Saturday 29 October 2016

தீபாவளி குழப்பத்திற்கு தீர்வு

தீபாவளி குழப்பத்திற்கு தீர்வு
|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|

*தமிழரின் விளக்கீடு திருநாளே (கார்த்திகை) வடக்கே பரவி பிறகு தெற்கே விளக்குவரிசையாக (தீபாவளியாக) மீண்டும் திரும்பி வந்தது.
இப்போதும் இவ்விரு பண்டிகை களும் அருகருகே வருகின்றன.

* நரகாசுரனுக்கு தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நரகாசுரன் ஆண்ட பகுதி தற்போதைய பங்களாதேஷின் வடபகுதி.

*மகாபாரதம் (8:8:15) திராவிடர், மகதர், பாண்டியர், சோடர், கேரளர் என அனைவரையும் தனித்தனியாக குறிக்கிறது.
ஆக திராவிடம் வேறு தமிழ் வேறு.

* தீபாவளி வடக்கே கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.
அதில் நரகாசுரன் கதையும் ஒன்று.
அதிகம் பிரபலமாகாத அந்த கதையை திராவிட இயக்கம் தமது அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

* அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.
அச்சொல் தமிழர்களை மட்டும் குறிப்பதில்லை.
அரக்கர் என்பது அவமானச் சொல்லும் இல்லை.

* ஆரிய திராவிட கட்டுக்கதைகளை நம்பவேண்டாம்.
கார்த்திகையே நமக்கு தீபாவளி.
ஆக அன்றே நாம் அதைக் கொண்டாடுவோம்

* பட்டாசு வெடித்தல் ஒலி, காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் அந்த பழக்கத்தை அறவே விட்டுவிடவேண்டும்.

* சூரிய ஒளி குறைவாகப் படும் மாதத்தில் அமாவாசை அன்று மேலும் ஒளிகுறைவதால் அதை ஓரளவு சமன்செய்ய கார்த்திகை அதாவது தீபாவளி கொண்டாடப்பட வேண்டும்.

* வடக்கே இன்று (29-10-16) சிறுதீபாவளி (கானா திவாலி),
இன்று மக்கள் 5 விளக்குகளை மட்டும் ஏற்றுவார்கள்.
நாளை வீடுமுழுவதும் விளக்கு ஏற்றுவார்கள்.
ஆக கார்த்திகை பண்டிகையே தீபாவளி.

* கார்த்திகை அன்று மகாவீரர் இறந்ததால் சமணர்கள் இதனைக் கொண்டாடுவது இல்லை.
தமிழ்மண்ணில் சமணம் பெரும்பான்மையாக இருந்தபோதே விளக்கிடும் பண்டிகை முக்கியத்துவம் இழந்துவிட்டது.
(கண்ணகி, கோவலன், இளங்கோவடிகள் போன்றோர் சமணரே)

* வடவர் ஆதிக்கம் தமிழகத்தில் தீபாவளியை திணிக்கின்றனர்.

*  அசல் கார்த்திகை இருக்க நகல் தீபாவளி எதற்கு?
எனவே தீபாவளியை புறக்கணிப்போம்.
பட்டாசு வெடிக்காமல் புத்தாடை உடுத்தி, கறி சமைத்து, விளக்கு ஏற்றி, இனிப்பு செய்து, கார்த்திகையை  கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

Tuesday 25 October 2016

உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு -மலையாளியின் பண்டமாற்று

உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு
-மலையாளியின் பண்டமாற்று

கேரளாவிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் கொதிப்படைந்த அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலமுறை வாகனங்களை மறித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவங்கள் பல உண்டு.
ஆனால் எந்த பயனும் இல்லை.

(முட்டாப்பயலுக, அடிச்சு தோல உரிக்காம போலீஸ்ட்ட ஒப்படைச்சானுகளாம்!
கழிவோட வந்தா உயிரோட போகமுடியாதுனு நெலமை இருந்தா எவன் வண்டி கொண்டு வருவான்னு கேட்டேன்?!)

கேரள எல்லையை ஒட்டிய பல பகுதிகள் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு நாசக்காடாகி விட்டன.

காவல்துறையினர் பொது இடத்தை அசுத்தம் செய்வதாக வழக்கு போட்டு பணம் கறந்துவிட்டு பிறகு விட்டுவிடுகிறார்கள்.

அதனால் மலையாளிகள் தமிழக எல்லையோரம் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் ஆபத்தான கழிவுகளை குழிதோண்டி மூடிவருகின்றனர்.
இந்த தொழிலில் நல்லலாபம் வருவதால் பல்வேறு இனத்தவரும் மலையாளிகளுடன் கூட்டுசேர்ந்துள்ளனர்.

