Sunday 31 January 2016

குருதியில் நனைந்த குமரி -13

குருதியில் நனைந்த குமரி -13

16 நவம்பர் 1954

இராஜாஜியின் நண்பர் மேகநாதன் நாகர்கோவிலுக்கு வந்து வீட்டுக்காவலில் இருந்த நேசமணியைச் சந்திக்கவந்தார்.

நேசமணி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
ஆங்காங்கே இருந்து வந்த மக்கள் நேசமணியிடம் தமக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தனர்.

"ஐயா வணக்கம், நான் மேகநாதன்"

"வணக்கம் வணக்கம், வாருங்கள்.
துப்பாக்கி சத்தம் கேட்டபிறகும் தமிழகத்திலிருந்து யாரும் வரவில்லையே என்று கவலையில் இருந்தேன்.
நீங்களாவது வந்தீர்களே?!"

"தமிழகத்தின் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்.
தமிழக மக்களுக்கு செய்திகள் முழுமையாகத் தெரியவில்லை"

"ஆமாம். எங்களுக்கேகூட இழப்பு இவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது"

"ராஜாஜிதான் என்னை இங்கே அனுப்பினார்.
விபரங்களை அறிந்துவரச் சொன்னார்"

"ரசாக் அதற்குள் ராஜாஜியை சந்தித்துவிட்டாரா?"

"இல்லையே, ரசாக் தமிழகத்திலா இருக்கிறார்?!"

"என்றால் நீங்கள் இங்கே வந்தது ரசாக் தூண்டுதலினால் இல்லையா?"

"இல்லை, அவர் வந்து கூறித்தான் எங்களுக்கு நிலைமை தெரியவேண்டுமா?
எங்களுக்கு உங்கள்மேல் அக்கறை கிடையாதா?
நாங்கள் உங்கள் போராட்டங்களை ஆரம்பம் முதலே கூர்ந்து கவனித்து வருகிறோம்:

"மிக்க மகிழ்ச்சி, இராஜாஜி எங்கள் மேல் அக்கறையுடன் இருப்பது வியப்பளிக்கிறது"

"அவர் தமிழ்ப் பார்ப்பனர், நம்பூதிரிகள் போன்று அவரைப் பார்க்கவேண்டாம்.
பிராமணர் அனைவரையும் ஒரே பார்வையில் பார்ப்பது எவ்வளவு அறிவீனம்"

"உண்மைதான், மபொசி கூட அடிக்கடி இதைக் கூறுவார்"

"தங்கள் பிரச்சனைகள் அனைத்தும் ராஜாஜிக்குத் தெரியும்.
தற்போதைய நிலையை மட்டும் விளக்கிக்கூறினால் போதும்"

நேசமணி சுருக்கமாகத் தமிழர்கள் மீது நடக்கும் அடக்குமுறையைக் கூறினார்.
மூணாறு தொழிலாளர் பிரச்சனை,
அதற்கு குமரித் தமிழர்கள் குரல்கொடுத்தது,
அதற்காக கைதானது,
அந்த விடுதலையைக் கொண்டாட முடிவு செய்தது,
அதில் 30 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது,
ஊரடங்கு உத்தரவு,
ராணுவ மயமாக்கல்,
3000 மக்கள் அகதிகளாக தமிழகத்தில் நுழைந்தமை,
தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவது என அனைத்தையும் கூறினார்.

"கேட்கவே பொறுக்கவில்லை ஐயா,
நான் உடனடியாக ராஜாவைப் பார்த்து எல்லாவற்றையும் கூறுகிறேன்"

"நன்றி, அவரிடம் கூறுங்கள். 25 லட்சம் தமிழர்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது"
________________________________

அதே 16ஆம் தேதி

காமராசரைச் சந்தித்தார் ரசாக்.

"ஐயா வணக்கம்"

"வணக்கம், ஆமாம் தற்போது அங்கே என்ன நிலவரம்?"

"திருநெல்வேலி காங்கிரஸ் குழு அங்கே போகவிருப்பதால் அடக்குமுறை குறைந்துள்ளது"

"நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?"

