர் வேட்டொலி

Tuesday 26 September 2017

பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்

பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்

ராஜீவ் காந்தி கட்டளையிட்டார்.

எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.

அடையாறில் புலமைப்பித்தன் வீட்டில் பிரபாகரனார் துளி நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு மேற்கொண்டார்.
கொதித்தெழுந்த தமிழகம் ஒரே நாளில் ஹிந்தியாவை பணியவைத்தது.

தமிழகத் தமிழருக்கு ஈழப் போராளிகள் மீது இருக்கும் பேரன்பை நன்றாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் புலிகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதன் மூலம் அரசியல் முதலீடு செய்தார்.
(அதே நேரத்தில் தனித்தமிழ்நாடு போராளிகளை அதன் தலைவர் தமிழரசனை சத்தமில்லாமல் ஒழித்தார்)

தொண்டனைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தலைவரல்ல பிரபாகரன்.
உலகிலேயே முதன்முதலாக நீர் அருந்தாமல் உண்ணாநோன்பு போராட்டம் நடத்திய போராளி.

1986 ல் தமிழக மக்கள் தமது இனப்பற்றைக் காட்டாதிருந்தால்...?

விளைவுகளை நீங்களே ஊகியுங்கள்.

விஜய் தெலுங்குபதி

தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்
- நடிகர் விஜய் தெலுங்கு பதி

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

Monday 25 September 2017

கொங்கு மண்டலத்தில் (தெலுங்கு) கம்மா குடியேற்றம்

கொங்கு மண்டலத்தில் (தெலுங்கு) கம்மா குடியேற்றம்


ஆந்திராவில் 600 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது சந்திரிகிரி (வரைபடத்தில் 1) பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறிய கம்மவார் பற்றி தற்போது பார்ப்போம்.


(இதற்கு முன்பே டெல்லி சுல்தானிய படையெடுப்பின் போது தெலுங்கர்கள் மிகச்சிறிய அளவில் தமிழகத்திற்குள் குடியேறியுள்ளனர்)


கம்மவார் சாதி தோன்றிய வரலாறு என பல ஆன்மீக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன மகாலட்சுமியின் கம்மலில் இருந்து தோன்றினர் என்றவாறு, எனவே அதை விட்டுவிடுவோம்.

 இவர்கள் கரிசல்காட்டில் விவசாயம் செய்யும் குடிகள் ஆவர். 


இவர்கள் தமிழகத்தில் குடியேறும்போது நடந்ததாக ஒரு கதை உள்ளது.

இவர்கள் ஆந்திராவில் பஞ்சம் ஏற்பட்டபோது தமது குலதெய்வமான ரேணுகாதேவியை வணங்கினார்களாம்.

உடனே அந்த தெய்வம் கொங்குநாட்டின் சென்னிமலை ஆண்டவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி செழிப்பான பகுதியான கொங்கு பகுதியில் குடியேற அருள் வழங்கியதாம்.


உடனே அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொண்டம நாயுடு என்பவர் தலைமையில் கொங்கு பகுதிக்கு வந்தனராம்.


அப்போது சென்னிமலை முதல் உப்பாறு வரை அறுபது மைல் பரப்புள்ள நிலத்திற்கு உரிமையாளர் காணியாள கந்தசாமிக் கவுண்டர் எனும் பெரும் நிலக்கிழார்.

அவர் 12 கிராமங்களுக்கு அதிகாரி. 


ஒரு பண்டாரம் போல மாறுவேடத்தில் சென்னிமலை நாதன் கம்மவார்களை சந்தித்து அழைத்து வந்து கந்தசாமிக் கவுண்டரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிட்டாராம்.

வந்தது சென்னிமலை ஆண்டவன் என்று பரவசமடைந்த கந்தசாமி கவுண்டர் உப்பாற்றங்கரையில் மூன்று காத தூரம்வரை இருந்த பகுதியை பட்டயம் எழுதிக் கொடுத்தாராம்.


இலவசமாக வாங்காமல் கம்மவார்கள் தம்மால் முடிந்த சிறுதொகையாக நூறு வராகன் கொடுத்தனராம்.


கம்மவார்கள் அங்கே கூடாரம் அமைத்து குடியேறினர்.

இது கம்மவார் பட்டி என்று பெயர்பெற்றது.

தற்போது கம்பிளியம்பட்டி (2) என்றழைக்கப்படுகிறது.


அதன்பிறகு சூலூர் (3), கரடிவாவி (4) போன்ற இடங்களில் குடியேற்றங்களை அமைத்தனர்.


பிறகு தெலுங்கர் படையெடுப்பு தமிழகத்தின் மீது நடக்கிறது.

நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பரவுகிறது.

கம்மா உட்பட தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது.


 குமார கம்பணன் காலத்தில் மதுரை, திருச்சி ஜில்லாக்களில் பாளையங்கள் ஏற்படுத்தி தெலுங்கர் ஆளத்தொடங்கினர்.


நாயக்கர் ஆட்சி ஏற்கனவே இருந்த ஆட்சிமுறையை ஒழித்து நிலத்தை பாளையங்களாகப் பிரித்து ஆண்டது.