உதாரணமாக, எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர்.
அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்ற தடைசெய்யப்பட்ட கழிவுகளைக் கொட்டத்தொடங்கினர்.
துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர்.
தற்போது இது தினமும் இரவு 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுள் கொண்டுவந்து கொட்டும் அளவு அதிகமாகிவிட்டது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின.
இதனால் பொறுமை இழந்த அப்பகுதி தமிழ்மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று நேற்று (24/10/2016) மலையாளிகளைத் தட்டிக்கேட்டனர்.

அப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.

இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர்.

அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது.

உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர்.

அது விவசாயம் நடந்த நிலம் ஆகும்.
இதனால் கொதிப்படைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர்.

வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ தகவல் கொடுத்தும் நேற்று மாலை வரை வரவில்லை.

(எப்படி வருவான்?! அதிகாரி அத்தனை பேரும் மலையாளி, கொஞ்சம் வந்தேறிகளும் உண்டு)

கேரளா உணவுக்கு தமிழகத்தைத்தான் நம்பியுள்ளது.
இங்கே இருந்து அரிசி ஏற்றிச் செல்லும் லாரிகள்.
பதிலுக்கு உயிர்க்கொல்லி கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றன.

தமிழன் அதிகாரத்தில் இல்லை.

தமிழ் பொதுமக்கள் வன்முறையையும் விரும்புவதில்லை.

பிறகு எப்படி இதற்கு தீர்வு கிடைக்கும்?!

(செய்தி மற்றும் தகவல்கள் விகடன் ச.ஜெ.ரவி)

Well done goa people!

Well done goa people!

We tamils are with you.

Marathi people will also support you.

Of course none like Karnataka (racist) people.

It's time to take back your land 'uttar kannada'.

பெண்ணுரிமை பற்றி ஈ.வே.ரா

பெண்ணுரிமை பற்றி ஈ.வே.ரா

”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.

(குடியரசு21-09-1946)

தேவரடியாரும் தேவதாசிகளும்!


தேவரடியாரும் தேவதாசிகளும்!

-சில கல்வெட்டுச் சான்றுகள்
ம.செந்தமிழன்

இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

இன்றைக்குத் தமிழகத்தில் வாழும் சாதி வழிப்பட்ட ஆந்திர, கன்னட மூதாதையர்களின் குலத்தவரைக் குறிக்கவில்லை. அவர்களை ‘திராவிடர்’ என அழைப்பது தவறானதும், வரலாற்று நோக்கம் அற்றதும் என்பது என் கருத்து.

தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர் என வகைப்பிரிப்பது தவறு.

எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல!


தேவரடியாரும் தேவதாசிகளும்


தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)


தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’

(கர். கல் VAK 105)

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.


பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?





லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே!
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்.

Sunday 23 October 2016

பறையர், புலையர் பற்றி ஈ.வே.ரா (முரசொலி படம்)

ஈ.வே.ரா பற்றி பொய் பரப்புரை

  அவர் பறைச்சி ரவிக்கை போட்டதை கிண்டல் செய்யவில்லை.
புலையர் சமூக பெண்கள் ரவிக்கை போட்டதைத்தான் கிண்டல் செய்தார்.

பள்ளர்களும் பறையர்களும் படித்ததைத்தான் அவர் கிண்டல் செய்தார்.

ஆகவே பறையர்களை அவர் கிண்டல் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்யவேண்டாம்.

  ஈ.வே.ரா வை பிரிந்து தனிக்குடித்தனம் போட்ட கருணாநிதி முரசொலியில் போட்ட தெளிவான படம்.

Saturday 22 October 2016

எது குறுகிய வட்டம்?

எது குறுகிய வட்டம்?

தமிழ்தேசியம் குறுகிய வட்டமாம்.
மனிதநேயம்தான் அதைவிடப் பெரியதாம்.

அப்படியே பார்த்தாலும்,
பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியதுதான்.
கடுகளவு கூட கிடையாது.

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக்கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்துபோனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத்தான் போகிறது.

ஆக என் உரிமையை விட்டுக்கொடுக்க என்னால் முடியாது.

தமிழர்களிடம் முழுமையான ஒற்றுமை எப்போது ஏற்படும்?

தமிழர்களிடம் முழுமையான ஒற்றுமை எப்போது ஏற்படும்?
.
.
.
பிற இனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடத்தும்போது.