"நேசமணி ஐயா கடிதம் ஒன்று கொடுக்கச் சொன்னார்.
இதோ இதில் எங்கள் எதிர்பார்ப்புகள் அடங்கியுள்ளன"

வாங்கி படித்தார்.

"இதில் கேரளாவில் இருக்கும் பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற புள்ளிவிபரத்தை நானே வெளியிடவேண்டும் என்று எழுதியிருக்கிறது.
அகதியாக வந்தோருக்கு உதவி செய்யவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவுதானா?"

"ஆமாம். இதை நீங்கள் செய்தால் போதும்"

"சரி செய்கிறேன். நீங்கள் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?"

"நேருவைச் சந்திக்கச் செல்கிறேன்"

"ஓகோ, என்றால் நீங்களே இந்த பிரச்சனையைக் கையாளப்போகிறீர்கள்.
நான் தேவையில்லை அப்படித்தானே?"

மார்சல் நேசமணி நேரில் வந்து ஆதரவு கேட்டபோது காமராசர் மறுத்த காட்சி ரசாக் மனதில் வந்துபோனது.

"ஐயா, நான் நேரில் சென்றால் பிரச்சனையின் தீவிரத்தை சரியாக விளக்கமுடியும்"

"நான் ஒரு கடிதம் தருகிறேன்.
என் பிரதிநிதியாக நீங்கள் நேருவைச் சந்தியுங்கள்"

"இல்லை. நான் நேசமணி ஐயாவின் பிரதிநிதியாகவே சந்தித்துக்கொள்கிறேன்"

காமராஜருக்கு ரசாக்கின் கோபம் புரிந்தது.
அவர் சிறிதுநேரம் யோசித்தார்.
சரி, என்னோடு வாருங்கள்.
எச்.டி.ராஜா (எம்.பி) என்பவரையும் அழைத்துக்கொண்டு மூவரும் காரில் கிளம்பினர்.

கார் சென்று நின்ற இடம் இராஜாஜியின் வீடு
______________________________
எல்லைப் போராட்டத்தில் ஆதரவாக நிற்பவர் இராஜாஜி.
அவருடன் இந்த பிரச்சனையைப் பற்றி பேச தன் தனிப்பட்ட வெறுப்பையும் மீறி முதலமைச்சரான காமராசர் நேரில் சென்றார்.

வாசலில் இராஜாஜியின் மகன் அமர்ந்திருந்தார்.

"வாருங்கள் வாருங்கள், அப்பா உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"

வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர்.
நாம் வரப்போவது இராஜாஜிக்கு எப்படித் தெரியும் என்று.

அனைவரும் அமர்ந்தனர்.

ரசாக் "ஐயா, எங்கள் நிலை பற்றி..."

ராஜாஜி "எனக்கு தெரியும்"

காமராசர் "நாம் என்னசெய்ய வேண்டும்?
தமிழகத்தில் போராட்டம் நடத்துவது இதற்கு தீர்வு தருமா?"

இராஜாஜி "இல்லை, அதை முதலிலேயே செய்திருக்கவேண்டும்.
இப்போது சட்டபடி செய்யவேண்டும்"

இரசாக் "நீதிமன்றங்கள் மலையாள வெறியுடன் நடந்துகொள்கின்றன.
மேல்முறையீடு செய்வது அங்கே பலன் தராது"

இராஜாஜி "நீங்கள் திருவாங்கூர் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள்.
அவை தள்ளுபடியாகும்.
அதன்பிறகு என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறேன்.
என் நண்பர் புகழ்பெற்ற வழக்கறிஞர் பாஷ்யமையங்கார் இருக்கிறார்.
அவரை அனுப்புகிறேன்"

காமராசர் "இவர் நேருவைச் சந்திக்கப்போவதாகக் கூறுகிறார்.
தமிழகத்தில் பெருகிவரும் திராவிட ஆதரவு நேருவின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கியுள்ளது"