கொங்கு முழுவதும் காகவாடி, காடையூர், மஞ்சாபுரம், சமத்தூர், ஊத்துக்குளி, நிமந்தம்பட்டி, தாரமங்கலம், புரவிபாளையம், தொப்பம்பட்டி, மரக்கூர், செவ்வூர், பழைய கோட்டை, அவ்வம்பட்டி, சமச்சுவாடி, சொதம்பட்டி, துங்காவி ஆகிய பாளையங்கள் தோன்றின.

இவற்றில் பெரும்பான்மை தெலுங்கர் வசம் இருந்த பாளையங்கள்.


தமிழகத்தின் நாயக்கர் ஆட்சி ஆந்திராவில் நிலவிய ஆட்சியை விட தெலுங்கு மக்களுக்கு அதிக வாய்ப்பும் வளங்களும் அள்ளித்தந்ததால் தெலுங்கர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறினர்.


கி.பி.1510 ல் கம்மவார் தமக்கென ஒரு நகரத்தை கட்டிக்கொண்டனர்.

தமது இனத்தின் மன்னனான கிருஷ்ணதேவராயர் நினைவாக கிருஷ்ணதேவராயபுரம் அல்லது ராயகிருஷ்ணபுரம் (5) என்று  பெயரிட்டனர்.

(கிருஷ்ணதேவராயர் காலம் கம்மவார் வரலாற்றில் பொற்காலமாகும்).

இது 1660 வாக்கில் பெருமழையால் ஏற்பட்ட மண்சரிவு வந்து கொட்டிய மணலால் நிறைந்து அழிந்துவிட்டது.


இந்த நகரத்தில் இருந்தோர் இடம்பெயர்ந்து பாப்பநாயக்கன் பாளையம்(6)

பீளமேடு அல்லது பூளமேடு (7)

சற்று தொலைவில் வேலூர் மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் (8)  எனும் ஊர்களை  அமைத்து குடியேறிக்கொண்டனர்.


1529ல் மதுரை நாயக்கராக பொறுப்பேற்ற விசுவநாத நாயக்கர் காலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது.

இவரது காலத்தில் குறிப்பிடும்படியான குடியேற்றம் நடந்துள்ளது.

கம்மவார் மட்டுமல்லாது கவரா, கம்பளத்தார், சோணியர், ஒட்டர், சக்கிலியர், தொம்பர், ஆகிய தெலுங்கு சாதிகளும் தமிழகத்தில் குடிபுகுந்தனர்.

முக்கியமாக தெலுங்கு பிராமணர்கள் கணிசமான அளவு இந்த காலகட்டத்தில் குடிவந்தனர். 


விசுவநாத நாயக்கர் காலத்தில் 

கோவிந்த நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், மொண்டி பாளையம், சித்தநாயக்கன் பாளையம் 

என்று தமது ஊர்த்தலைவர்கள் பெயரில் தெலுங்கர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.


இதற்கடுத்த கம்மவர்களின் குறிப்பிடும்படியான குடியேற்றம் 1700களில் சந்திரகிரியிலிருந்தும் 400 கி.மீ வடக்கே குண்டூர் ஜில்லாவில் உள்ள ராசகொண்டலு (9) பகுதியில் இருந்து பாப்பநாயக்கன் பாளையத்திற்கு கம்மவார் பெருமளவு குடியேறியது ஆகும்.


மைசூர் படையெடுப்பு நாயக்கர் ஆட்சி மீது நடந்தது.

இதனால் கம்மா மக்கள் பலர் தென் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர்.


(மைசூர் படை மதுரைக்கு அருகே வரை வந்துவிட்டது.

திருமலை நாயக்கர் 71 வயதில் படுத்த படுக்கையாக இருந்தார்.

ஆனாலும் சேதுநாட்டை அப்போது ஆண்ட ரகுநாத சேதுபதியிடம் அவர் உதவிகேட்டு மறவர் படையை பெற்று போரை நடத்தினார்.

மைசூர் படையை தொடங்கிய இடத்திற்கே பின்வாங்கச் செய்தார்.

தெலுங்கருக்கும் கன்னடருக்கும் நடந்த இப்போரில் இருதரப்பினரும் தோற்றவர் மூக்கை மேல் உதடுவரை அறுத்து கொடூரமாக சண்டை போட்டனர்.

பிறகு திருமலை நாயக்கர் கொங்கு பகுதியில் தெலுங்கரை மீண்டும் குடியமர்த்தி பொட்டதிக்கா பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் கோவிலும் கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தெற்கே விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறிய கம்மவார் தமது உண்மையான பட்டமான நாயுடு என்பதுடன் சில இடங்களில் நாயக்கர் என்றும் பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.

மற்றபடி நாயுடு என்றாலே கம்மா சாதியினரைத்தான் குறிக்கும்)


நாயக்கர் ஆட்சியில் மேலும் நாகமநாயக்கன் பட்டி, பாப்பநாயக்கன் பட்டி, அல்லமநாயக்கன் பட்டி, ரெட்டியப்பட்டி, இடையர் தர்மம், சேடப்பட்டி, அய்யம்பாளையம் போன்ற பல தெலுங்கு குடியேற்றங்கள் தமிழகம் முழுவதும் தோன்றின.