Friday 21 October 2016

தமிழ் பரவுதல் நலமா?

ஆஸ்திரேலியாவில் தமிழ். ஏன்?

இந்த தவறைத்தான் அனைவரும் செய்கிறோம்.

வெளிநாட்டுக்காரனும் தமிழை பேச வேண்டும் என்று நினைக்கிறோம்.

அதுதான் தவறு.

அதனால்தான் தமிழ் பேசுபவனை எல்லாம் நம் ஆள் என்று நினைத்து அனைத்தையும் கொடுத்துவிடுகிறோம்.

தமிழ்ச் சங்கங்கள் பல வற்றிலும் வேற்றினத்தாரையும் இணைக்கிறோம்.

இதனால்தான் நாம் உருப்படாமல் போனோம்.

அவர்கள் மொழி அவர்களுக்கு நம் மொழி நமக்கு.
தமிழர்களிடம் தமிழைக் கொண்டு சேர்ப்போம்.
தமிழ் நமது தனி சொத்து என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.

வடயிந்தியாவுக்குப் போங்கள்.
அங்கே மற்ற இனங்களுடன் இணைப்புமொழியான இந்தியிலேதான் பேசுவார்கள்.

தன் இனத்தின் மத்தியில் பிறந்த வளர்ந்த வேற்றுமொழிக்காரன் தன் மொழியை அறிந்திருந்தாலும் சரி,
அவனிடம் தமது தாய்மொழியில் பேசமாட்டார்கள்.

தம் தாய்மொழியை மற்றவர் பேச அனுமதிப்பதில்லை ஆதலால் அங்கே மூன்று நான்கு தலைமுறையாக வசிக்கும் வேற்றினத்தாரை அவர்களால் அடையாளம் கண்டு நடக்கமுடிகிறது.

ஆக தமிழரல்லாதார் தமிழ் பேசினால் இனி பாராட்டவேண்டாம்.


இன்று நமக்கு அமெரிக்க வரலாறும்
ஜெர்மனிய வரலாறும்
இரஷ்ய வரலாறு தெரிகிறது.

ஆங்கில இலக்கணமும்
பிரஞ்சு இலக்கியமும் இங்கே பேசப்படுகிறது.

எப்படி?

அவர்கள் ஒவ்வொரு தமிழனாக கொஞ்சி கொஞ்சி பரப்பினார்களா?

இல்லை.
அவர்கள் வல்லரசாக உயர்ந்தனர்.
பல சாதனைகள் புரிந்தனர்.

நாம் இன்று தேடிப்போய் அவர்களைக் கற்கிறோம்.

நம்மை போல கெஞ்சி கெஞ்சி கொஞ்சி கொஞ்சி தமிழை கொண்டுசேர்க்க முயலவில்லை.

நாம் வல்லரசாக உயர்ந்தால்
மட்டுமே நம்மை நம் மொழியை நம் கலையை மற்றவர்கள் மதிப்பார்கள்.
தேடித் தேடி படிப்பார்கள்.

எனவே தமிழ் வரலாறைத் தமிழருக்கு கொண்டு சென்று
தமிழரை எதாவது சாதிக்கவையுங்கள்.

தமிழரை மட்டும் திரட்டுங்கள்.
வேற்றினமோகம் வேண்டாம்.

அவர்களுக்கு விருப்பமென்றால் அவர்களே வந்து கற்கட்டும்.
நாம் கையேந்தி போகவேண்டாம்.

நம் இனத்தை ஒன்று சேர்ப்போம்.
நம் பெருமை நம் வரலாற்றில் இருந்தால் மட்டும் போதாது.
நடப்புக்காலத்திலும் இருந்தால்தான் வரலாறுக்கே மதிப்பு.

இப்போது நீங்கள் செய்வது
ஒரு பிச்சைக்காரன் அவனது தாத்தாவும் பாட்டனும் பெரிய ஆளாய் இருந்ததைப் பற்றி பேசுவதன்மூலம் தன் மீது மரியாதை ஏற்படுத்த முயல்வது போன்றது.

தமிழும் வளரவேண்டும்.
தமிழனும் வாழவேண்டும்.

அதுதான் உண்மையான வளர்ச்சி.

"என் தாய்மொழியை என்னை விட அழகாக நீ பேசுகிறாய் என்றால் என்னை அடிமைப்படுத்த விரும்புகிறாய் என்று பொருள்"
- சீன சிற்றரசன் டாங்

சேலைக்குள் வாள்

சேலைக்குள் வாள்

சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.

‘திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்’
(முல்லைப்பாட்டு 46-45)

படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்