இராஜாஜி "ஆமாம், திராவிட நாட்டை தனியாக பிரிக்க ராமசாமி நாயக்கர் ஜின்னாவை சந்தித்தில் இருந்தே அவருக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
இருந்தாலும் அவரைச் சந்தித்துவிடுதல் நலம்.
நேசமணி திராவிட ஆதரவாளர் கிடையாது என்பதை நேரு புரிந்துகொண்டால் அவர் மனம் மாறலாம்"

ரசாக் "நாங்கள் நேருவின் உத்தரவை மீறிதான் போராட்டம் நடத்தினோம்.
அதனாலும் அவருக்கு எங்கள்மேல் கோபம்"

இராஜாஜி "ம். குமரி தமிழகத்துடன் இணைவது கடினம்தான்.
இந்தி எதிர்ப்பினாலும் அவர் தமிழ்நாட்டை வெறுக்கிறார்.
சரி, நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்"

ராஜா "மாநில புனரமைப்புக் குழுவில் கே.எம்.பணிக்கர் என்றொரு மலையாளி இருக்கிறார்.
அவர் மலையாள இனவெறியராம்.
இது தமிழர்களுக்கு நடக்கும் அநியாயம்"

ரசாக் "அவர் மூணாறு பகுதியை கேரளாவுடன் சேர்ப்பதற்காக வெறிபிடித்து அலைகிறார்.
மூணாறை ஆண்ட பூஞ்சார் ராஜாவையே மலையாளி என்று ஆக்கப்பார்த்தார்.
நேசமணி ஐயாதான் கண்ணன்தேவன் தேயிலைக் கம்பெனி பூஞ்சார் அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை காட்டி முல்லைப் பெரியாறு ஓடும் பகுதி முழுக்க தமிழருடையது என்பதையும் அந்த அணைக்காகப் போடப்பட்டுள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் தவறுதலாக அப்பகுதிக்கு உரிமையே இல்லாத திருவாங்கூர் அரசுடன் போடப்பட்டதையும் நிறுவினார்.
பூஞ்சார் அரசர்கள் ஆவணங்கள் தமிழிலும் மீனாட்சியம்மன் துணை என்றே ஆரம்பிப்பதையும் வைத்து அவர்கள் பாண்டிய வம்சாவழி என்பதையும் நிறுவினார்.
இதனால் மூக்கறுபட்ட பணிக்கர் எப்பாடு பட்டேனும் முல்லைப்பெரியாறை கேரளத்துக்கு பெற்றுத்தர சூளுரைத்துள்ளாராம்"

காமராசர் "இந்த குழு முன்வைக்கும் எல்லை வரையறை சரியில்லை என்றால் நாம் அதை நிராகரிக்க முடியும்.
இன்னொரு குழுவை அமைக்கக் கோரமுடியும்"

இராஜாஜி "போன உயிர்களை மீட்க முடியுமா?"

காமராசர் வாயடைத்துப்போனார்.

காமராசர் "என்ன இருந்தாலும் தமிழர்களைக் கொல்லும் அளவுக்கு சென்றிருக்கூடாது.
இதற்கு அவர் பதில் சொல்லிதான் ஆகவேண்டும்"

ராஜாஜி "பட்டம் தாணுப்பிள்ளையின் கட்சியான பி.எஸ்.பி யின் தரப்பிலிருந்து ஒரு குரல் வரவுள்ளது.
பொறுத்திருந்து பாருங்கள்"

இராஜாஜி கூறியது அப்போது யாருக்கும் புரியவில்லை.
ஆனால் அவர் பெரிதாக எதோ செய்யவுள்ளார் என்பது மட்டும் புரிந்தது.
-------------------------------------
அதன் பிறகு அப்துல் ரசாக் எஸ்.எஸ்.கரையாளர், திரு.சிதம்பரநாதன், நூர்முகமது ஆகியோரை அதே நாளில் சந்தித்தார்.