முதலில் அகதியாக 

பிறகு நிரந்தர குடிகளாக 

பிறகு பாளையக்காரர்களாக 

பிறகு நிலவுடைமைச் சமூகமாக

பிறகு ஆதிக்க வர்க்கமாக என தமிழகத் தெலுங்கரின் வளர்ச்சி பிரம்மாண்டமானது.


 இவர்களின் ஒட்டுமொத்த தமிழக மக்கட்தொகையில் 0.48% மட்டுமே வாழும் கம்மாக்கள் ஒவ்வொரு ஆட்சியிலும் திராவிட கட்சிகள் மூலம் (குறிப்பாக அ.தி.மு.க) குறைந்து 10 எம்.எல்.ஏ-வாவது இருக்கிறார்கள்.


இப்படியாக கம்மா சாதியினர் தமிழகம் முழுவதும் (குறிப்பாக கொங்கு பகுதியில்) கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று நடத்தி மாபெரும் ஆதிக்க சக்தியாக திகழ்கிறார்கள்

Sunday 24 September 2017

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)

தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார்,பெங்களூரூ,மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer

நன்றி: சிவ் விஸ்வநாதன்.

Friday 22 September 2017

இப்படி ஒரு அசிங்கம்....

இப்படி ஒரு அசிங்கம்....

இளமையில் ஆடிய ஆட்டம்!
முதுமையில் ஆட்டிப்படைக்கும்!

தாலி கட்டாமல் பெற்ற மகள் அவிழ்த்துப்போட்டு ஆட

வேலி கட்டிவைத்த வைப்பாட்டி கவிழ்த்துவிட்டு ஓட

தள்ளாத வயதில்,
தன் காணசகியா முகத்தில்,
தரித்துக்கொண்டான் அரிதாரம்!
தாங்கமுடியா பரிதாபம்!

வாழ்வாங்கு வாழ்ந்த சூழலில் நின்று,
'வாங்கலியோ புடவை தள்ளுபடியில்' என்று,
கூவி விற்கும் அவலம்!
கூனி நிற்கும் துயரம்!

அரைவேக்காடுகளை அள்ளிவந்து,
அறைகளுக்குள்ளே அடைத்துவைத்து,
நூறுநாட்கள் மேய்க்கிறான்!
ஊரை இவன் ஏய்க்கிறான்!

வாளாவிருப்போர் சந்தை அதிலே,
வாய்ச்சொல்வீரர் சண்டை நடுவே,
பட்டிமன்றமும் நடத்துவான்!
பரபரப்பும் கிளப்புவான்!

பணம் தந்தால் போதும்
பிணங்கூடத் தின்பான்!
கூப்பாடும் போடுவான்!
கூட்டியும் கொடுப்பான்!
கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி மரபினன்!

எவ்வளவோ அறிவு!
எத்தனையோ திறமைகள்!
பிறப்பு, உருவம், சுற்றம்
சிறப்பாய் அமைந்தன எல்லாம்!

ஆயினும் பயனில்லை!
ஆணவம் விடவில்லை!

விரலை மட்டும் ஆட்டியே
வழுக்கை ஒருவன் முந்திவிட்டான்!!

விறைப்பே குறியான இவனோ
ஒழுக்கம் இன்றி பிந்திவிட்டான்!!

கதறவிட்ட எதிரி கட்டையில் போகும்வரை காத்திருந்து,
கவட்டுக்குள் ஒளிந்திருந்த தலை மெல்ல நேரே நிமிர்ந்து,

நாட்டைவிட்டு ஓட இருந்தவன்,
கோட்டையை பிடிப்பேன் என்கிறான்.

கடுகளவு வந்தது துணிச்சல்!
கவிபாடி வரவைக்கிறான் எரிச்சல்!

கிறுக்கல்களில் பம்மி வெளியிட்டான் வந்த அரசியல் ஆசையை!

கிறுக்குப்பயல் கூட நம்பி வரமாட்டான்  இந்த முற்றல் ஆண்வேசியை!

தன் துறையில் தனக்கென தனியிடம் இருந்தபோதும்,
தக்க நேரத்தில் ஓய்வுபெற்று தன்மானத்தை காக்காமல்,

உலகமே உமிழும் வடுகர்க்கு கைகூப்பி,
இந்தியமே தமிழும் திராவிடமும் எனக் குழப்பி,
மிச்சமுள்ள புகழையும் பணையம் வைத்து,
எச்சில் எலும்பேனும் கிடைக்குமா என்று அலைகிறான்!

ஊர்பார்க்க உதடுகளை ஏறி மேய்ந்த நாயொன்று,
ஊளையிட்டதே மேடையேறி தலைவன் நானென்று!

முடிவெடுத்தானாம்!
முதல்வராவானாம்!

செருப்பால் அடிபடுவான்! சின்னபின்னமாவான்!

ஏற்கனவே அப்படித்தான் என்றாலும்,
மேற்கொண்டும் படுவான் இனிமேலும்!

செத்தவனுக்கேது நெருப்பைக் கண்டு அச்சம்?!
மானம் கெட்டவனுக்கேது இழிவைக் கண்டு கூச்சம்?!

வீதியில் திரிய வேண்டாமென்றால்
வீட்டில் கிடடா வந்தேறி முண்டமே!