மறுநாள் 17ம் தேதி இந்நால்வரும் காமராசரைப் போய் மீண்டும் பார்த்தார்கள்.
தமிழக அரசின் சார்பில் இவர்கள் நல்லெண்ணக்குழு என்ற பெயரில் நேரில் செல்வதாக முடிவானது.

25.08.1954 இந்த நல்லெண்ண குழு செல்வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்குள் இதே 17ம் தேதி திருநெல்வேலி காங்கிரஸ் குழு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவிட்டிருந்தது.
பி.டி.தாணுப்பிள்ளை, கே.டி.கோசல்ராம், சங்கர் ரெட்டியார் ஆகியோர் நிலைமையை நேரில் விசாரித்து நேருவுக்கு ஒரு அறிக்கையை அனுப்பினார்கள்.

எம்.பி நரசிம்மன் என்பவர் ஆலோசனைப்படி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த காந்தியின் மகன்  தேவதாஸ் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டார்.
ரசாக் தங்களது  பிரச்சனையை பற்றிய ஒரு கையெழுத்து ஆவணத்தைக் கொடுத்தார்.

இதை 22.08.1954 இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் தேவதாஸ் காந்தி வெளியிடச் செய்தார்.

டெல்லியில் மலையாளிகளுக்கு நெருக்கடி முற்றியது.

இந்த நேரத்தில் நடந்தது ஒரு பெரிய திருப்புமுனை.

அதன்பிறகு பட்டம் அரசு ஆட்டங்கண்டது.

(தொடரும்)
_______________________
குருதியில் நனைந்த குமரி -12
https://m.facebook.com/photo.php?fbid=649731501797173&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

Saturday 30 January 2016

தமிழர் மரபணு

தமிழர் மரபணு

மதுரை அருகே ஜோதிமாணிக்கம் சிற்றூரைச் சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு பழமையான M130 மரபணுவுடன் ஒத்துப்போவதாக ஆக்ஸ்போர்டு ஆய்வறிக்கை கூறுகிறது.
இது 70,000 ஆண்டுகள் பழமையான மரபணு.

"Journey of Man" என்ற National Geographic தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் 'பிறமலைக் கள்ளர்' மரபணுவானது 60,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது.
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தின் பேராசியர் ஆர்.எம்.பச்சையப்பன் திரட்டிய ஆதாரங்கள் மூலம் இது கண்டறியப்பட்டது.
இதன்பிறகு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Dr. Spencer Wells என்பவர் மேற்கொண்டு விரிவான ஆய்வு செய்து தனது  'Deep Ancestry' என்ற புத்தகத்தில் எழுதினார்.

பிறகு 2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள 'ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்' நடந்த 'உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள்' மாநாட்டில்,
மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இதன்படி இந்தியத்துணைக் கண்டத்திலேயே பழமையான மூத்தகுடி தமிழரே என்பது விளங்கும்.

இதுமட்டுமல்லாது,
2011 ஆம் ஆண்டு Indian Academy of Sciences வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையானது,
'பரயர்' (பறையர்) மற்றும் 'முத்தரையர்களை' பழைய கற்கால(Paleolithic period) மனிதர்கள் என்று சொல்கின்றது.
(பழைய கற்காலம் என்பது 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்,
இருபது லட்சம் ஆண்டுகள் வரை இந்த காலகட்டம் நீள்கிறது)

மேற்கண்ட மரபணுக்கள் ஆப்பிரிக்கருடன் ஒத்துப்போகின்றன.

இதேபோல ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மரபணுவானது குறும்பர்களுடன் ஒத்துப்போகின்றன.

அதாவது Y குரோமோசோமில் உள்ள M130 haplotype உள்ள சில பொருட்கள் ஆஸ்திரேலிய அபாரிஜின் மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவாக உள்ளன.
இதைக் கண்டறிந்தவர் Anthropological Survey of India ஜச் சேர்ந்த Dr.Raghavendra Rao என்பவர் ஆவார்.
இந்த அபாரிஜின்களும் பழமையான மரபணுவைக் கொண்டவர்களே ஆவர்.

மேலும் பறையர்களின் Y-குரோமோசோமில்  G2a3b1 ஆனது
ஐரோப்பிய மூதாதைய இனமான Caucasians மரபணுவிலும் காணப்படுகிறது.
இது 10% ஐயர்களிடமும் 13% ஐயங்கார்களிடமும் காணப்படுகிறது.

மேலும் ஆய்வுகள் பல செய்யவேண்டியுள்ளன.
அதைச் செய்துவிட்டால் உலகின் பழமையான மரபணு தமிழர்களிடம் உள்ளதையும்
உலக மக்கள் அனைவரிடமும் தமிழர்கள் நேரடியாக மரபணுத் தொடர்பு உள்ளவர்கள் என்பதையும் நிறுவ இயலும்.

இதன்மூலம்
முன்தோன்றிய மூத்தகுடி என்பது வெறும் சொற்றொடர் அல்ல அது முற்றிலும் உண்மை என்று புலப்படும்.

Friday 29 January 2016

தமிழர் விடுதலையா? அல்லது 90கோடி உயிரிழப்பா? முடிவு செய்யட்டும் உலகம்

இந்த உலகம் 9 கோடித் தமிழர்களின் தாய்நிலத்திற்கு விடுதலை வழங்கி தனிநாடாக விடவேண்டும்.
அல்லது தமிழர்களுடனான போரில்,
தமிழ் உயிர்களையும் சேர்த்து,
90 கோடி உயிர்களை தனது மக்கள்தொகையில் இருந்து இவ்வுலகம் இழக்கவேண்டும்.
அப்படி நடந்தாலும் மகிழ்ச்சிதான்.
தமிழர்களை அழிப்பதிலாவது இந்த உலகம் ஒற்றுமையுடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி.
அந்த ஒற்றுமையால் யாதொரு பலனும் ஏற்படாது என்றாலும் கூட.
we may go down, but we will a world with us.

தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்

தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

‘மொகஞ்சதாரோ’ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும்,
பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.
அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.
இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.

1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்
*இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்*
என்ற தலைப்பில்
திரு.முத்துராமலிங்கத்தேவர்
எழுதிய கட்டுரையிலிருந்து.

நன்றி: பெருமாள் தேவன் அவர்களின் வலைப்பூ.

Monday 25 January 2016

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை

இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை
*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥*¥

இதே நாளில் 1950ம் ஆண்டு நடைமுறைக்குவந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர்(indians) என்று எங்கும் வரவில்லை
இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்றுதான் குறிப்பிடுகிறது.

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்

"இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே!

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு(nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே!

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல,
எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்.

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்றுதான் சொல்கிறது"

Saturday 23 January 2016

தலித் என்பதன் பொருள் என்ன?

பிராமணரல்லாதோர் அனைவரும் 'தலித்'

-இதுதான் அம்பேத்கரின் வரையறை.

குறிஞ்சாக்குளத்திற்கு தமிழர்கள் வந்தால் போதும்.

தலித்துகள் வரவேண்டிய அவசியம் இல்லை.

Wednesday 20 January 2016

குறிஞ்சாக்குளம் கூடுதல் ஏன்?

குறிஞ்சாக்குளம்
கூடுதல் ஏன்?

வடயிந்தியர்கள் ஒரு 5லட்சம் பேர்
கன்னியாகுமரியில் மகா யாகம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்த மாத இறுதியில்.

உமேஷ்சந்திர சர்மா என்ற பிராமணர் தலைமையில்
விவேகானந்த கேந்திரம் சார்பில்
551 யாக குண்டங்கள்
ஒவ்வொரு குண்டத்திலும் 13 பிராமணர்கள் 3 நாட்கள் யாகம் செய்வார்கள்.
ஹிந்தியிலேயே பிரச்சாரம், பதாகைகள், பக்தி பாடல்கள், சமஸ்கிருத மந்திரங்கள், பகவத்கீதை புத்தகம் வழங்குதல், ஹிந்து புராண நாடகங்கள் எல்லாம் உண்டு.