Thursday 21 September 2017

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
. . . . . . . . . . . . . . . . .
குற்றச்சாட்டு: நாம்தமிழர் தனித்தமிழ்நாடு பற்றி பேசுவதில்லை.
தமிழரசன், சுப.முத்துக்குமார் படங்களை பயன்படுத்துவதில்லை

பதில்: தனித்தமிழ்நாடு பேசினால் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு விடுதலை அடைய போராடிய தலைவர்களை அவர்கள் வெளிப்படையாக முன்னிறுத்த முடியாது.
அதனால் அவர்கள்
"இந்தியன் எனும் இனம் கிடையாது.
இந்திய ஒன்றியத்தை தேசிய இனங்கள் மாநில அதிகாரங்களுடன் ஆள வேண்டும்"
என்று மறைமுகமாக தேசியவாதத்தை வலியுறுத்துகிறார்கள்.
காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவு, சீக்கியர்களுக்கு ஆதரவு என காய்நகர்த்துகிறார்கள்.
. . . . . . . . . .

கு: ஓட்டுக்கு அரசியல் செய்கிறார்கள்.
முதலமைச்சர் பதவிதான் தமிழ்தேசியம் என்று கூறுகிறார்கள்

ப: நடைமுறையில் தமிழகத்தின் முதலமைச்சர் பதவிதான் உலகத் தமிழர்களுக்கு தலைமையாக உள்ளது.
அதை வேற்றின வந்தேறிகளே ஆக்கிரமித்து வருகின்றனர்.
அதை கைப்பற்றுவது தமிழ்தேசியத்தின் முதல்படி ஆகும்.
ஓட்டுதான் ஒரு சாதரண குடிமகனின் பலம் அதை திரட்ட ஓட்டரசியல்தான் செய்யவேண்டும்.
. . . . . . . . . . .

கு: வேற்றின வேட்பாளர்கள் 15 பேரை நிறுத்தினர்

ப: ஜனநாயகத்தில் தமிழக குடிமக்களில் வேற்றினத்தார் எத்தனை சதவீதம் உள்ளனரோ அதற்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்துதான் ஆகவேண்டும்.
234ல் 15 என்பது கொஞ்சம் அதிகம் என்றாலும் ஏற்கக்கூடியதுதான்.
. . . . . . . . . . . . . .

கு: எந்த பிரச்சனையையும் கையிலெடுத்து இறுதிவரை போராடுவதில்லை

ப: நாம்தமிழரும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வசதியானவர்களோ பதவி உள்ளவர்களோ கிடையாது.
அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்தேவருகிறார்கள்.
. . . . . . . . .

கு: சீமான் பாதி-தெலுங்கச்சியை திருமணம் செய்துள்ளார்.

ப: சீமானுடைய மாமியார் தெலுங்கர் என்பது உண்மை கிடையாது.
அவர் தமிழ்க்குடியான கம்மாளர் சாதியைச் சேர்ந்தவர்.
அவரது மாமனார் ஒரு மறவர் குலத் தமிழர்.
தவிர எந்த தமிழரும் எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்.
அப்படி வேற்றினத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் வாரிசை மீண்டும் தமிழினத்தில் மணமுடிக்க மட்டுமே தமிழ்தேசியம் வலியுறுத்துகிறது.
தூய்மையான ரத்தம், இனக்கலப்பின்மை போன்றவை நடைமுறையில் 100% சாத்தியமில்லை.
. . . . . . . . . . .

கு: சீமான் தமிழினப் பகைவர் ஈ.வே.ரா வை ஏற்றுக்கொண்டார்

ப: தற்போது அந்த நிலைப்பாட்டை அவர் கைவிட்டுவிட்டார்.
தொடக்கத்தில் திராவிட சிந்தனைகளின் தாக்கம் அவரிடம் இருந்தது.
தற்போது அவர் தெளிவாகிவிட்டார்.
. . . . . . . . . .

கு: சீமான் இனவெறி பிடித்தவர்.
தமிழன் ஆளவேண்டும் என்று ஏன் கூறுகிறார்.

ப: சீமான் கேட்பது ஒரு ஒன்றியத்தின் கீழ் வாழும் தேசிய இனத்திற்கான ஆகக்குறைந்த உரிமை ஆகும்.
இதைக் கூட தரமுடியாது என்பது ஒரு இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போக்கே ஆகும்.
சீமான் எந்த இனத்திற்கும் எதிரானவர் கிடையாது.
தன் இனத்திற்கான உரிமையைக் கேட்கிறார் அவ்வளவுதான்.
. . . . . . . . .

கு: சீமான் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
ஆனால் ஈழத்திற்காக எதையும் செய்யவில்லை.