ஹிந்தியா முழுவதும் இருந்து குறைந்தது 3லட்சம் ஹிந்தியர்கள் வருகிறார்கள்.
தமிழகத்தில் வடயிந்தியனுக்கா பஞ்சம்?!
அவர்கள் ஒரு 2லட்சம்,
ஆக மொத்தம் 5லட்சம் பேர் கூடுவார்கள்.

நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த 28,29,30 தேதிகளில் கன்னியாகுமரி போனால் தெரியும்.

ஏன்?

தமிழக மண்ணில் வட ஹிந்தியர்கள் அடிக்கடி இப்படி பெரும் எண்ணிக்கையில் கூடுவது ஏன்?

நமக்கு பயத்தை உருவாக்கத்தான்.
நாம் சிறுபான்மையாம்.
அவர்கள் 100 கோடியாம்.
இது அவர்கள் நாடாம்.

நாம் குறிஞ்சாக்குளத்தில் கூடப்போவது கிட்டத்தட்ட இதே நோக்கத்திற்காகத்தான்.

ஹிந்தியா இங்கே கூட்டம் கூட்டுவது ஆக்கிரமிப்பை நோக்கமாகக்கொண்டது.

நாம் குறிஞ்சாக்குளத்தில் கூட இருப்பது ஆக்கிரமிப்பை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டது.

தாய்நிலத்தில் ஒரு தமிழனை அவன் சாதியைக் காரணம்காட்டி ஒண்டவந்த வந்தேறுகுடிகள் ஒடுக்க நினைத்தால் மொத்த தமிழனும் வந்து நிற்பான் என்று காட்டவேண்டும்.

உள்ளூர் தமிழனுக்காகக் களத்தில் இறங்காத ஒரு தமிழன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்க்கமுடியும்?

நான் உங்களை
சோமாலியா பஞ்சத்திற்காகவோ
சிரியா அகதி பிரச்சனைக்கோ
தண்டகாருண்ய மாவோயிஸ்ட்களுக்காகவோ
போராட வரச்சொல்லவில்லை.

உங்கள் மண்ணின்
உங்கள் மக்களின் உரிமைப் பிரச்சனைக்காகத் தான் களத்திற்கு வரச்சொல்கிறேன்.

அதைக் கூட செய்யவிருப்பம் இல்லாவிட்டால்,
உங்களுக்கு நாளையே ஒரு பிரச்சனை வரலாம்,
அப்போது எவனும் வரமாட்டான்.

#சனவரி24குறிஞ்சாக்குளம்

Tuesday 19 January 2016

டேனியல் எனும் தமிழன்

டேனியல் எனும் தமிழன்

'தமிழ் போர் புரியும்' என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த தமிழன்.

தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே "தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும்" என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த,
திரு.பால்.வி.டேனியல்

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

"ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேடவேண்டியதாயிற்று.
இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்"

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்.

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.
இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்.

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து 1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.
இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ்பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப்பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப்பகுதியின் மீது போர்தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர்(5/6)

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது.
வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ்பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத்தமிழர்கள் சகித்துக்கொண்டிருந்தால்,
தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத்தான் அவர் கூறியுள்ளதாக அறியமுடிகிறது.

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்துதான் 'நாம் தமிழர்' சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது.

அல்ஸ்றர் பகுதியை மீட்கமுடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday 16 January 2016

காளைகளுடன் ஒரு புகைப்படம்

நெஞ்சு நிமிர்ந்து நிக்கிறத பாருங்க
என்னா பெருமை?!

காளைங்கடா! விவசாயிடா!
:)

குருதியில் நனைந்த குமரி -12

குருதியில் நனைந்த குமரி -12

1954 ஆகஸ்ட் 15
மாலை
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

திருநெல்வேலி எம்.பி தாணுப்பிள்ளையும் அப்துல் ரசாக்கும் சென்னை செல்லும் தொடர்வண்டி அருகே நின்றுகொண்டு இருந்தனர்.

"ரசாக் அவர்களே!
முதல்வகுப்பில் பயணச்சீட்டு போட்டுள்ளேன்.
சென்னையில் என் நண்பர் வீட்டிற்குச் சென்றடைந்ததும் எனக்கு தகவல் தாருங்கள்"

"சரி ஐயா! முதல்வகுப்பில் பெரிய மனிதர்கள் யாராவது வருவார்கள்.
அப்படி வந்தால் நலமாக இருக்கும்"

"கட்டாயம் ஒருவரேனும் கிடைப்பார்கள்.
சரி ஐயா வண்டி கிளம்புகிறது.
நீங்கள் தினமும் மாலை என்னை தொலைபேசியில் அழையுங்கள்"

"சரி தினமும் அழைக்கிறேன்.
நீங்கள் குமரிக்கு காங்கிரஸ் குழு நேரில் செல்வதை துரிதமாக நிறைவேற்றுங்கள்"

வண்டி கிளம்பியது.

மதுரையில் பி.டி.ராஜன் ஏறினார்.

அப்துல் ரசாக் அவரைக் கண்டதும் உடனே சென்று பேசினார்

"ஐயா வணக்கம்"

"யாரது அப்துல் ராசாக்கா?
ஐயா என்ன இந்தப் பக்கம்?"

"கேரளாவிலிருந்து தப்பித்து வந்துள்ளேன்"

"ஓ ஆமாம். கேள்விப்பட்டேன்.
கேட்கவே வருத்தமாக உள்ளது.
இன்று காலை கூட செய்தித்தாளில் வந்துள்ளதே.
காங்கிரஸ் குழு அங்கே பார்வையிட செல்வதாக"

"ஆமாம் ஐயா, தாணுப்பிள்ளை அவர்களின் ஆதரவால் நடந்தது"

"சென்னை எதற்கு செல்கிறீர்கள் காமராசரைப் பார்க்கவா?"

"ஆமாம். காமராசரைப் பார்த்துவிட்டு அப்படியே டெல்லி போகிறேன்:

"அப்படியே ராஜாஜியையும் பார்த்துவிடுங்கள்"

"ராஜாஜி எங்களுக்கு உதவுவாரா?
அவர் ஒரு பிராமணர்,
இந்தி திணிப்புக்குத் துணைபோனவர்,
பிறந்த சாதிக்கான தொழிலைச் செய்யும் வகையில் குலக் கல்வித்திட்டம் வகுத்தவர்,
என்று தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு உள்ளதே?!"

"அவர் ஒரு புரிந்துகொள்ளமுடியாத மனிதர்.
ஆனால் தமிழ் பிராமணர் என்றவகையில் இனவுணர்வு உண்டு"

"ஆம். எல்லைப் போராட்டத்தில் அவர் ஆதரவாக இருந்ததை ம.பொ.சி குறிப்பிடுவார்.
ஆனால் அவர் பதவியில் இல்லையே?!
அவரைப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்குமா?"

"ஆச்சாரியாரைப் போல ஒரு பழுத்த அரசியல்வாதி வேறு யார் உண்டு?
நீங்கள் போய்ப் பாருங்கள்.
பிறகு புரியும்.
சரி இரவாகிவிட்டது.
காலை சென்னையில் இறங்கி என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள்"

"இல்லை. நண்பர் ஒருவர் வீட்டில் தங்குவதாக வாக்களித்துவிட்டேன்"

"சரி நான் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் தங்கியிருப்பேன்.
நாளை வந்து என்னைப் பாருங்கள்"
--------------------------------------------------
அதே ஆகஸ்ட் 15 1954 மதியம்.

இராஜாஜியின் வீட்டுத் தொலைபேசி அழைத்தது.

ராஜாஜியின் நண்பரும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்வருமான மேகநாதன்தான் அழைத்திருந்தார்.