ப: சீமான் தமிழக முதலமைச்சராக ஆனாலும் கூட ஈழத்தில் நேரடியாக பெரிதாக எதையும் செய்யமுடியாது.
முதலில் ஈழத்திற்காக அரசியலுக்கு வந்தார்தான்.
ஆனால் தற்போது தமிழகமும் ஈழத்தைப் போலவே அடக்குமுறைகள் சுமத்தப்பட்டு ஒரு இனப்படுகொலையை எதிர்நோக்கியுள்ளதை அறிந்து அவர் தமிழக அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்.
ஈழத்தமிழர்களும் சீமானை நம்பி இல்லை.
எம்.ஜி.ஆர் போல தமிழகத்திற்குள் ஈழத்தமிழருக்கு தேவையான ஆதரவை வழங்க சீமான் தயாராக இருக்கிறார்.
தமிழகத் தமிழருக்கு ஈழத்தின் நிலையை புரியவைத்ததில் சீமானின் பங்கு மறுக்கமுடியாது.
நாம்தமிழர் புலம்பெயர் தமிழகத் தமிழர்களிடம் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கி ஈழத்தமிழரையும் சேர்த்துக்கொண்டு இயங்குகிறது.
அதற்குக்கூட விடாமல் அவரது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டனர்.
. . . . . . . . . .

கு: சீமான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான பெயரான சைமன் என்பதை மறைக்கிறார்.

ப: சீமானின் உண்மையான பெயர்  'செபாஸ்டியன் சீமான்' என்பதே.
அவரது தாய் பெயர் அன்னம்மாள்.
தந்தை பெயர் செந்தமிழன்.
அவரது குடும்பம் கிறித்தவத்திற்கு மாறியபிறகு செபாஸ்டியன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது.
மற்றபடி சைமன் என்பது அவரது பெயர் கிடையாது.
அவர் தொடக்கத்தில் திராவிடக் கட்சியில் இணைந்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டார்.
பைபிளை கூட விமர்சித்துள்ளார்.
. . . . . . . .

கு: நாத்திகரான சீமான் முருகனை தூக்கிப்பிடிக்கிறார்

ப: முருகன் உயிருடன் வாழ்ந்த மனிதன்.
தமிழர்களின் தலைவன்.
சீமான் முருகனை வணங்கச்சொல்லவில்லை.
முன்னோராக முப்பாட்டனாக ஏற்கும்படி சொல்கிறார்.
திருமாலையும் அவ்வாறே முன்வைக்கிறார்.
மற்றபடி அவர் இப்போதும் இறைமறுப்பாளர்தான்.
. . . . . . . . .

கே: சீமான் தலைவருடன் புகைப்படம் எடுத்ததைத் தவிர வேறு என்ன சாதித்தார்

ப: சீமான் தொடக்கத்தில் இருந்தே ஈழ ஆதரவாளர்.
புலிகளின் திரைத்துறை திரைப்படங்களை எடுத்தபோது சீமான் அங்கே பல நாட்கள் தங்கி இயக்குநராக பணியாற்றினார்.
தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்தநாளை ஒட்டி (2004ல்) புலிகள் வெளியிட்ட காணொளியில் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சுப.வீ போன்றோருடன் சீமானின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
. . . . . . . . . .

கே: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகருக்கும் சீமானுக்கும் என்ன பெரிய வேறுபாடு

ப: 1996 முதல் இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும்
2009 இராமேஸ்வரத்தில் தன் இனம் படுகொலை செய்யப்படுவதை பொறுக்கமுடியாமல் சீமான் பேசிய உணர்ச்சிமயமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவும்வரை சீமான் எப்படி இருப்பார் என்பதுகூட பலருக்குத் தெரியாது.
அவரது அடையாளம் திரையின் மூலம் மக்கள் மனதில் பதிந்தது கிடையாது.
சினிமா மூலம் பிரபலமாகி நன்றாக சம்பாதித்து நாடிநரம்பு அடங்கியபிறகு ஓட்டு அறுவடை செய்ய அரசியலுக்கு வரவிரும்பும் நடிகர் போல அவர் சுயநலவாதி கிடையாது.
. . . . . . . . . .

கே: சீமானை விட்டு பல இனவுணர்வாளர்கள் விலகியது ஏன்

ப: அவசரம்தான் காரணம். தமிழினத்தின் அரசியல் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது.
காலம் தேவை.
இனத்தின் மீது அதிக பற்று கொண்டோர் அந்த அளவு பொறுமையாக இருக்கமுடியவில்லை.
வெளியே வந்தவர்கள் பெரிதாக சாதிக்கவும் இல்லை.
. . . . . . . . . .

கே: சீமான் முதலமைச்சர் ஆகிவிட்டால் தமிழ்தேசியம் அமைந்ததாக ஆகிவிடுமா?

ப: சீமான் முதலமைச்சராவது தமிழ்தேசியத்தில் 5% ஐக் கூட பூர்த்தி செய்யாது.
ஆனால் முதல்படியாக அமையும்.
அதாவது மக்களிடம் இனவுணர்வும் மொழியுணர்வும் அரசியல் விழிப்புணர்வும் பொருளாதார பலமும் ஏற்படுவது முதல் அடி ஆகும்.
. . . . . . . .

கே: சீமான் பெரிதாக வாக்கு பெறவில்லையே!?

ப: இங்கே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பத் தகுந்தவை கிடையாது.
அதிலும் ஊழல் நடக்கிறது.
ஒரு கட்சி 50% மக்களின் ஆதரவைப் பெற்றால்தான் அவர்களுக்கு 20% ஓட்டாவது விழும்.
அதாவது நாம்தமிழருக்கு போடப்பட்ட ஓட்டில் மூன்றில் ஒன்றுதான் நாம்தமிழருக்கு பதிவாகும்.
திரும்ப சரிபார்க்க எந்த வழியும் கிடையாது.
அதனால்தான் வளர்ந்த நாடுகள் போல வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் கோருகின்றன.
. . . . . . . .

கே: சீமான் மலையாளி என்கிறார்களே?

ப: சீமான் தமிழர்தான்.
அவர் பிறந்த நாடார் குலம் கேரளாவிலும் உள்ளதால் அதைவைத்து குழப்புகிறார்கள்.
கேரளாவில் பாதி தமிழர் மண்.
அதில் வாழும் நாடார்கள் உட்பட பல்வேறு தமிழ் பேசும் சாதிகள் தமிழர்களே!
பிரபாகரனே மலையாளிதான் என்று கதைகட்டி அவரது உறவினர்கள் என்று சில மலையாளிகளைப் பேட்டி எடுத்து வடயிந்திய ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் பிரபாகரன் குடும்பம் வல்வெட்டித்துறையில் பாரம்பரியமான பிரபலமான குடும்பம் ஆகும்.
சீமான் மலையாளி என்பதும் அதுபோல எந்த அடிப்படையும் இல்லாத கட்டுக்கதை.
. . . . . . .

கே: சீமான் தமிழர் என்ற ஒரு தகுதி போதுமா?

ப: போதாதுதான்.
சீமான் மாநில உரிமைகள் மூலம் முன்வைக்கும் திட்டங்களும் தீர்வுகளும் இதுவரை எந்த முதலமைச்சர் வேட்பாளரும் முன்வைத்த ஆட்சிமுறையை விட சிறப்பாக உள்ளன.
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்துவிட்டோம்.
சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு?
வாய்ப்பு கொடுக்குமுன்னே குற்றம்சாட்டுவது நிராகரிப்பது எந்தவகையில் நியாயம்?
. . . . . . . .

கே: சீமான் எந்த குறையுமே இல்லாதவர் என்கிறீர்களா?

ப: இல்லை. குறைகளை விட நிறைகள் அதிகம் எனலாம்.
குறையே இல்லாத சொக்கத் தங்கம்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் அப்படி ஒருவர் வரவே போவதில்லை.
. . . . . . . . . . 

கே: சீமான் மாவீரரான ஒரு ஈழப்போராளியின் மனைவிக்கு வாழ்க்கை கொடுப்பதாக இருந்ததே!
பிறகு ஏன் வசதியான வீட்டில் பெண் எடுத்தார்?

ப: சீமான் ஒரு ஈழத்தமிழரை மறுமணம் செய்வதற்கு பேச்சு நடந்தது. ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.
பேச்சு ஆரம்பத்திலேயே முறிந்துவிட்டது.
இதேபோல விஜயலட்சுமி என்ற பெண்ணும் சீமான் மீது புகார் கொடுத்து அது ஆதாரம் எதுவுமில்லாமல் தள்ளுபடி ஆனது.
சீமான் மீது அவதூறு சுமத்தவே இவை பெரிதாக்கப்படுகின்றன.
. . . . . . . . . . .

கே: சீமான் தனித்தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் தொடங்கினால் ஆதரிப்பாரா?

ப: சீமான்தான் இந்தியாவிற்கு நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு.
சீமான் பதவியில் அமர்ந்து ஜனநாயக வழியில் காவிரி பங்கீடு மறுப்பு , மீனவர் கொலை, பேரழிவு திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவார்.
இந்தியாவில் ஜனநாயகம் பெரும்பாலும் நசுக்கவே படும்.
சீமான் முன்வைக்கும் மாநில உரிமைகள் மூலமான தீர்வு எடுபடாத பிறகு மக்கள் புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடுவார்கள்.
ஈழத்தில் தந்தை செல்வா போல தமிழகத்திற்கு சீமான் அமையவுள்ளார்.
அவ்வளவுதான்.

(நான் நாம்தமிழர் கட்சியில் இல்லை. ஆதரவாளன் மட்டுமே)

Wednesday 20 September 2017

இடது - வலது குழப்பம்

இடது - வலது குழப்பம்

இப்படித்தான் புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் கம்யூனிச இடதுசாரி சிந்தனை சில மேதாவிகளால் புகுத்தப்பட்டது.
ஆன்டன் பாலசிங்கம் அதில் முக்கியமானவர்.

அப்போது புலிகளின் தலைவர் முகுந்தன்.
புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் 5 பேரில் பிரபாகரன் தவிர மற்றவர்கள் இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டனர்.

  நம் தலைவர் பிரபாகரனுக்கோ கம்யூனிசம் இடதுசாரி போன்றவை தொடக்கத்திலேயே பிடிக்கவில்லை.

இது தமிழக விடுதலைக் குழுக்களுடன் புலிகள் கைகோர்க்காமைக்கு முக்கிய காரணம்.

சிவப்பு சிந்தனை முற்றி ஒரு கட்டத்தில் ஆயுதமெல்லாம் தேவையில்லை.
மக்களை திரட்டி புரட்சி செய்வதே சரி என்று பலர் இடது பக்கம் சாய,
தலைவர் மட்டும் அதை ஒத்துக்கொள்ளாமல் ஆயுதவழியில் அரசு அமைத்து பிறகு அதில் சோசலிசத்தைக் கொண்டுவருவதே தீர்வு என்று தொடர்ந்து வாதிட்டார்.