"ஹலோ, ராஜா"

"சொல்லு மேகநாதா"

"என்னப்பா இப்படி ஆகிவிட்டதே?!
கேரளாவில் நம் மக்களை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளுபவர்கள் என்ன செய்துகொண்டு  இருக்கிறீர்கள்?"

"நான் என்னப்பா பண்ணமுடியும்?
காமராசுதான் நம்மை ஒதுக்கிட்டானே?"

"அதுக்காக நீ சும்மாயிருக்கலாமா?
நீ சொன்னா கேக்கமாட்டானா?"

"நான் போய் அவனிடம் கெஞ்சவேண்டுமா?"

"சரிப்பா, நீ ஒண்ணும் கெஞ்சவேண்டாம்.
நானே தனியாக நேரில் போய் நேசமணியைப் பார்க்கிறேன்.
ஏதேது உன்னை ஆரியன் என்றவன் பேச்செல்லாம் சரிதான் போலிருக்கிறதே?!"

"மேகநாதா கோபப்படாதே.
எனக்கு மட்டும் வேதனை இல்லாமல் இல்லை.
நீ நேரில் போய் நேசமணியிடம் நடந்ததை ஒரு அறிக்கையாக எழுதி வாங்கிவிட்டு வா.
நான் பார்த்துக்கொள்கிறேன்"

கூறிவிட்டு சட்ட புத்தகங்களை புரட்டி தீவிரமாக ஆராயத் துவங்கினார் ராஜாஜி.
-------------------------------------------
1954 ஆகஸ்ட் 16
மதியம்.
காஸ்மோ பாலிட்டன் கிளப்.
சென்னை.

சொன்னதுபோலவே அப்துல் ரசாக் பி.டி.ராஜனைச் சந்தித்தார்.
மலையாள வெறியர்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை தொடக்கத்திலிருந்து தற்காலம் வரை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

தன் மகன் பழனிவேல் ராஜன் மற்றும் தனது குடும்ப வழக்கறிஞர் சந்தோசம் ஆகியோருடன் பி.டி.ராசன் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

சந்தோசம் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"ஐயா ரசாக் அவர்களே!
உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பழனி! இனி எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு குமரிப் போராட்டத்தில் இறங்கிவிடு.
சந்தோசம்! இனி இவர்களுடைய வழக்குகளை நீங்கள் முன்னின்று நடத்தவேண்டும்.
இந்த பிரச்சனை முடிந்த பிறகு என்னிடம் நீங்கள் வந்தால் போதும்"
-----------------------------------
பட்டம் தாணுப்பிள்ளை கோபமாக அமர்ந்திருந்தார்.
திருநெல்வேலி காங்கிரஸ் குழு நேரில் வருவதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் நிலைகொள்ளாமல் தவித்தார்.

காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டரை அழைத்தார்.

"எப்படி இந்த ரசாக் தப்பித்து போனான்?"

"ஐயா அதுவந்து..."

"போதுமையா, உமது விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
சரி. பாண்டிப் பகுதிகளில் காவலர்களைக் குறைக்கவேண்டாம்.
ஆயுதங்களை மட்டும் உள்ளேவைத்துப் பூட்டிவிடுங்கள்.
தூக்கிக்கொண்டு திரியவேண்டாம்.
மக்களை நடமாடவிடுங்கள்.
அந்த குழு வந்துபோகும்வரை இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இனி இப்படி கோட்டைவிடாதீர்கள்.
போய்த் தொலையுங்களையா"

அடுத்த ஒருமணிநேரத்தில் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறைந்தது.
மக்கள் நடமாடலாம் என்று அறிவித்தனர்.
கடைக்காரர்கள் கடைதிறந்தனர்.
மூன்றுநாட்களாக பசியால் வாடிய மக்கள்
ஓடோடிச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவந்தனர்.
நோயாளிகள் மருத்துவமனை சென்றனர்.
மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின.

ஆனால் இயல்புநிலைதான் திரும்பவில்லை.

(தொடரும்)
--------------------------------------
குருதியில் நனைந்த குமரி -11
https://m.facebook.com/photo.php?fbid=648488261921497&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56