தலைவருடன் நின்றது பேபி சுப்பிரமணியம் ஒருவர் மட்டுமே.

கடைசியில் உங்களுக்குதான் ஆயுதம் தேவையில்லையே என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள் என்று தலைவர் கேட்க ஆயுதங்கள் அவரிடம் ஒப்படைப்பட்டன.

இப்போது இடதுசாரி பிரிவு மேலும் இரண்டாக உடைந்தது.
ஆயதமும் தேவை என்று ஒரு பிரிவு.
ஆயுதம் தேவையில்லை என்ற பிரிவு.

தலைவர் யாரென வாக்கெடுப்பு மூலம் முடிவுசெய்ய வாக்கெடுப்பும் நடந்தது.
அதிலும் பிரபாகரன் இரண்டாம் இடத்தையே பிடித்தார்.

அப்போது பிரபாகரன் ஒரு துணிச்சலான முடிவு எடுத்தார்.

எவரும் எக்கேடும் கெட்டுப்போங்கள் என்று ஆயுதங்களுடன் பேபி சுப்பிரமணியத்தை மட்டும் அழைத்துக்கொண்டு தனியே பிரிந்துபோய் தன் வழியில் தனியாக இயங்கினார்.

  நாளடைவில் இடதுசாரி பிரிவு, பத்திரிக்கை பரப்புரை என்று ஜனநாயக வழிமுறைகளைத் தொடங்கி
மக்கள் புரட்சி புடலங்காய் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு கடைசியில் வேறுவழியின்றி ஆயுதத்தை தூக்கி புளோட் இயக்கமாகி அதிலும் வலது இடது என்று குழம்பி
பிரபாகரனுடனும் மோதி கடைசியில் அனைவரும் காணாமல் போனார்கள் அல்லது செத்து போனார்கள்.

பிரபாகரன் முதலில் டெலோவுடன் சேர்ந்தார் (அப்போது அதற்கு பெயர் இல்லை)
குட்டிமணி ஜெகன் சிறையில் சிங்களவரால் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கமும் வலுவிழந்தது.

பிரபாகரன் வழிதான் சரியென்று ஆன்டன் பாலசிங்கம் உட்பட பலரும் அவரின் தலைமையின் கீழ் வந்துசேர ஆரம்பித்தனர்.
தலைவரும் டெலோவிலிருந்து விலகிவிட்டார்.
இவ்வாறாக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைவர் கைக்கு வந்தது.

கடைசியில் டெலோ உட்பட அனைத்து குழுக்களும் இந்தியாவிற்கு ஆதரவாக மாற
தனியாக புலிகள் மட்டுமே உறுதியாக நின்றனர்.

அத்தனை போட்டிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவின் படை சிங்கள தளபதிகளையும் சேர்த்துக்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தது.

அனைத்துவகை கனரக தளவாடங்களுடன் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்த அந்த பெரிய கூட்டணியை
வெறும் 2000 புலிகளையும் அன்று ஆயுதச் சந்தையில் புதிதாக அறிமுகமாயிருந்த அதிநவீன துப்பாக்கியையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாக எதிர்த்து களமாடி பிரபாகரன் தோற்றொடச் செய்தார்.
அதோடு டெலோவையும் இல்லாதொழித்தார்.

அனைத்து குழுக்களும் தலைமை அழிந்தபின் புலிகளிடம் வந்து சேர புலிகளின் ராணுவ எழுச்சி கம்யூனிசம் நூறாண்டுக்குப் பிறகு சாதிக்க இருந்ததை 20 ஆண்டுகளில் சாதித்தது.

தனி அரசாங்கம், முப்படை, உலகிலேயே பணக்கார ஆயுதக்குழு பட்டியலில் முதல் ஐந்து இடம், பாமரர் வரை அரசியல் விழிப்புணர்வு, மக்களுக்குக்கான ஆட்சி என புலிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றனர்.

வலது இடது குழப்பம் இருந்ததால் பத்தாண்டுகள் பின்னடைவு அடைந்தாலும் பிரபாகரன் எனும் ஒரு மனிதனின் உறுதி இதைச் சாதித்தது.

உலக கார்ப்பரேட் முதலாளிகள் மண்ணைச் சுரண்ட பெரும் தடையாக புலிகள் இருந்தனர்.

கடைசியில் கார்ப்பரேட்களுக்கு பணியாத சதாம் உசேன், கடாபி போல பிரபாகரன் உலக வல்லாதிக்கங்களால் ஒன்றுசேர்ந்து பெரும் முயற்சிக்குப் பிறகு வீழ்த்தப்பட்டார்.

புலிகள் வீழ ஒரே ஒரு காரணம் அவர்கள் தமிழ்த் தாய்நிலத்தின் ஒரு பகுதியான தமிழகத்தை அந்நிய நாடாகக் கருதியதே ஆகும்.

தேசியம் என்பது முழு தேசிய இனத்திற்கும் சேர்த்துதான் என்பதை புலிகள் உணராததே பெரிய தவறாகிவிட்டது.

ஈழத்தைப் போலவ 1980களில் இடதுசாரி தமிழகப் போராளிகளும், தமிழரசன் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையின்போது பொதுமக்கள் போல வேடமிட்ட உளவுத்துறையால் அடித்துக்கொல்லப்பட பெரும் பின்னடைவை சந்தித்தனர்.

தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) இரண்டாக உடைந்து அதில் இடது சுப.இளவரசன் தலைமையில் தனிக் குழு உருவானது.
மாறன் தலைமையிலான வலதுசாரி பிரிவு ஆயுதவழியில் வளர்ந்து நின்ற வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமார் கடத்தல் உட்பட சில விடயங்களை சாதித்தனர்.

தமிழ்நாடு மீட்சிப் படைகள் (TNRT) புலிகளுடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
சுப.முத்துக்குமார் அதைச் செய்தார்.
அவரும் பிரபாகரனும் வீரப்பனும் மாறனும் இணைந்து கூட்டணி அமைக்கும் சூழல் 2000களில் வந்தது.
ஆனால் கொள்கை முரண்பாடுகளால் அது நடக்கவில்லை.

சுப.முத்துக்குமார் காவல்துறையில் பிடிபட்டார்.

வீரப்பனாரை 32 ஆண்டுகளுக்குப் பிறகு படாத பாடு பட்டு வீழ்த்தினார்கள்.

கடைசியாகப் பிரபாகரன் வீழ்த்தப்பட்டார்.

இப்படியாக தமிழினத்தின் ராணுவ எழுச்சி முற்றாக ஒழிக்கப்பட்டது.

தற்போது எந்த தடையுமின்றி தமிழர் மண் மீது முழுவீச்சில் சுரண்டல் நடக்கிறது.

நல்லவேளையாக சுப.முத்துக்குமார் வெளியேவந்து மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்படும் முன் நாம்தமிழரை ஆரம்பித்து சீமானிடம் கொடுத்துவிட்டார்.

இல்லையென்றால் சீமான் இடத்தில் வைகோ இருந்திருப்பார்.

சுரண்டலை எதிர்க்கும் இனம்சார்ந்த அந்த ஒரு கட்சியும் இல்லாது போயிருக்கும்.

அதாவது ஒரு தேசிய எழுச்சியை வலது இடது நட்டநடு என்று பிரிப்பது பெரும் பின்னடைவைத் தரும் என்பது இதிலிருந்து புரிகிறது.

நம் இனத்தில் என்றோ எவனோ எங்கேயோ தூக்கிய ஆயுதம்தான் இன்றுவரை நம்மை பல்வேறு வடிவங்களில் காப்பாற்றி வந்துள்ளது.

மக்களை அரசியல் மயமாக்குவோம்.
கிராமம் கிராமமாக பேசுவோம்.
மக்களைத் திரட்டி நாடுமுழுக்க ஒரே நேரத்தில் புரட்சி செய்வோம் என்பதெல்லாம்
கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு தாலிகட்டும் அன்று பெண்தேடுவோம் என்பதுபோல முட்டாள்த்தனமானது.

தனிநாடுக்கான அத்தனை அடிப்படையும் நம்மிடம் உள்ளது.
தற்போது தேவை அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆயுதவலு மட்டுமே.

உணவுக்கே வழியில்லாத நிலை வந்தால்தான் மக்கள் புரட்சி வெடிக்கும்.
அதுவரைக்கும் வல்லாதிக்கம் சுரண்டிக்கொள்ள அனுமதிப்பதே மேற்கண்ட மக்கட்புரட்சி சிந்தனை.

நாம் ஆயுதம் தூக்கவேண்டும்.
மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும்.
மக்கள் தானாகவே நம்மைப் பற்றி அறிந்துகொள்வார்கள்.
மக்கள் ஆதரவுடன் மேலும் ஆயுதம் வாங்கி அதன்மூலம் பெற்ற ராணுவ வலிமையால் நமது தாய்நிலம் முழுவதையும் கைப்பற்றி தனிநாடு அமைக்கவேண்டும்.

இதுதான் விடுதலைக்கான ஒரே வழி. புலிகளின் வழி.

அதன்பிறகுதான் நாம் எந்த கொள்கையை பின்பற்றுவது என்று முடிவெடுக்கவேண்டும்.

இப்போதே குழம்பக்கூடாது.

குழப்புவோரை ஆதரிக்கவும் கூடாது.

தேசியம் என்பது ஆதிக்கம் செலுத்தவா?

தேசியம் என்பது ஆதிக்கம் செலுத்தவா?
----------------------

ஆதிக்கசாதிகள் மட்டுமே தமிழ்தேசியம் பேசுவதேன்?
சாதிவெறி ஒழிக!

ஒரு வீட்டைக் கொளுத்த போனால் மூத்த ஆண்கள் மட்டும் வெட்ட வருவது ஏன்?
ஆணாதிக்கம் ஒழிக!

(ஒடுக்கப்படுவோரில் வலு இருப்பவர்களே முதலில் எதிர்ப்பார்கள்)

Tuesday 19 September 2017

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)

ஆனால்,

தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.

(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)